சீனாவின் மஞ்சள் ஆறு அருகே சீனக் கடற்படையால், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கப்பல்களுக்கு வைக்கப்பட்ட பொறியில், அந்த நாட்டின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதில், சீன வீரர்கள் (கேப்டன், மாலுமி, அதிகாரிகள் உட்பட) 55 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது தொடர்பாக, சீன பாதுகாப்புத்துறை தரப்பிலிருந்து எந்தவிதத் தகவலும் வெளியாகாத நிலையில், சீன வீரர்கள் இத்தகைய சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாக பிரிட்டிஷ் உளவுத்துறை அறிக்கையிலிருந்து கசிந்த தகவலை, இங்கிலாந்தைத் தளமாகக்கொண்ட `தி டைம்ஸ் பத்திரிகை' நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
சீனா இத்தகைய கூற்றைத் திட்டவட்டமாக மறுத்து, தங்கள் நீர்மூழ்கிக் கப்பல் அப்படியானதொரு விபத்தில் சிக்கி, அதில் யாரும் உயிரிழக்கவில்லை என்கிறது. சீனா
இருப்பினும், பிரிட்டிஷ் உளவுத்துறையிலிருந்து கசிந்த அறிக்கையில், 55 பேர் உயிரிழந்தது, சீனாவின் பி.எல்.ஏ கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் 093-ல் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக, செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஷாங்காய்க்கு வடக்கே ஷாண்டோங் மாகாணத்தில், மஞ்சள் ஆறு அருகே இருந்தபோது, தன்னுடைய சொந்த கடற்படையால் வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கியிருக்கிறது. அதன் காரணமாக ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையால் கப்பலின் கேப்டன், அதிகாரிகள் உட்பட 55 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல், சீனக் கடற்படை அமைத்திருந்த சங்கிலி மற்றும் நங்கூரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. நீர்மூழ்கிக் கப்பல்
இதில் ஏற்பட்ட கணினி தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கப்பல் சேதத்தைச் சரிசெய்வதற்கு 6 மணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்கிறது. ஆனால், ஆக்சிஜன் அமைப்பில் ஏற்பட்ட தீவிர சேதத்தின் காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்கள் கடந்த ஒரு மாதமாகவே சமூக வலைதளங்களில் பராபரத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், சீனா தொடர்ந்து மறுத்துவந்தது.
சீனாவில், `093- வகை' தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் மொத்தம் ஆறு இருக்கின்றன. அவை மொத்தம் 6,096 டன் எடையைத் தாங்கும் திறன்கொண்டவை. அதேபோல, மிகப்பெரிய அளவில் ஆயுதங்களையும் இந்தக் கப்பல்கள்கொண்டிருப்பதாக, டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.இறங்குமுகத்தில் சீனா, ஏறுமுகத்தில் இந்தியா... எழுச்சி பெறும் துறைகள், ஏற்றம் தரும் பங்குகள்!
http://dlvr.it/Sx25cv
Thursday, 5 October 2023
Home »
» சொந்த `பொறியில்' சிக்கிய சீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்; 55 பேர் பலி எனத் தகவல்!







0 comments:
Post a Comment