இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் விவேக் ராமசாமி. மல்டி மில்லியனர் தொழிலதிபரான இவர், 2024-ல் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராகக் களத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருகிறார்.விவேக் ராமசாமி திண்டுக்கல் பொண்ணு, அமெரிக்க மாப்பிள்ளை... கொடைக்கானலில் மும்மதப்படி திருமணம்!
இவருக்கு அபூர்வா டி ராமசாமி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராமசாமியின் குழந்தைகளை கவனித்துக் கொள்ள குழந்தையைப் பராமரிக்கும் ஆள்கள் (Nanny) தேவை எனவும் இவர்களுக்கான சம்பளம் 1,00,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 80 லட்சம்) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு ஆள்சேர்ப்பு பணியாளர் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதில், ``வாரத்திற்கு 84 முதல் 96 மணி நேர வேலை. அதனைத் தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை.
ஹவுஸ் கீப்பீங் ஆள்கள், செக்யூரிட்டி, சமையல்காரர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து குழந்தைகளுக்குத் தேவையானவற்றை தினசரி தடையில்லாமல் வழங்க வேண்டும். அதோடு குழந்தைகள் விளையாடும் பகுதிகள், பொம்மைகள், உடைகள் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்ள வேண்டும். உயர்தர குடும்பத்தில் சேர இது ஒரு விதிவிலக்கான வாய்ப்பு'' என்று வெளியிடப்பட்டுள்ளது. விவேக் ராமசாமியின் குடும்பம்!ஐடி துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ZOHO ஶ்ரீதர் வேம்பு தந்த எச்சரிக்கை!
இந்த வேலை யாருடைய வீட்டில் என்று வாடிக்கையாளரின் பெயர் விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், விவேக் ராமசாமி குடும்பத்தில் இருந்து தான் இந்த வேலை வாய்ப்பு வந்திருக்கிறது என்று பல தளங்களும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். குழந்தை பராமரிப்பாளருக்கு 80 லட்ச ரூபாய் சம்பளம் என வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை பலரும் வியப்பாகப் பார்த்து வருகின்றனர்.
http://dlvr.it/Swz7dw
Wednesday, 4 October 2023
Home »
» `குழந்தையை பராமரிக்க 80 லட்சம் சம்பளம்' விவேக் ராமசாமி வீட்டில் குவியும் விண்ணப்பம்..!







0 comments:
Post a Comment