அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி ஜெர்ரி (80), மார்ஜ் செல்பீ (81). இவர்கள் இருவரும் கன்வீனியன்ஸ் ஸ்டோரை நடத்தி வந்தனர். இந்த நிலையில், 2003-ம் ஆண்டு மார்ஜ் செல்பீ, வின்ஃபால் (WinFall) என்ற லாட்டரி விளையாட்டிற்கான நோட்டீஸை பார்த்திருக்கிறார். அதையடுத்து இதில் ஈடுபடத் தொடங்கிய தம்பதி, கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் 26 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.200 கோடி) சம்பாதித்திருக்கிறார்கள். குறுகிய காலத்தில் இவ்வளவு பெரியத் தொகை சம்பாதித்தது குறித்த தகவல், அரசுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அமெரிக்க டாலர்
அதனால், அவர்களின் வருமானத்தை அரசு அதிகாரிகள் சோதனை செய்திருக்கிறார்கள். அதன் இறுதியில், இவர்களின் வருமானம் நேர்மையான விளையாட்டின் மூலம் கிடைக்கப்பெற்றது என்றும், இதில் சட்ட விரோதம் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்தே இவர்கள் குறித்த தகவல் வெளியே வந்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவுப் பெரிய தொகை சம்பாதித்தது குறித்து அந்த வயதான தம்பதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, ``வின்ஃபால் (WinFall) என்ற லாட்டரி விளையாட்டிற்கான நோட்டீஸை பார்த்ததும், அதில் சில கணிதத் திறனிருந்தால் இலகுவாகச் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்துகொண்டோம். இந்த முடிவை எடுக்க எங்களுக்கு 2 நிமிடங்கள்கூட ஆகவில்லை. அதாவது,100 டிக்கெட்டுகளுக்கு 1,100 டாலர் செலவழித்தால், அதில் வெற்றி பெறப்போகும் நான்கு வெற்றி எண் இருக்கும். அந்த 4 எண் மூலமும், 900 டாலர் லாபம் கிடைக்கும். அதாவது அவரது 1,100 டாலர் முதலீடு செய்தால், நமக்கு 1,900 டாலர் கிடைக்கும். இதில் 800 டாலர் நேர்த்தியான லாபம்.குடும்பத்துடன் தம்பதி
இதை ஒரு தொழிலாகத் தொடர்ந்து, எங்கள் நண்பர்களுக்கும் குறிப்பிட்ட லாபத்தை ஒதுக்கி, முதலீடு செய்ய வைத்தோம். அதன் மூலம் இந்த லாபத்தை அடைந்தோம். இந்த தொகையின் மூலம், வீட்டைப் புதுப்பித்தோம், எங்களின் ஆறு குழந்தைகள், 14 பேரக்குழந்தைகள் மற்றும் 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளின் பள்ளிப் படிப்பு, தொழில்துறைக்கும் பணம் பயன்படுத்தப்பட்டது" எனக் குறிப்பிட்டனர்.
லாட்டரி மூலம் ரூ.200 கோடி ஈட்டியிருக்கும் இந்தத் தம்பதியின் கதையே, ''ஜெர்ரி & மார்ஜ் கோ லார்ஜ்'' திரைப்படத்திற்கு உத்வேகமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.வீட்டைச் சுத்தம் செய்தபோது கிடைத்த பழைய லாட்டரி டிக்கெட்; ஒரே நாளில் லட்சாதிபதியான பெண்!
http://dlvr.it/T16L8s
Monday, 8 January 2024
Home »
» ரூ.200 கோடி; கைகொடுத்த Math Skills... தம்பதிக்கு அடித்த லாட்டரி `ஜாக்பாட்' - நடந்தது என்ன?







0 comments:
Post a Comment