Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Thursday, 11 January 2024

Khalistani Murder Plot: இந்தியர்மீதான கொலை சதி குற்றச்சாட்டு; அரசிடம் ஆதாரங்கள் கேட்கும் நீதிமன்றம்!

அமெரிக்கவில் காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொல்ல சதி செய்ததாக, நிகில் குப்தா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களைக் கோரி, அவரின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, அரசுக்கு நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குர்பத்வந்த் சிங்

இது தொடர்பாக, ``ஜனவரி 4, 2024 அன்று, எதிர்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `இந்த வழக்கில் இதுவரை சேகரிக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் மற்றும் பொருள்கள் தொடர்பான தரவுகளை சமர்ப்பிக்க, அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான பொருள்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மூன்று நாள்களில், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது" என அமெரிக்க மாவட்ட நீதிபதி விக்டர் மர்ரெரோ உத்தரவிட்டார்.

அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற காலிஸ்தானி பயங்கரவாதி, குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்வதற்கு சதித்திட்டம் நடைபெற்றதாகவும், அதை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்வதற்கு நடைபெற்ற சதியில், இந்திய அரசு ஊழியர் ஒருவருக்கு உதவியதாக, 52 வயதான நிகில் குப்தா மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அமெரிக்கா

இந்த வழக்கில், குப்தா மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி, செக் குடியரசு நாட்டில் வைத்து குப்தா கைதுசெய்யப்பட்டார். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின்படி, செக் குடியரசு அதிகாரிகள் குப்தாவை `கொலைசெய்ய சதி செய்தல்' என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்தனர். காலிஸ்தான்: கனடா - இந்தியா இடையிலான பிரச்னையில் ‘புகுந்த’ அமெரிக்கா - என்ன நடக்கிறது?!


http://dlvr.it/T1DvbH

0 comments:

Post a Comment