ஒரு நீண்ட அமைதிக்குப் பின்னர் கோவிட் தொற்று மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கோவிட் வைரஸின் தாக்கம் குறைந்தாலும் அதிலிருந்து புதிய வேரியன்ட்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிடுகின்றன.
தற்போது அமெரிக்காவில் JN.1 மற்றும் HV.1 என்ற இரண்டு புதிய கோவிட் வேரியன்ட்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் எச்சரித்துள்ளது. கோவிட்-19கோவிட் 19-ஐ விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு - WHO எச்சரிக்கை
புதிய வேரியன்டான JN.1-ன் பாதிப்பு அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. தற்போது இந்த நோயின் பாதிப்பு இங்கிலாந்து, அமெரிக்கா, ஐஸ்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 11 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
HV.1 கோடைக்காலத்தின் நடுப்பகுதியில் தோன்றி செப்டம்பர் மாதத்தில் வேகமாக மக்களிடையே பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் கிட்டத்தட்ட 20% பாதிப்பை இந்த வேரியன்ட்கள் ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.
``JN.1 என்பது BA.2.86 என்பதன் வழித்தோன்றல் என்பதால், அது அதிகமாகப் பரவக்கூடியதாக இருக்கலாம் என்ற கவலை உள்ளது. அப்டேட்டட் கோவிட் தடுப்பூசிகள் BA.2.86-க்கு எதிராகப் பாதுகாக்க உதவும். எனவே, அப்டேட்டட் தடுப்பூசி நமது பழைய தடுப்பூசியைவிட JN.1-க்கு எதிராகச் செயல்படுகிறது’’ என்று நியூயார்க்கில் உள்ள பஃபேலோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் தொற்று நோய்கள் பிரிவின் தலைவருமான தாமஸ் ருஸ்ஸோ கூறியுள்ளார். கோவிட் மீண்டும் கோவிட் பரவுமா? எச்சரிக்கும் WHO... தரவுகளைப் பகிர உலக நாடுகளுக்கு அறிவுறுத்தல்!
இது குறித்து நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் கூறுகையில், ``நம்மிடம் கோவிட் 19 இருக்கும்வரை புதிய வேரியன்ட்கள் வந்துகொண்டேதான் இருக்கும். முந்தைய வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள புதிய வேரியன்ட்கள் சிறிய மாற்றங்களைக் கொண்டுள்ளன.
தடுப்பூசிகள், சோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் புதிய வேரியன்ட்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை சிடிசி மற்றும் பிற ஏஜென்சிகள் கண்காணிக்கின்றன. மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் விரைவாக எச்சரிக்கப்படுவார்கள்’’ எனத் தெரிவித்துள்ளது.
http://dlvr.it/Syvl4S
Thursday, 16 November 2023
Home »
» கோவிட் 19: அச்சுறுத்தும் 2 புதிய வேரியன்ட்கள்... உலக நாடுகளில் எங்கெல்லாம் பாதிப்பு?!







0 comments:
Post a Comment