நியூஸ்கிளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்றுச் செயல்பட்டு வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நிறுவனத்தில் சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க நாளிதழான ‘தி நியூயார்க் டைம்ஸ்', நியூஸ் கிளிக் நிறுவனத்துக்குச் சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை நியூஸ்கிளிக் நிறுவனம் மீதான தனது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி, வழக்கு பதிவு செய்தது.நியூஸ் கிளிக்:
நியூஸ்கிளிக் நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்கயாஷ்தாவுக்குச் சொந்தமான ரூ.4.5 கோடி மதிப்பிலான வீட்டையும் ரூ.41 லட்சம் நிரந்தர வைப்புத் தொகையையும் அமலாக்கத்துறை முடக்கியது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தது. மேலும், 2018 முதல் 2021 வரையிலான மூன்றாண்டு காலகட்டத்தில் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களிடமிருந்து நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு ரூ.86 கோடி நிதியுதவி வந்திருப்பதாகவும், நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனங்களை ஆய்வு செய்கையில், சீன ஆதரவாளர் நெவில் சிங்கத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இதை மறுத்த நியூஸ் கிளிக்கின் ஆசிரியர் பிரபீர் புரகாயஸ்தா, "மத்திய அரசின் இந்த நடவடிக்கை செய்தி இணையதளத்திற்கு எதிரான ஒடுக்குமுறை. பல்வேறு ஏஜென்சிகளின் இந்த விசாரணைகள், எங்கள் நிறுவனம் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள், நியூஸ் கிளிக் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்கும் முயற்சி. இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் நடவடிக்கை" எனக் குறிப்பிட்டார்.சோதனை
இந்த நிலையில், சீனாவிடமிருந்து நிதியுதவி பெறுவதாக நியூஸ் போர்ட்டலுடன் தொடர்பில் இருக்கும் நியூஸ் கிளிக் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் வீட்டில் இன்று காலை, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் சில ஊடகவியலாளர்கள் விசாரணைக்காகக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. டெல்லி காவல்துறை புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்களா என்பது குறித்து இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. இந்தச் சோதனைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் பகிரப்படும் எனக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
நியூஸ் எம்பஸி: கலிஃபோர்னியாவில் சாதிப் பாகுபாடு மசோதா!
http://dlvr.it/SwwGYX
Monday, 2 October 2023
Home »
» சீனாவிடமிருந்து நிதியுதவி பெற்றதாக குற்றச்சாட்டு... ஊடகவியலாளர்கள் வீட்டில் அதிகாரிகள் சோதனை!






0 comments:
Post a Comment