ஒரு நாட்டின் பிறப்பு விகிதம் குறையும் போது, அதனை நிவர்த்தி செய்ய அரசு சில முயற்சிகளை மேற்கொள்ளும். இந்தநிலையில் தென்கொரியா நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இளைஞர்களிடையே பிளைண்டு டேட்டிங் (Blind Dating) நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
தென்கொரியாவின் சியாங்னம் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், 100 தென்கொரிய பெண்கள் மற்றும் ஆண்கள் என 20 முதல் 30 வயதுக்குட்பட்ட `சிங்கிள்ஸ்' பங்கேற்றனர். அழகான ஆடைகளை அணிந்து கொண்டு அதில் நேம் டேகையும் தொங்கவிட்டு இருந்தார்கள்.Datingஇரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆகிறாரா சமந்தா?
இவர்களை மகிழ்ச்சியாக வைக்க கேம்களும், இலவச ஒப்பனை சேவைகளும் ரெட் ஒயின் மற்றும் சாக்லேட்டுகளும் இருந்தன.
இளைஞர்களிடையே திருமணம் மீதான ஈடுபாடு குறைந்து வருவதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவருக்கொருவர் பழகி அன்பைப் பரிமாறிக் கொள்வார்கள்.
இந்த டேட்டிங்கில் தங்களுக்கான இணையை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். அதோடு தேர்ந்தெடுத்த இணையோடு வரும்காலத்தில் குழந்தையைப் பெறுவார்கள் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
`இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மூன்று முறை விண்ணப்பிக்க வேண்டும். இது எந்தளவு போட்டி மிகுந்ததாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை’ என தென்கொரியாவில் அரசு ஊழியராக இருக்கும் 36 வயதான லீ யூ-மி தெரிவித்துள்ளார்.``காஸாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது!" - உலக சுகாதார அமைப்பு வேதனை
இந்த ஆண்டு ஐந்து சுற்று நிகழ்வுகளுக்குப் பிறகு, 460 பேரில் 198 பேர் ஜோடிகளாக நிகழ்வை விட்டு வெளியேறினர். தங்கள் ஜோடிகளுடன் தொடர்புகளைப் பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டனர் என தென்கொரிய அரசு கூறியுள்ளது.
சிங்கிள்ஸ் பலரும் `இந்த நிகழ்ச்சிக்கு நாங்களும் வரலாமா' என்பது போன்ற நகைச்சுவையான கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்...
http://dlvr.it/SzQ4Cw
Tuesday, 28 November 2023
Home »
» 100 சிங்கிள்ஸுக்கு டேட்டிங் ஏற்பாடு செய்த தென்கொரியா அரசு... என்ன நடந்தது தெரியுமா..?







0 comments:
Post a Comment