ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் காஸா நகரில் ஒரு மாதமாக குண்டுமழை பொழிந்துவருகிறது இஸ்ரேல். அக்டோபர் 7-ல் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் உயிரிழந்தாகக் கூறும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் தன்னுடைய தாக்குதல் மூலம் 4,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் இறப்புக்கு முழு காரணமாகியிருக்கிறது.பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தாக்குதல்
அதோடு, `ஹமாஸை அழித்து வெற்றி பெறும் வரை போரை நிறுத்த மாட்டோம்' என இஸ்ரேல் கூறிவருகிறது. இன்னொருபக்கம், போரை நிறுத்த வலியுறுத்துமாறு அமெரிக்காவுக்கு அரபு நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த இந்தியா முயற்சி செய்யும் என எதிர்பார்ப்பதாக இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) கூறியிருக்கிறார்.
இந்திய பிரதமர் மோடியிடம் நேற்று தொலைபேசியில் உரையாடிய இப்ராஹிம் ரைசி, ``காஸாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவர, தன்னால் முடிந்த அனைத்தையும் இந்தியா செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலஸ்தீன மக்களின் தொடர் உயிரிழப்புகள், உலகின் அனைத்து சுதந்திர நாடுகளையும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த உயிரிழப்புகள் பிராந்தியத்துக்கு அப்பாற்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி - மோடி
எனவே, அடக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தில் அனைத்து நாடுகளும் பாலஸ்தீனிய மக்களுக்குப் பின்னால் நிற்க வேண்டும். அதோடு, நிதியுதவி, ஆயுத உதவி, உளவுத்துறை உதவிகள் மூலம் இஸ்ரேலிய அரசாங்கத்தை ஆதரிப்பதிலும், போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை முறியடிக்க தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதிலும் அமெரிக்கா பொறுப்புக்கூற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.Israel: ``இது ஓர் இனப்படுகொலை; பாலஸ்தீனியர்களைக் கொல்ல இஸ்ரேலை ஊக்குவிக்கிறது அமெரிக்கா!" - இரான்
http://dlvr.it/SyVmjb
Tuesday, 7 November 2023
Home »
» ``இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த இந்தியா முயற்சி செய்யும் என எதிர்பார்க்கிறேன்!" - மோடியிடம் இரான் அதிபர்







0 comments:
Post a Comment