இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சீனாவிலிருந்து பிரிந்து தன்னை தனிநாடாக தைவான் அறிவித்துக்கொண்டாலும், சீனா ஒருபோதும் அதை ஏற்றதாக இல்லை. இப்போதுவரை, தங்கள் நாட்டின் ஒரு பகுதிதான் தைவான் எனக் கூறிவருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் `நெருப்போடு விளையாடாதீர்கள்' என அமெரிக்காவையும் என சீனா எச்சரித்துவருகிறது.சீனா - தைவான்
இருப்பினும், தைவான் அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டிவர, அமெரிக்காவும் தைவான் பக்கம் ஆதரவாக நிற்கிறது. இன்னொருபக்கம், ஜனவரி 13-ம் தேதி தைவானில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், தைவானை சீனாவுடன் இணைப்பது தவிர்க்க முடியாதது என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்திருக்கிறார்.
புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் (Xi Jinping) புத்தாண்டு உரையில், ``தாய்நாட்டை மீண்டும் ஒருங்ணைப்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதது. சீனா நிச்சயமாக மீண்டும் ஒருங்கிணைக்கப்படும். தைவான் ஜலசந்தியின் இருபுறம் இருப்பவர்களும் ஒரு பொதுவான நோக்கத்துடன் பிணைக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.ஜி ஜின்பிங்
சென்ற ஆண்டுகூட, ``தைவான் ஜலசந்தியின் இருபுறமும் இருப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், சீனாவின் செழிப்பைக் கூட்டாக வளர்ப்பதற்கு ஒன்றாகச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்" என ஜி ஜின்பிங் கூறியிருந்தார்.ட்சாய் இங்-வென்
இருப்பினும், தைவான் அதிபர் ட்சாய் இங்-வென் (Tsai Ing-wen) இந்தாண்டுக்கான தனது புத்தாண்டு உரையில், ``சீனாவுடனான உறவில், மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. அதேபோல், தைவானின் தேர்தல் முடிவுகளை சீனா மதிக்க வேண்டும். தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இருதரப்பும் பொறுப்பு" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
தைவான்: உலகத்தின் மிக அபாயகரமான பகுதி... நாடுகளின் கதை - 6
http://dlvr.it/T0qf26
Monday, 1 January 2024
Home »
» ``தைவானை மீண்டும் தாய்நாட்டுடன் இணைப்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதது!" - புத்தாண்டில் சீன அதிபர்







0 comments:
Post a Comment