Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Tuesday, 30 January 2024

Global Corruption Index 2023: சர்வதேச ஊழல் குறியீடு பட்டியல் வெளியீடு... இந்தியாவின் நிலை என்ன?

உலக வங்கியின் முன்னாள் ஊழியர்களால் 1993-ல் நிறுவப்பட்ட அமைப்பு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (TI). இந்த அமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக, 'சட்டத்தின்படி ஆட்சி செய்து, ஊழலை எதிர்த்துப் போராடும்' நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்து வருகிறது. இந்த ஆய்வுக்காக, உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம், தனியார் ஆலோசனை நிறுவனங்கள் உட்பட 13 தரவு மூலங்களைப் பயன்படுத்தி, தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்கிறது.உலக நாடுகள்

அதன் அடிப்படையில், 2023-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை இந்த அமைப்பு சமர்ப்பித்திருக்கிறது. 100 மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, அதில் அதிக மதிப்பெண் எடுக்கும் நாடுகளின்படி தரவரிசைப் பட்டியலைத் தயாரிக்கிறது. இந்த ஆண்டு180 நாடுகள் இந்தப் பட்டியலுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

அதில், 90 மதிப்பெண்கள் பெற்ற டென்மார்க், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஊழலை எதிர்க்கும் முதல் நாடாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து, 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து இரண்டாவது இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.

நார்வே, சிங்கப்பூர், சுவீடன், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைத் தக்கவைத்திருக்கின்றன. அமெரிக்கா 69 மதிப்பெண்கள் பெற்று 24-வது இடத்தையும், 43 மதிப்பெண்கள் பெற்று சீனா 76-வது இடத்தையும் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டில் 85-வது இடத்திலிருந்த இந்தியா, இந்த முறை 39 மதிப்பெண்களுடன் 93-வது இடத்துக்கு இறங்கியிருக்கிறது. அண்டை நாடான பாகிஸ்தான், 29 மதிப்பெண்களுடன் 133-வது இடத்தில் இருக்கிறது.இந்தியா

இந்தப் பட்டியலில் சோமாலியா கடைசி இடத்தில் இருக்கிறது. மேலும், இந்த அறிக்கையில், 180 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50-க்குக் கீழே மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றன.

அயர்லாந்து, தென் கொரியா, மாலத்தீவு, வியட்நாம் உள்ளிட்ட எட்டு நாடுகள் மட்டுமே தங்கள் தரவரிசையை மேம்படுத்தியுள்ளன.

கடந்த ஆண்டு ஐஸ்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் போன்ற அதிக மதிப்பெண் பெற்ற ஜனநாயக நாடுகள்கூட, இந்த ஆண்டின் தரவரிசைப் பட்டியலில் சரிவைச் சந்தித்திருக்கின்றன. இரான், ரஷ்யா, வெனிசுலா போன்ற அதிக சர்வாதிகார நாடுகளாகக் கருதப்படும் நாடுகளும் அவற்றின் மதிப்பெண்களை இழந்திருக்கின்றன. 23 நாடுகள் உலகளாவிய தரவரிசைக் குறியீட்டில் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றிருக்கின்றன.

இந்த அறிக்கை குறித்துப் பேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிராங்கோயிஸ் வலேரியன், ``நீதி அமைப்புகள் தவறுகளை முறையாகத் தண்டிக்காத வரை, அரசாங்கங்களைக் கட்டுக்குள் வைத்திருக்காதவரை ஊழல் தொடர்ந்து செழித்து வளரும். மேலும், ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் முழுமையாக சட்டத்தை நிலைநிறுத்தவும், ஊழலை வெளிக்கொண்டுவரும் நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும் வேண்டும். அதுதான் ஊழலை எதிர்த்துப் போராட வழி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.கழுகார் பதில்கள்: “அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும்!” என்று பேசியிருக்கிறாரே துரைமுருகன்?


http://dlvr.it/T251gz

0 comments:

Post a Comment