Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Monday, 29 January 2024

வைரலான புகைப்படங்கள்... பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் X தளம் முடக்கம்.. என்ன நடந்தது?

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தவறாகச் சித்திரிக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் `Deep Fake’ வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.Deep fake``79 வயதில் ஏழாவது குழந்தை..." மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நடிகர் ராபர்ட் டி நீரோ!

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட்டின் (Taylor Swift) டீப் ஃபேக் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாயின. அந்தப் புகைப்படங்களை அகற்றுவதற்கு முன்னரே மில்லியனுக்கு அதிகமான மக்கள் அவற்றைப் பார்த்துள்ளனர். 

அந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட எக்ஸ் (X) தளமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதனை தொடர்ந்து ஸ்விஃப்ட்டின் போலியான படங்கள் பரவுவதைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அவரின் எக்ஸ் தள அக்கவுன்ட் முடக்கப்பட்டது. 

எக்ஸ் தளத்தில் ஸ்விஃப்ட்டின் பெயரைத் தேடினால், `Something went wrong. Try reloading’ என்று வருகிறது. பாடகியின் பாதுகாப்பிற்காக இந்தத் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. 

இது குறித்து எலானின் எக்ஸ் நிறுவனம் முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், ``இது போன்ற பதிவுகளுக்கு நிறுவனம் ஜீரோ டாலரன்ஸை கொண்டுள்ளது. எங்களின் குழுக்கள் அடையாளம் காணப்பட்ட அனைத்துப் படங்களையும் அகற்றி, அவற்றை போஸ்ட் செய்த அக்கவுன்ட்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றன’’ என்று குறிப்பிட்டுள்ளது.Elon Musk | Twitterஅமுல் பெயரில் ஏஐ உருவாக்கிய ஷரம் சீஸ்: ``போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்" - அமுல் வேண்டுகோள்..!

கடந்த வாரம் ஸ்விஃப்ட்டின் போலியான புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட டீப் ஃபேக்குகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்படவேண்டிய கட்டாயத்தை அமெரிக்க அரசு முன்வைத்துள்ளது.

ஏஐ-ன் பயன்பாடு ஆபத்தானதா அல்லது பயனுள்ளதா... உங்களின் கருத்தென்ன?!


http://dlvr.it/T21h0p

0 comments:

Post a Comment