பாலஸ்தீனர்கள் வசிக்கும் காஸா எல்லையை இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கிகள் சுற்றிவளைத்திருக்கின்றன. கடந்த ஒரு வார காலமாக விமானங்கள் மூலமாக குண்டுகளை வீசி காஸாவிலுள்ள கட்டங்களைத் தகர்த்து, ஏராளமானோரை கொன்றுகுவித்த இஸ்ரேல், தற்போது பாலஸ்தீனத்தின் மீது போரைத் தொடங்குவது குறித்து டெல் அவிவ்வில் அமைந்திருக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமையகத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் ஆலோசனை நடத்தியது. பெஞ்சமின் நெதன்யாகு
அந்தக் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பு விரைவில் முற்றிலுமாகத் தீர்த்துக்கட்டப்படும் என்றார். இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று பல நாடுகளின் தலைவர்கள் கூறிவரும் நிலையில், அந்தக் கோரிக்கையை இஸ்ரேல் ராணுவம் நிராகரித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில், அமெரிக்காவின் போர் கப்பல் தற்போது காஸாவுக்கு அருகே நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் கப்பலை அனுப்புவதற்கு இங்கிலாந்து ஆலோசித்துவருகிறது. இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இரண்டாவது அமெரிக்க போர்க்கப்பல் இஸ்ரேல் கடல் பகுதிக்கு விரைகிறது.இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்
இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளைக் குறிவைத்து லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவருகிறார்கள். வடக்கு எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. ‘வடக்கு காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மிகப்பெரிய சவால்களைச் சந்திக்க நேரிடும். போர் நடப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’ என்று கூறியிருக்கிறார் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமீர்.
மத்திய கிழக்கில் முகாமிட்டு இந்த விவகாரம் குறித்து அரபு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன். சவுதி அரேபிய இளவரசர் சல்மானுடனான சந்திப்பு குறித்து கூறிய ஆண்டனி பிளிங்கன், ‘சவுதி இளவரசருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்களிடம் சிக்கியிருக்கும் பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்க வேண்டும்’ என்றார்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் | போர் பதற்றம்
இந்த நேரத்தில், ‘போரில் அமெரிக்கா நேரடியாகப் பங்கேற்காது. இந்தப் பிராந்தியத்தில் ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் மறைமுகப் போர் நடத்துவதை முறியடிப்பதற்காகவே அமெரிக்காவின் கடற்படையின் சக்திவாய்ந்த கப்பலை நிறுத்தியிருக்கிறோம்’ என்று அமெரிக்க ராணுவம் கூறியிருக்கிறது. தெலங்கானா: பிஆர்எஸ் கட்சியின் `தாராள’ வாக்குறுதிகள்! - சாத்தியம் தானா?!
தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு போரை விரிவுபடுத்துவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது. தங்கள் நாட்டின் சுற்றுவட்டாரப் பகுதிகளை உன்னிப்பாகக் கண்காணித்துவருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தாங்கள் வலுவாக இருப்பதாகவும் கூறுகிறார், இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளரான டேனியல் ஹகரி. இதனால், மற்ற பகுதிகளுக்கும் போர் விரிவடையும் என்ற அச்சம் அந்தப் பிராந்தியத்தில் எழுந்திருக்கிறது.காசா மீது தாக்குதல்
ஹமாஸ் படையை கூண்டோடு அழிக்கப்போவதாகக் கூறிவரும் இஸ்ரேல் ராணுவம் காஸாவில் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்களையும் கொன்றுகுவித்துவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது, இஸ்ரேலின் பீரங்கிகளால் காஸா சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லையென்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தச் சூழலில், முப்படைத் தாக்குதலை திட்டமிட்டப்படி இஸ்ரேல் தொடங்கினால் பெரும் பாதிப்புகள் ஏற்படும். மத்திய கிழக்கு பகுதிகளுக்கும் போர் விரிவடைவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஈரான் உள்ளிட்ட பாலஸ்தீன ஆதரவு நாடுகள் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க களத்தில் இறங்கும். ஏற்கெனவே ஹமாஸ் படையின் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், இன்னும் மோசமான பாதிப்புகளை இஸ்ரேல் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள். போர் என்று ஒன்று தொடங்கினால், இழப்பு எல்லா தரப்புக்கும் தான்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SxY7Qb
Tuesday, 17 October 2023
Home »
» முப்படை தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல்... அணிவகுக்கும் உலக நாடுகள்! - நடப்பது என்ன?!






0 comments:
Post a Comment