வேற்றுகிரக வாசிகள் ஏலியன்கள் குறித்தான ஆய்வுகள் நீண்டு கொண்டே தான் இருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏலியன்களையும், பறக்கும் தட்டுகளையும் பார்த்ததாகச் சிலர் சொல்வதுண்டு.
இந்த நிலையில் அமெரிக்காவில் டோர் பெல் கேமராவிற்கு பெயர் பெற்ற ரிங் (Ring) எனும் நிறுவனம் வேற்றுகிரகவாசிகள் வாழ்வதற்கான ஆதாரத்தைப் படம்பிடிப்பவர்களுக்கு பெரிய பரிசுத் தொகையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. Aliensஐ.நா பொதுக்குழுவில் உரையாற்றிய முதல் பட்டியலினப் பெண், யார் இந்த பீனா ஜான்சன்?!
இந்தப் போட்டியின் முக்கியமான விஷயமே வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத்தொகை தான். ஏலியன்களை படம்பிடித்துக் காட்டும் நபர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி குறித்து ரிங் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``நெபுலாவின் சில இடங்களில் அடையாளம் தெரியாத உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் இருப்பதாக சென்சார்கள் குறிப்பிட்டுள்ளன.
இதனை நீங்கள் விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உங்கள் கதவுக்கு முன் வேற்று கிரக வாசிகளின் செயல்பாடுகள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளது.
எனவே வேற்று கிரகவாசிகள் உங்கள் நடைபாதையில் நடந்து செல்லும் அல்லது பறக்கும் வீடியோவாக இருந்தாலும் அல்லது வீட்டின் கொல்லைப்புறத்தில் அசாதாரணமான நடத்தையை வெளிப்படுத்தும் அடையாளம் காண முடியாத வடிவங்கள் தென்பட்டாலும், அவற்றைப் படம்பிடித்து சிறந்த காட்சிகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
நவம்பர் 3-ம் தேதி வரை வீடியோ காட்சிகளை சமர்ப்பிக்கலாம். இந்தக் காட்சிகள் ஒரு வானிலை ஆய்வாளர் மற்றும் வானியல் நிபுணரால் மதிப்பாய்வு செய்யப்படும்.
உண்மையான காட்சிகளைக் கொடுக்கும் இரண்டு வெற்றியாளர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்தத் தொகை இரண்டு தசாப்தங்களுக்கு 50,000 அமெரிக்க டாலர்கள் என தவணையில் வழங்கப்படும்.டாலர்`அவர்கள் வருவது நமக்கு நல்லதல்ல!' - ஏலியன் சிக்னல்களும், தொடர் குழப்பங்களும்!
அதோடு வீட்டில் தயாரிக்கப்பட்ட வேற்றுகிரகம் தொடர்பான கிரியேட்டிவிட்டியும் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக ஏலியன் ஆடைகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலம் மற்றும் ரிங் சாதனத்தைக் கண்டு ஈர்க்கப்படும் வேற்று கிரக உயிரிகள் போன்றவை மிகவும் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்தப் படைப்புகள் நகைச்சுவை மற்றும் ஈடுபாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்தப் போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் ரிங் கேமரா வைத்திருக்கும் அமெரிக்க குடியிருப்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்’’ என்று குறிப்பிட்டுள்ளது. ஏலியன்களை படமெடுத்துக் காட்டும் இந்த கேம் புதியதாக இருப்பதால் கவனம் பெற்று வருகிறது...
நீங்கள் ஏலியன்களை பார்த்திருக்கிறீர்களா?!
http://dlvr.it/SxDbrt
Tuesday, 10 October 2023
Home »
» ஏலியன்கள் வீடியோக்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு... போட்டியில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?!







0 comments:
Post a Comment