விமான பயணம் என்பது பலருக்கும் இன்றளவும் கனவு தான். விமானத்தில் ஒருமுறையாவது ஏறி விட வேண்டும்; தனது அம்மா, அப்பா என நெருக்கமான உறவுகளை விமானத்தில் கூட்டிச் சென்று விட வேண்டும் என யோசிக்காதவர்கள் இல்லை. விமானத்தில் பயணித்த மொமெண்ட்களை இன்றளவும் நினைவில் அசைபோடுபவர்களும் உண்டு.
விமானத்தில் செல்வதே கனவாக இருக்கும் போது, விமானத்தை வாங்குவதெல்லாம் எட்டாக் கனி தான். பணம் இருந்தால் சாத்தியமாகலாம்.
ஆனால் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள `கேமரூன் ஏர்பார்க்' என்ற நகரத்தில் வசிப்பவர்கள் அனைவரும் சொந்தமாக விமானம் வைத்திருக்கின்றனர். கேட்பதற்கே ஆச்சர்யமாக இருந்தாலும் இதுவே நிஜம்.Flight (Representational Image)`உப்பு… அளவு அளவா இருக்கணும்! மீறினா...?’ - எச்சரிக்கும் மருத்துவர்
கேமரூன் ஏர்பார்க்கின் வீடியோ காட்சிகளை யூடியூபர் டென்னிஸ் நிக்சன் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
கேமரூன் ஏர்பார்க் 1963-ல் கட்டப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் மொத்தமாக 124 வீடுகள் இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலகட்டத்தில் பல விமான நிலையங்கள் மாற்றப்படாமல் அப்படியே விடப்பட்டன.
இந்த நேரத்தில்தான், இந்த விமான நிலையங்களை ஓய்வுபெற்ற ராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமானப் பூங்காவாக மேம்படுத்த வேண்டும் என விமானப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
விமானங்களை நிறுத்துவதற்காகவே பிரத்யேகமாக இந்த இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானங்களைப் பழுது பார்ப்பதற்கான கட்டிடங்களும் (hangars) இங்கு இருக்கின்றன. ஏனெனில் இங்குள்ள மக்கள் வேலை மற்றும் வணிகத்திற்காக தங்களது ஆடம்பர விமானங்களை உபயோகிக்கின்றனர்.கேமரூன் ஏர்பார்க் ``அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆள் இல்லா விமானங்களை இயக்க பயிற்சி!’’ - செங்கோட்டையன்
இது முற்றிலும் தனியாருக்குச் சொந்தமானது என்பதால் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் பிறரால் இங்குள்ள சொத்துகளை உபயோகிக்க முடியாது. அதுமட்டுமில்லாமல், விமானி உரிமம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான அறிவு இருப்பவர்களுக்கு மட்டுமே விமானத்தை இயக்குவதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது.
இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் விமானிகளாகவும், ஓய்வுபெற்ற ராணுவ விமானிகளாகவும் இருக்கின்றனர்.
கேமரூன் ஏர்பார்க் போலவே, ஃபுளோரிடாவில் ஸ்ப்ரூஸ் க்ரீக் (Spruce Creek) என்று அழைக்கப்படும் மற்றொரு விமான நிலையமும் உள்ளது. இந்த ஏர்பார்க் பூங்காவில் தனியார் ஜெட் முதல் வரலாற்று விமானங்கள் வரை மொத்தமாக 650 விமானங்கள் இருக்கின்றன.
இங்கு 5,000 மக்கள் வசித்து வருகின்றனர். 1,300 வீடுகளும், விமானத்தை நிறுத்துவதற்கும், பழுது பார்ப்பதற்கும் என 700 இடங்களும் இருக்கின்றன. அமெரிக்காவில் மொத்தமாக 426 குடியிருப்பு விமான நிலையங்கள் வரை உள்ளன.
சரி நீங்கள் விமானத்தில் பயணித்து இருக்கிறீர்களா? உங்களது அனுபவத்தை பகிருங்கள்!
http://dlvr.it/SwqzPh
Sunday, 1 October 2023
Home »
» `ஒவ்வொரு வீட்டிலும் விமானம் இருக்கு' வேலைக்கு கூட விமானத்தில் செல்லும் மக்கள்... எங்கு தெரியுமா?!







0 comments:
Post a Comment