Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Wednesday, 31 January 2024

லடாக்கில் அத்துமீறிய சீன ராணுவம்; தடுத்து நிறுத்தியவர்களை, எதிர்த்து நின்ற ஆடு மேய்ப்பாளர்கள்!

லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு ( Line of Actual Control - LAC ) அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இந்தியர்களை, சீன ராணுவத்தினர் தடுத்து நிறுத்திய நிகழ்வு, சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது. ஜனவரி 2-ம் தேதி லடாக்கில் உள்ள நியோமா தொகுதிக்குட்பட்ட காக்ஜங்கில் ரோந்துப் புள்ளிகள் (PPs) 35, 36-க்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.லடாக்

இந்தச் சம்பவத்தின்போது, அங்கிருந்த உள்ளூர்வாசிகளால் எடுக்கப்பட்ட வீடியோவை, லடாக்கின் சுசூல் கிராம கவுன்சிலர் கொன்சோக் ஸ்டான்சின், தனது X சமுக வலைதளப் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், `ஜீப்பில் வந்த சீன ராணுவத்தினர் ஏழெட்டு பேர், அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களைத் தடுத்து நிறுத்தினர். மேலும், அவர்களிடம் ராணுவத்தினர் பேசிக்கொண்டே இருக்கும்போதே, அவர்களில் சிலர் அதை வீடியோ எடுத்தனர். சிறிது நேரம் பேசிய பிறகு, ஆடுமேய்ப்பாளர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.'

நல்லவேளையாக, அந்த சமயத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மேலும், இந்த வீடியோவைப் பதிவிட்ட கொன்சோக் ஸ்டான்சின், ``இத்தகைய வலுவான சிவில் - ராணுவ உறவுகளுக்காகவும், எல்லைப் பகுதி மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும் இந்திய ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார். மேலும் மற்றொரு பதிவில், ``தாங்கள் தடுத்து நிறுத்தும் பகுதி எங்களின் நாடோடிகளின் மேய்ச்சல் நிலம் என்று சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தினர் (PLA) முன்பு நம் உள்ளூர் மக்கள் எப்படி தங்கள் துணிச்சலைக் காட்டுகிறார்கள் என்பதைப் பாருங்கள். எப்போதும், நம் மண்ணைக் காத்து தேசத்தின் இரண்டாவது காவல் படையாக நிற்கும் நம் நாடோடிகளுக்கு நான் தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

It is heartening to see the positive impact made by @firefurycorps_IA
in Border areas of Eastern Ladakh in facilitating the graziers & nomads to assert their rights in traditional grazing grounds along the north bank of Pangong.
I would like to thank #IndianArmy for such strong… pic.twitter.com/yNIBatPRKE— Konchok Stanzin (@kstanzinladakh) January 30, 2024

முன்னதாக, இந்தச் சம்பவம் நடந்த பிறகு ஜனவரி 12-ம் தேதி கிராம சர்பஞ்ச், துணைப் பிரிவு மாஜிஸ்ட்ரேட், இந்திய ராணுவம், இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐ.டி.பி.பி) அதிகாரிகள் ஆகியோர் மேய்ச்சல் இடத்தைப் பார்வையிட்டிருக்கின்றனர். இது குறித்து ஊடகத்திடம் பேசிய நியோமா கவுன்சிலர் இஷே ஸ்பால்சாங், ``இந்தப் பகுதி கால்நடைகளின் குளிர்கால மேய்ச்சலுக்கு அவசியமான ஒன்று.

`Indian graziers were stopped by #Chinese soldiers in Kakjung area of #Ladakh on January 2. The graziers confronted the Chinese, threw rocks at them.' - says Hindu News Outlet#India #Indiachina #China #faceoff #Ladakh pic.twitter.com/Zljek88KMk— Se.Balajee (@Se_Balajee) January 31, 2024




இதற்கு முன் 2019-ல், சீனர்கள் நம் மேய்ச்சல்காரர்களைத் தடுக்க முயன்றனர். அதன் பின்னர், நாங்கள் எங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்த கூடாரங்களை அமைத்தோம். இந்த இடத்திலிருந்து 5 முதல் 7 கி.மீ தொலைவில்தான் ராணுவப் பிரிவு இருக்கிறது. இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட நாளில் அவர்கள் அந்தப் பகுதிக்கு வரவில்லை." என்றார்.

சமீபகாலமாக லடாக்கில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் எல்லைப் பிரச்னை இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.``பிற நாடுகளிடமிருந்து ஒரு இன்ச் நிலப்பரப்பைக்கூட சீனா ஆக்கிரமிப்பு செய்ததில்லை” - ஜி ஜின்பிங்


http://dlvr.it/T276SB

0 comments:

Post a Comment