தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடந்து வருகிறது. இதில், 80 சதவிகிதம் தீப்பெட்டிகள், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 320 பகுதி இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 2,000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர். பரமசிவம் - தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர்
இதில், 90 சதவிகிதம் பேர், பெண்களே பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள், இந்தியாவின் பல மாநிலங்கள் மட்டுமல்லாமல், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மின் பயன்பாடு சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், தற்போது தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதில், ஏற்கெனவே மூலப்பொருள்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட நிலையில், கள்ளச்சந்தையில் சீன லைட்ட்ரகள் விற்பனை செய்யப்படுவதால் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேதனையுடன் கூறினர். இது குறித்து, நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான பரமசிவத்திடம் பேசினோம், ``மோடி அரசு பதவியேற்றதும் சிறுதொழில்கள் பட்டியலிலிருந்து தீப்பெட்டித் தொழிலை நீக்கியதுதான் எங்களுக்கு முதல் பாதிப்பு. தீப்பெட்டி உற்பத்திக்கு விதிக்கப்பட்ட 18 சதவிகித ஜி.எஸ்.டியை, 5 சதவிகிதமாகக் குறைக்கணும்னு அஞ்சு வருஷமாப் போராடியும், 12 சதவிகிதமாகத்தான் குறைக்கப்பட்டிருக்கு. தீப்பெட்டி உற்பத்தி
தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களான அட்டை, பேப்பர், மெழுகு, சிவப்பு பாஸ்பரஸ், பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்தது. இதனால்தான், ஒரு ருபாய்க்கு விற்பனை செஞ்ச ஒரு தீப்பெட்டியோட விலையை 14 வருஷத்துக்குப் பிறகு, 2021 டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து ரெண்டு ரூபாயாக விலையை உயர்த்தினோம். அதன் பிறகும் மூலப்பொருள்களின் விலை உயர்வு அதிகரித்தது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 8 முறையாக மொத்தம், 40 சதவிகிதம் வரையிலும் விலை அதிகரித்திருக்கிறது.
இதனால், 600 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு பண்டலின் விலையை ரூ.300-லிருந்து ரூ.350-ஆக உயர்த்தினோம். ஆனால், வியாபாரிகள் இந்த விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், ஆர்டர்களும் குறைந்துவிட்டன. தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான எல்லா மூலப்பொருள்களையும் தமிழக அரசின் ’சிட்கோ’ மூலம் மானிய விலையில் தர வேண்டுமென பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். முந்தைய அ.தி.மு.க அரசும் கண்டுகொள்ளவில்லை. தற்போதைய தி.மு.க அரசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீப்பெட்டி உற்பத்தி
இந்த நிலைமையில் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியால், தீப்பெட்டி விற்பனை மந்தமாகி தொழிலுக்கே ஆபத்தாக அமைந்தது. சீன லைட்டர்களின் இறக்குமதியை தடைசெய்ய வேண்டும் என, பலகட்டப் போராட்டம் நடத்திய பிறகுதான், பயன்படுத்துவதற்கு தயார் நிலையிலுள்ள லைட்டர்களின் இறக்குமதிக்கு சமீபத்தில் மத்திய அரசு தடை விதித்தது. அந்த தடை அறிவிப்பால் எங்களுக்கு கிடைச்ச மகிழ்ச்சி கொஞ்ச நாள்கூட நீடிக்கவில்லை.
’பகுதியளவு முடிக்கப்பட்ட தயாரிப்பு’ என்ற வகையில், நேபாளம் வழியாகச் சட்டவிரோதமாக தயார் நிலை லைட்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டு, கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்குப் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 20 தீப்பெட்டிகளோட பயன்பாட்டினை ஒரு லைட்டர் ஈடுகட்டுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு மாசத்துல ரூ.500 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தியானது. சீன லைட்டர்களின் சட்டவிரோத இறக்குமதி மற்றும் கள்ளச்சந்தை விற்பனையால் இப்போ மூணு மாசமா லைட்டர்களால 100 கோடி ரூபாய் வரை விற்பனை மந்தம் ஆகிடுச்சு. தீப்பெட்டி உற்பத்தி
புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல், பெண்களும் வீட்டு அடுப்படிகள்ல பயன்படுத்துற அளவுக்கு வளர்ந்திடுச்சு. அந்த லைட்டர்கள்ல காஸ் அடைக்கப்பட்டிருக்குறதுனால, பெரும் தீ விபத்து போன்ற அபாயத்தை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் புரிவதில்லை. இந்த லைட்டர்கள், பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருப்பதால் பயன்படுத்தப்பட்டு தூக்கிவீசப்படும் லைட்டர்கள் மண்ணில் மட்காது. இது போன்ற பல்வேறு பிரச்னைகளால் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கள்ளச்சந்தையில் சீன லைட்டர்கள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
தீப்பெட்டி தொழிலில் தீ வைக்கும் சீன லைட்டர்! - கவலையில் தொழிலாளர்கள்
http://dlvr.it/SxHZJP
Wednesday, 11 October 2023
Home »
» `கள்ளச்சந்தையில் சீன லைட்டர்கள் விற்பனை!' - தீப்பெட்டி தொழில் பாதிப்பால் கலங்கும் உற்பத்தியாளர்கள்







0 comments:
Post a Comment