Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Friday, 5 January 2024

ஒரே ஒரு செடியுள்ள உலகின் மிகச் சிறிய பூங்கா... கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற கதை!

காலை, மாலை என நடைப்பயிற்சி செய்ய, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்துணர்ச்சிக்கான இடமாக பூங்காக்கள் இருந்து வருகின்றன. பூங்காக்கள் என்றாலே மரம், செடிகள் என பசுமையான சூழலோடு இருக்கும். ஆனால், கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த ஒரு பூங்காவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் ஓரிகானில் போர்ட்லேண்ட் அருகே ஒரு பூங்கா அமைந்துள்ளது. அப்படியென்ன இந்த பூங்காவில் ஸ்பெஷல் என நீங்கள் கேட்கலாம்.

இந்த பூங்காவில் ஒரே ஒரு செடி மட்டும்தான் இருக்கிறது. ஆனாலும் இது பூங்காதான். `ஒரே ஒரு செடி இருந்தால் அது எப்படி பூங்காவாகும்’ என நீங்கள் வியப்படையலாம். பூங்கா (சித்தரிப்பு படம்)ஜல்லிக்கட்டு: காளைகளின் கொம்பில் ரப்பர் புஷ்... உயிரிழப்பை தடுக்க விலங்குகள் நல வாரியம் பரிந்துரை!

இந்த ஒற்றை செடி பூங்காவாக மாறியதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது.

1946-ல் டிக் ஃபகன் என்ற இராணுவ வீரர் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போர்ட்லேண்ட்டில் உள்ள ஓரிகானுக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு பத்திரிகையாளராகத் தனது பணியைத் தொடங்கி இருக்கிறார். `மில் எண்ட்ஸ்’ என்ற புனைபெயரில் கட்டுரைகளை எழுதி வந்திருக்கிறார்.

அவரது பத்திரிக்கை அலுவலகத்திற்குக் கீழே, பரபரப்பாக இயங்கி வந்த தெரு ஒன்று இருந்தது. அந்த தெருவில் ஒரு பெரிய பள்ளம் அமைக்கப்பட்டு, அதில் மின்விளக்கு கம்பம் நடப்படுவதாகக் கூறப்பட்டது.

பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களாகியும் மின்கம்பம் வைக்கப்படவே இல்லை. சும்மா இருக்கும் பள்ளத்தில் செடியையாவது நட்டு வைப்போம் என டிக் அந்த பள்ளத்தில் செடி வைத்திருக்கிறார்.

இவர் நகரம் முழுவதுமுள்ள பூங்காக்களை பற்றி கட்டுரையாக எழுதி வந்த சமயத்தில், தான் நட்டு வளர்த்து வரும் சிறிய செடியைக் குறித்தும் மக்களுக்கு எழுத்துக்கள் மூலம் கட்டுரையாகக் கூறத் தொடங்கி இருக்கிறார்.

இந்த சிறிய ஒற்றை செடி பூங்காக்களின் பட்டியலில் இடம்பிடித்தது. இவரது மில் எண்ட்ஸ் என்ற புனைபெயரே அந்த செடிக்கும் சூட்டப்பட்டது. `உலகின் மிகச் சிறிய பூங்கா’ என்ற கின்னஸ் சாதனையும் படைத்தது.மில் எண்ட்ஸ் பார்க்!`ஈரோட்டில் ஆச்சர்யப் பூங்கா!' - அறிவியல் தொழில்நுட்பப் பூங்காவின் புகைப்படத் தொகுப்பு | Photo Album

இந்த பூங்கா 60.96 சென்டி மீட்டர் சுற்றளவையும், 2,917.15 சென்டி மீட்டர்² பரப்பளவையும் கொண்ட ஒரு சிறிய வட்டம். இந்த சிறிய பூங்காவில் ஐரிஷ் நாட்டுப்புறக் கதைகளில் கூறப்படும் கற்பனை கதாபாத்திரங்கள் வசிப்பதாக உள்ளூர்வாசிகளால் நம்பப்பட்டு வருகிறது. 

`ஒரு பள்ளம் செடியாக மாறியது, ஒரு செடி பூங்காவாக மாறியது’ செயல்படாத அரசைக் குறித்து அவர் எழுப்பிய குரல் கின்னஸ் புத்தகத்திலும் எதிரொலித்து. ஆனால், கடைசி வரையில் அங்கு மின்கம்பம் நடப்படவில்லை என்பதைப் பலரும் மறந்தே போயினர்.

பள்ளங்கள் செடிகளாக பூங்காக்களாக மாறின், இந்தியாவிலும் பல கின்னஸ் சாதனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் போகும்!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், கமென்டில் சொல்லுங்கள்!


http://dlvr.it/T10RYz

0 comments:

Post a Comment