Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Friday, 6 October 2023

காதலியின் கண்ணெதிரே கொலைசெய்யப்பட்ட சமூக ஆர்வலர்; அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

இடதுசாரி சிந்தனையாளரும், சமுக ஆர்வலருமான ரியான் கார்சன் (Ryan Carson), அமெரிக்காவில் மர்ம நபரால் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும், பேருந்து நிறுத்தத்தில் தன் காதலியுடன் நடந்துகொண்டிருந்தபோது ரியான் கார்சன் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். நியூயார்க்கிலுள்ள கிரவுன் ஹைட்ஸ் தெருவில் நடந்த இந்தச் சம்பவம், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.அமெரிக்கா

தற்போது, அந்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன. அந்த வீடியோவில், ரியான் கார்சனும், அவரின் காதலியும் அதிகாலை 4 மணியளவில் பேருந்து நிறுத்த பெஞ்ச்சில் அமர்ந்திருந்தனர். பின்னர் இருவரும் எழுந்து நடக்க ஆரம்பித்தனர். அப்போது அவர்களுக்கு முன்னால் நடந்து சென்ற ஒரு நபர் காரணமே இல்லாமல், அருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர்களை உதைப்பதை ரியான் கார்சன் பார்த்தார். பின்னர், ஆக்ரோஷமாக இருவரையும் நோக்கி வந்த அந்த மர்ம நபர், ரியான் கார்சனிடம் இங்கு என்ன பார்க்கிறாய் என்றபடி கோபத்துடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரியான் கார்சனின் மார்பில் பலமுறை குத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டான்.

அதையடுத்து, உடனடியாக அருகிலுள்ள கிங்ஸ் கவுன்ட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரியான் கார்சன், கத்தி இதயத்தை துளைத்த காரணத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கறுப்பு உடையணிந்திருந்த அந்த மர்ம நபரின் புகைப்படங்கள் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டு, நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலும், ரியான் கார்சனின் நண்பர்கள், மாணவர்கள், உறவினர்கள் எனப் பலரும், அவருக்கு இரங்கல் தெரிவித்து, கொலையை முறையாக விசாரிக்குமாறு காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துவந்தனர்.அமெரிக்கா

இந்த நிலையில், குற்றம்சாட்டப்படும் நபர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு காரில் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் ட்விட்டரில் பரவிவருகின்றன.

நியூயார்க் பொது ஆராய்ச்சிக்குழுவின் பிரசார அமைப்பாளராகவும் பணியாற்றிய ரியான் கார்சன், மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்கா: திருடியதாக குற்றச்சாட்டு; போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட கறுப்பின கர்ப்பிணி- என்ன நடந்தது?


http://dlvr.it/Sx514W

0 comments:

Post a Comment