கனடாவில் கடந்த ஜூன் மாதம் சீக்கிய மத தலைவரும் காலிஸ்தான் ஆதரவு நிலைபாடு கொண்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் சீனாவின் பங்கு இருப்பதாக சீனானை பூர்வீகமாக கொண்டு, அமெரிக்காவில் வசித்துவரும் பத்திரிகையாளர் ஜெனிஃபர் செங் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக இந்தியா கனடா உறவில் சிக்கலை ஏற்படுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் பிறந்த, மனித உரிமை ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளரான ஜெனிஃபர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். 56 வயதாகும் இவர் "ஃபாலன் காங்" (Falun Gong) எனப்படும் மத இயக்கத்தின் மூலம் பிரபலமானவர். இந்தியா- கனடா
ஜெனிஃபர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இக்னீஷன் பிளான்" திட்டத்தின் ஒரு பகுதியாக ஹரிதீப் சிங் கொலை செய்யப்பட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவது தான் இதன் நோக்கம் என்கிறார்.
"சீக்கிய மத தலைவரான ஹர்தீப் சிங் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த அதிர்ச்சியான தகவல்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியில்(CCP) இருந்து வெளியாகி உள்ளன. சி.சி.பி ஏஜென்டுகளால் இந்த படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது" என்கிறார்.
ஹர்தீப் சிங் இந்திய அரசாங்க ஏஜென்டுகளால் கொலை செய்யப்பட்டார் என்பதற்கு தங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறிவந்த நிலையில், ஜெனிபரின் கருத்து தற்போது இந்திய, கனடா நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
```இக்னீஷன் பிளானின்' (Igination plan) ஒரு பகுதியாக ஹர்தீப் சிங்கை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டனர். ஜூன் 18-ம் தேதி கனடா வந்த ஏஜென்ட்கள் ஹர்தீப்பை கண்காணித்து சைலன்ஸர் தொழில்நுட்பம் கொண்ட துப்பாக்கியால் கொலை செய்துவிட்டனர். பிறகு தடயங்களை அழிப்பதற்காக அவரது காரின் டேஷ்போர்டு கேமராவையும் அழித்துவிட்டனர். வேலை முடிந்ததும் மறுநாள் நாடு திரும்பி விட்டனர்" என்று சீனாவின் திட்டத்தை விளக்குகிறார், ஜெனிஃபர்.சீனா
மேலும் கொலையில் ஈடுபட்டவர்கள், இந்தியர்கள் ஆங்கிலம் பேசுவது போன்ற வகையில் பேச பயிற்சி எடுத்துள்ளார்கள். இதன் மூலம் இந்தியர்கள் தான் இந்த கொலையில் ஈடுபட்டனர் என நம்பவைக்கப்பட்டுள்ளது என்கிறார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இருக்கும் உறவை கெடுப்பது தான் சீனாவின் திட்டம் என்ற ஜெனீஃபரின் குற்றச்சாட்டுக்கு சீனாவிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SxB9N4
Monday, 9 October 2023
Home »
» ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை; `சீனா தான் காரணமா?’ - விவரிக்கும் சீன வம்சாவளி பெண் பத்திரிகையாளர்







0 comments:
Post a Comment