அமெரிக்காவின் உட்டா பகுதியைச் சேர்ந்த ஒருவர், பிரபலமான கடை ஒன்றில் மில்க் ஷேக் ஆர்டர் செய்திருக்கிறார். அவர் ஆர்டர் செய்த சில மணி நேரத்தில், அவருக்கு மில்க் ஷேக் பாட்டில் வழங்கப்பட்டிருக்கிறது. பெரும் ஆவலுடன் இருந்த அவர், அதைப் பிரித்து ஒரு வாய் குடித்ததும், அது மில்க் ஷேக் அல்ல... சிறுநீர் என்பதை உணர்ந்திருக்கிறார். இது எப்படி சாத்தியம் என மனம் நொந்துகொண்டவர், குறிப்பிட்ட உணவு விடுதியை அழைத்துப் புகார் தெரிவித்திருக்கிறார். மேலும், தான் ஆர்டர் செய்த செயலியிலும் இது தொடர்பாகப் புகார் அளித்திருக்கிறார். மில்க் ஷேக்
இந்த விவகாரம் தொடர்பாக அவர் காவல் நிலையத்திலும், செய்தி நிறுவனத்துக்கும் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, வருத்தம் தெரிவித்த உணவு விடுதி நிர்வாகமும், உணவு செயலி நிறுவனமும், பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்டிருந்தன. மேலும், அவருக்குப் புதிய மில்க் ஷேக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. உணவு டெலிவரி ஆப் நிறுவனம், சிறுநீர் டெலிவரி செய்தது தொடர்பாக டெலிவரி செய்தவரிடம் விளக்கம் கேட்டிருந்தது.
அதற்கு அவர், ``நான் இடைவிடாமல் வேலை செய்கிறேன். தனியே சென்று சிறுநீர் கழிக்கக்கூட நேரமில்லை என்பதால், என்னுடன் சில காலி டப்பாக்களை வைத்துக்கொள்வேன். எனக்குத் தேவையானபோது அவற்றைப் பயன்படுத்திக்கொள்வேன். அப்படிப் பயன்படுத்திய ஒன்றுதான் தவறுதலாக வாடிக்கையாளருக்கு மாறிச் சென்றுவிட்டது" என வருத்தம் தெரிவித்தார். அதையடுத்து, அந்த நிறுவனம் இத்தகைய செயலில் ஈடுபட்ட நபரை உடனடியாகப் பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது.Doctor Vikatan: சொட்டு சொட்டாக வெளியேறும் சிறுநீர்... உடைகளை நனைக்கும் தர்மசங்கடம்... தீர்வு உண்டா?
http://dlvr.it/SyLGZB
Friday, 3 November 2023
Home »
» `ஆர்டர் செய்தது Milk Shake... டெலிவரி செய்யப்பட்டதோ சிறுநீர்...!' - அதிர்ந்துபோன வாடிக்கையாளர்







0 comments:
Post a Comment