Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Friday, 5 January 2024

தீவுப்பகுதியில் `திடீர்' பீரங்கித் தாக்குதல் நடத்திய வட கொரியா... தென் கொரியாவில் பதற்றம்!

தென் கொரியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், இரு நாடுகளையும் ஒருசேர எச்சரித்துவரும் வட கொரியா, தென் கொரியாவின் Baengnyeong, Yeonpyeong தீவுப் பகுதியில் இன்று பீரங்கித் தாக்குதல் நடத்தியிருப்பது இரு நாடுகளுக்குமிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், வட கொரியாவின் இந்தத் தாக்குதல் காரணமாக, Baengnyeong தீவுப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு மக்களுக்கு தென் கொரியா உத்தரவிட்டிருக்கிறது.வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்

இது குறித்து தென் கொரியா பாதுகாப்பு அமைச்சக அதிகாரி, ``வட கொரிய ராணுவம் இன்று காலை 9 முதல் 11 வரை Baengnyeong தீவின் வடக்குப் பகுதியிலுள்ள Jangsan-got மற்றும், Yeonpyeong தீவின் வடக்குப் பகுதிகளில் 200 ரவுண்டுகளுக்கு மேல் பீரங்கி தாக்குதல் நடத்தியிருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த தாக்குதல் குறித்து தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம், ``அதிகரித்து வரும் இந்த நெருக்கடிக்கு வட கொரியா முழு பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம். அதோடு, இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும் கடுமையாக வலியுறுத்துகிறோம். எங்களின் ராணுவம் அமெரிக்காவுடன் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. அதற்கேற்றவாறு, வட கொரியாவின் ஆத்திரமூட்டல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறது.தென் கொரியா

அதேசமயம், Baengnyeong, Yeonpyeong தீவுகளின் உள்ளூர் அதிகாரிகள், தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, தங்கள் பகுதியிலிருக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் உத்தரவிட்டிருக்கின்றனர். இந்த தாக்குதல் குறித்து உள்ளூர் ஊடகத்திடம் பேசிய Baengnyeong தீவின் குடியிருப்பாளர் ஒருவர், ``முதலில் இது எங்களின் சொந்த ராணுவத்தால் வீசப்பட்ட குண்டுகள் என்று நான் நினைத்தேன். ஆனால், பின்னர்தான் அது வட கொரியாவால் வீசப்பட்டது என்று கூறப்பட்டது" என்றார்.வட கொரியா

1950-53 கொரிய போருக்குப் பிறகு, 2010-ம் ஆண்டு நவம்பரில் Yeonpyeong தீவுப் பகுதியில் வட கொரியா 170 பீரங்கி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில், பொதுமக்களில் இரண்டு பேர் உட்பட மொத்தமாக நான்கு பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர், 2018-ல் இரு நாடுகளுக்கு இடையில் ராணுவ ஒப்பந்தம் போடப்பட்டது. இப்படியிருக்க, தற்போது ராணுவ ஒப்பந்தத்தை மீறி வட கொரியா தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தென் கொரியா குற்றம்சாட்டுகிறது.வடகொரியா: ``அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்!" - உணர்ச்சிவசப்பட்டு அழுத கிம் ஜாங் உன்


http://dlvr.it/T105CB

0 comments:

Post a Comment