சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண், கை மற்றும் கால்களை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் 41 வயது லுசிண்டா முலின்ஸ் என்பவர் சில வாரங்களுக்கு முன்பு கென்டக்கி மருத்துவமனையில் சிறுநீரகக் கல் பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். சில நாள்களாக இவரை மருத்துவர்கள் மயக்க நிலையில் வைத்திருந்தனர்.
அறுவை சிகிச்சை முடிந்து மயக்கத்தில் இருந்து எழுந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முட்டிக்குக் கீழே அவரின் இரு கால்களும் நீக்கப்பட்டு இருந்தன. Treatment (Representational Image)
அதுமட்டுமல்லாமல் அவரது உயிரைக் காப்பாற்ற கைகளையும் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது சிறுநீரகக் கல் பாதிப்பு மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் செப்சிஸ் என்ற பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்.
நோய்த்தொற்றுக்கு உள்ளான உடல், எதிர்வினையாக தனது சொந்த திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு காயத்தை ஏற்படுத்தும் ஆபத்தான நிலையே செப்ஸிஸ் (Sepsis) என அழைக்கப்படுகிறது.
அவரது உயிரைக் காக்க வேறு வழியில்லை என மருத்துவர்கள் நிலைமையை விளக்கியுள்ளனர்.
தனது வாழ்வின் தொடர் பிரச்னைகள் குறித்து பேசியுள்ள முலின்ஸ், ``நான் என் இரு கால்களை இழந்துவிட்டேன். என்னுடைய கைகளையும் இழக்கப் போகிறேன்; 'உயிரை காக்க நாங்கள் செய்ய வேண்டியது இதுதான்' என மருத்துவர்கள் கூறினர்.
நான் உயிருடன் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பார்க்கிறேன். கணவரோடு நேரத்தைச் செலவிடுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
லுசிண்டா முலின்ஸை அவரின் நண்பர்கள் 'சிண்டி' என செல்லமாக அழைக்கின்றனர். இவருக்காகவும் அவரின் கணவர் டிஜே மற்றும் குழந்தைகளுக்காகவும் `GoFundMe’ பக்கத்தில் அவர்கள் நிதி திரட்டி வருகின்றனர். ,Mullins and family How to: சிறுநீரகக் கல் ஏற்படாமல் தடுப்பது எப்படி? | How To Prevent Kidney Stones?
வாழ்வைப் புரட்டிப் போட்ட நிலையில் முலின்ஸின் தேவைக்காக வீட்டை மாற்றியமைக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். அதோடு சில உபகரணங்களையும் வாங்க உள்ளனர். இவை அனைத்திற்கும் அதிக செலவாகலாம். இவர்களின் குழந்தைகளும் வாழ்வின் கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், `சிண்டி மற்றும் டிஜேயின் உலகம் முழுவதுமாக நின்றுவிட்டது. ஆனால், அவர்களைச் சுற்றியுள்ள உலகம் முன்னேறிக் கொண்டு இருக்கிறது.
அவர்கள் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகையில், அவர்களின் சுமையைக் குறைக்க உதவுவோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி’ என நிதி திரட்டும் பக்கத்தில் உதவி கோரப்பட்டுள்ளது.
எத்தனை துன்பம் கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்...
http://dlvr.it/T0rn1K
Monday, 1 January 2024
Home »
» சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சைக்குப் பின் கை, கால்களை இழந்த பெண்... என்ன நடந்தது?







0 comments:
Post a Comment