Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Saturday, 6 January 2024

Alaska Airlines: பாதியில் அடித்துச் செல்லப்பட்ட ஜன்னல் - 174 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

அமெரிக்காவின் ஓரிகானிலிருந்து கலிபோர்னியாவின் ஒன்டாரியோவிற்கு அலாஸ்கா ஏர்லைன்ஸ் 1282 விமானம் புறப்பட்டது. இதில், 174 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணித்தனர். இந்த நிலையில், விமானம் டேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில், திடீரென விமானத்தின் ஜன்னல் ஒன்று வெடித்துச் சிதறி விலகிச் சென்றது. இதில் ஜன்னல் ஓரத்திலிருந்த குழந்தை வெளிக்காற்றால் இழுக்கப்பட்டதில் அதன் சட்டை கிழிந்தது. சில பயணிகளின் செல்போன் போன்ற கையிலிருந்த பொருள்கள் அந்த ஜன்னல் வழியே இழந்திருக்கின்றனர்.

BREAKING: An @AlaskaAir @Boeing 737-8MAX Lost A Large Section Mid-Air & Made An Emergency Landing In Oregon. Alaska Airlines Crew Did A Magnificent Job & No One Was Seriously Injured.
The 737 MAX Has Been Plagued With Issues Since Its Introduction! pic.twitter.com/9l0eZHA7cS— John Basham (@JohnBasham) January 6, 2024




ஜன்னலுக்கு அடுத்துள்ள இருக்கை ஒன்றும் சிதறியது. இதனால், விமானத்திலிருந்த பயணிகள் பெரும் பதற்றத்துக்குள்ளானர். இந்த நிலையில், அவர்களுக்கான ஆக்ஸிஜன் பைகள் மூலம் சிலர் சுவாசிக்கத்தொடங்கினர். இக்கட்டான சூழலைச் சமாளிக்க விமானி போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அதைத் தொடர்ந்து, உலகின் மிகவும் பிரபலமான விமான மாடல்களில் ஒன்றான போயிங் 737 மேக்ஸ் வகை விமானம் குறித்த தகவல்களும், பாதுகாப்பு சிக்கல்களும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டுவருகின்றன. தற்போது விபத்துக்குள்ளான போயிங் 737-9 MAX ரக விமானம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நவம்பர் 2023-ல் ஃபெடரல் ஏவியேஷன் ஆணையத்தால் (FAA) பாதுகாப்பு சான்றளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வகை விமானம் தொடர்ந்து பாதுகாப்பு சிக்கல்கள் சர்ச்சைகளால் பாதிக்கப்பட்டுவருகிறது.

BREAKING: An @AlaskaAir @Boeing 737-8MAX Lost A Large Section Mid-Air & Made An Emergency Landing In Oregon. Alaska Airlines Crew Did A Magnificent Job & No One Was Seriously Injured.
The 737 MAX Has Been Plagued With Issues Since Its Introduction! pic.twitter.com/9l0eZHA7cS— John Basham (@JohnBasham) January 6, 2024




இதற்கு முன்னர், 2018 - 2019 -ம் ஆண்டுகளில், இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மேக்ஸ் ரக விமானம் இரண்டு அபாயகரமான விபத்துகளைச் சந்தித்திருக்கிறது. இதில், மொத்தம் 346 பேர் கொல்லப்பட்டனர். இதற்கான காரணமாக விமானிகளின் கட்டுப்பாடின்றி விமானத்தின் முகப்புப் பகுதியைக் கீழே தள்ளும் MCAS எனப்படும் தவறான அமைப்பினால் இந்த விபத்துகள் நடந்திருப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
நிகரகுவா வழி அமெரிக்கா செல்ல முயற்சி - பிரான்ஸிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானம் மும்பை வந்தது!


http://dlvr.it/T12831

0 comments:

Post a Comment