அமெரிக்காவில், மருத்துவ பராமரிப்பிலிருந்த நோயாளிகளில் இருவர் அளவுக்கதிகமான இன்சுலினால் உயிரிழந்ததிலும், மேலும் 17 உயிரிழப்புகளிலும், தான் ஈடுபட்டிருப்பதாகக் குற்றத்தை ஒப்புக்கொண்ட செவிலியர் கைதுசெய்யப்பட்ட சம்பவம், பேசுபொருளாகியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட செவிலியர் தொடர்பாக வெளியான தகவலின்படி, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிக்கும் ஹீதர் பிரிஸ்டி (41) எனும் செவிலியர், அதிக அளவில் இன்சுலின் மருந்தை செலுத்தியதன்/பரிந்துரைத்ததன் மூலம், இரண்டு நோயாளிகளின் மரணத்துக்கு காரணமானவர் என்று அவர்மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.இன்சுலின்
தற்போது சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் இவர், முன்பு பணியமர்த்தப்பட்ட பல்வேறு மறுவாழ்வு மையங்களில் 19 பேருக்கு தீங்கு செய்ய முயன்றதாக தாமாகவே வாக்குமூலம் அளித்ததையடுத்து, இந்த விவகாரம் வெளியில் தெரியவந்திருக்கிறது. அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, 2020 முதல் நோயாளிகளுக்கு அவரவர்களின் நீரிழிவு நிலையைப் பொருட்படுத்தாமல் அதிகப்படியான இன்சுலினை அவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக அந்த நோயாளிகளில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில், அட்டர்னி ஜெனரல் மைக்கேல் ஹென்றி, ஹீதர் பிரிஸ்டிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளைத் தற்போது பதிவுசெய்திருக்கிறார். இதில் இரண்டு முதல் நிலை கொலைகள், 17 கொலை முயற்சிகள், 19 கவனிப்பு சார்ந்த நபர்களைப் புறக்கணித்தமை ஆகியவை அடங்கும். இவையனைத்தும் அவர் தவறாக நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 19 நோயாளிகளுடன் தொடர்புடையது. குறிப்பாக, இதில் பலியானவர்கள் அனைவரும் 43 முதல் 104 வயதுடையவர்கள்.
இது குறித்து பேசிய அட்டர்னி ஜெனரல் மைக்கேல் ஹென்றி, ``ஹீதர் பிரஸ்டி மீதான குற்றச்சாட்டுகள் கவலையளிக்கின்றன. தன்னுடைய நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதில் நம்பிக்கை கொண்டவரான ஒரு செவிலியர், வேண்டுமென்றே அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதை எவ்வாறு தேர்வு செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். மருத்துவம் அல்லது பராமரிப்பு சேவையிலுள்ள ஒவ்வொரு நபரும் பாதுகாப்பாகவும் அக்கறையுடனும் உணர வேண்டும்.செவிலியர் கைது
எனவே, இதில் குற்றம்சாட்டப்பட்ட நபர் தன்னுடைய குற்றங்களுக்குப் பொறுப்பேற்கவும், பென்சில்வேனியர்களை பாதுகாப்பு சார்ந்த எதிர்காலத் தீங்குகளிலிருந்து பாதுகாக்கவும் எனது அலுவலகம் அயராது உழைக்கும்” என்று கூறினார்.
தற்போதுவரை, கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். ஹீதர் பிரிஸ்டி தற்போது, ஜாமீன் கிடைக்காமல் பென்சில்வேனியாவின் பட்லர் கவுண்டி சிறையில் போலீஸ் காவலில் இருக்கிறார்.Israel Hamas conflict: அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பதற்கான `ரகசியப் பின்னணி' என்ன? Detailed Explanation
http://dlvr.it/SyQ4Gd
Sunday, 5 November 2023
Home »
» அமெரிக்கா: அளவுக்கதிகமான இன்சுலினால் நோயாளிகள் பலி; காரணமான செவிலியர் கைது! - `பகீர்' சம்பவம்







0 comments:
Post a Comment