Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Tuesday, 10 October 2023

சீன தூதரகத்தின்மீது காரை மோதிய மர்ம நபர்; போலீஸ் சுட்டதில் பலி... பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?

சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் சீன தூதரகத்தின்மீது காரை மோதச் செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்த நபர் உயிரிழந்துவிட்டார். சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் சீன தூதரகத்தில் விசா வேண்டி, ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். அந்த நேரத்தில் திடீரென நீல நிற ஹோண்டா செடான் காரை வேகமாக இயக்கிய மர்ம நபர் ஒருவர், சீன தூதரகத்தின் விசா அலுவலகத்தின்மீது மோதி நிறுத்தினார். அதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, காரிலிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட கீழிறங்கிய அந்த நபர், ``சீன கம்யூனிஸ்ட் கட்சி எங்கே?" எனக் கூச்சலிட்டிருக்கிறார்.

உடனடியாக அந்த நபர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவரைக் கைதுசெய்த போலீஸார், காயமடைந்த அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முயன்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டார். சீன தூதரகத்தின் விசா அலுவலகம்

சீன தூதரக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்த தகவல் இன்னும் போலீஸ் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அந்த அலுவலகத்தில் விசா வாங்குவதற்காக வந்திருந்த மாணவர் ஒருவர் பார்த்து, அதிர்ச்சியடைந்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அந்த மாணவர், ``இது போன்ற சம்பவங்களை திரைப்படங்களிலேயே பார்த்திருக்கிறேன். முதன்முறையாக நேரில் பார்த்ததும், திகைத்துப் போய்விட்டேன். அந்த நபர் என்னைப் பார்த்தார், ஆயுதங்கள் வைத்திருப்பார் என்று நான் பயந்துவிட்டேன். மரணம்

அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை. போலீஸார் வந்தவுடன் துப்பாக்கிச்சூடு நடத்தும் சத்தம் கேட்டது" எனக் கூறினார்.

சீன தூதரகம்மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்படுவது இதுவொன்றும் முதல் தடவை அல்ல. 2014-ல் ஒருவர் பெட்ரோல் (Gasoline) எடுத்து வந்து தூதரகத்தின் வாயில் முன்பு ஊற்றியது, 2008-ல் கட்டடத்தைக் கொளுத்த முயன்றது போன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டுவந்து, சீனாவின் ஜிஞ்சினாங் மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த தூதரகத்துக்கு வெளியே அமைதிப் பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk

வரைபடத்தின் மூலம் அருணாச்சலப் பிரதேசத்தை வளைக்கும் சீனா! - இந்தியாவின் ரியாக்‌ஷனும் பின்னணியும்!


http://dlvr.it/SxF0D3

0 comments:

Post a Comment