Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Monday, 6 November 2023

``சவாரிகளை ரத்து செய்து 23 லட்சம் சம்பாதித்த ஊபர் டிரைவர்''... சாத்தியமானது எப்படி?!

அமெரிக்காவின் நார்த் கரோலினாவைச் சேர்ந்த 70 வயதான ஊபர் டிரைவர், ஒரு வருடத்தில் தனது பயணங்களில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான சவாரியை (Ride) ரத்து செய்து 28,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 23.3 லட்சம்) சம்பாதித்துள்ளார்.

சமீப காலங்களில் ஊபர் மற்றும் ஓலா தளங்களில் புக் செய்து பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிலோ மீட்டரை அளவாக வைத்து பணம் வசூலிக்கப்படுவதால், வழக்கமாகக் கொடுக்கும் பணத்தை விடச் சற்று குறைவாகக் கொடுப்பதாகப் பயனர்கள் தெரிவிக்கின்றனர். driver (Representational Image)டெல்லியில் அதிகரித்த காற்று மாசு; அதிகளவில் குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்...

அதேசமயம் டிரைவர்கள் கூடுதல் கட்டணம் கேட்பதாகவும், தேவையில்லாமல் கேன்சல் செய்வதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த `பில்’ என்ற புனைபெயரில் அழைக்கப்படும் 70 வயது நபர் தனது பயணங்களை ரத்து செய்தே 23 லட்சத்துக்கும் மேல் சம்பாதித்து இருக்கிறார். ஆறு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற பில், பார்ட் டைம் வேலையாக ஊபரில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

ஆனால் அவர் பெரிதாகச் சவாரிக்கு செல்வதில்லை. பெரும்பாலான சவாரிகளை வேண்டாமென்று நிராகரித்து விடுகிறார். 

இது குறித்து பில் கூறுகையில், ``இல்லை என்று சொல்லியே நான் பல காலம் கடத்தினேன். கோவிட் தொற்று சமயத்தில் ஓட்டுநர்கள் உடல்நலக் குறைவு காரணமாக வாகனம் ஓட்டுவதைத் தற்காலிகமாக நிறுத்தி இருந்தார்கள். அப்போது நானும் மற்ற சில ஓட்டுநர்களும் ஒரு மணி நேரத்திற்கு 50 அமெரிக்க டாலர் வரை சம்பாதிக்க முடிந்தது.

இப்போது ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு மணிநேரத்திற்கு 15 முதல் 20 அமெரிக்க டாலர் வரை மட்டுமே சம்பாதிக்க முடிகிறது. இருந்தாலும் நல்ல பணம் சம்பாதிப்பதற்காக சில உத்திகளை நான் கையாள்கிறேன்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவில் 10 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை, விமான நிலையங்கள் மற்றும் பார்கள் போன்ற இடங்களுக்கு சென்றுவிடுவேன். ஒரு விமானம் தரையிறங்கும்போது மக்கள் ஊபரை நாடுகிறார்கள், அப்போது கட்டணம் கடுமையாக உயர்கிறது. 20 நிமிட சவாரியின் பணம் 10, 20, 40 ஏன் சில நேரங்களில் 50 அமெரிக்க டாலர்கள் வரை கூட செல்லும். Bar (Representational Image)டயாலிசிஸ் செய்துகொள்ளச் சென்ற பயணி: கிட்னியைத் தானம் செய்த ஊபர் ஓட்டுநர்! - நெகிழ்ச்சி சம்பவம்

ஓட்டுநருக்கு 50 சதவிகிதம் குறைவாகவே கிடைக்கும். எனவே 35 நிமிட சவாரியில் உங்களுக்கு 30 முதல் 60 அமெரிக்க டாலர் வரை கிடைக்கும்.

அதேசமயம் ஒன்-வே ரைடுகளையும் நான் தவிர்த்து விடுவேன். 10 சதவிகிதத்திற்கும் குறைவான சவாரிகளே சென்றுள்ளேன். 2022-ல் 1,500 பயணங்களை மட்டுமே மேற்கொண்டுள்ளேன். 30 சதவிகிதத்திற்கும் அதிகமான சவாரியை ரத்து செய்துள்ளேன். நான் வருமானத்திற்காக ஊபரை நம்புவதில்லை. நான் வெளியே செல்வதற்காக ஓட்டுகிறேன். எனக்குப் பணம் தேவையில்லை. எனக்கு இது பிடித்துள்ளது’’ என்று கூறியுள்ளார். 

`நைஸ் ட்ரிக்ஸ்' என பில் சொல்வதை நினைத்தாலும் இந்த யுக்திகளில் சில ஆபத்துகளும் உள்ளன. டிரைவரின் டெஸ்டிநேஷன் (destination) காரணமாகத் தொடர்ந்து பயணத்தை மறுப்பது மற்றும் ரத்து செய்வது ஓட்டுநரின் அக்கௌன்ட்டை ரத்து செய்ய வழிவகுக்கும்.

10 சதவிகிதத்திற்கு மேல் அடிக்கடி சவாரியை ரத்து செய்யும் ஓட்டுநர்கள் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் தள்ளுபடி பெறும் சலுகைகளையும் இழக்கின்றனர்.

ஆன்லைன் புக்கிங் சவாரியில் நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன?! கமெண்டில் சொல்லுங்கள்...


http://dlvr.it/SyV1fs

0 comments:

Post a Comment