இன்றைய உலகில், அமெரிக்காவை அச்சுறுத்தும் சர்வதேச சக்திகளில் ஒன்றாக வடகொரியா திகழ்கிறது. மிகவும் கடுமையான சட்டத்திட்டங்கள் கொண்ட நாடும்கூட. சிறிய விஷயமாக இருந்தாலும் அரசின் ஆணைகளைப் பின்பற்றாவிட்டால், மரண தண்டனைக்கூட கொடுக்கத் தயங்காதவர் அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன். இந்த நிலையில், இப்படிப்பட்ட வடகொரியா அரசு பற்றிய சுமார் அரை நூற்றாண்டு தகவல் ஒன்று, தற்போது வெளிவந்திருக்கிறது.வடகொரியா - ஸ்வீடன்
அதாவது, 1970-களில் பொருளாதாரத்தில் வலுவான நாடுகளில் ஒன்றாக உருவெடுக்கத் தொடங்கிய வடகொரியா, தனது வெளிநாட்டு மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்துக்கான அணுகலை விரிவுபடுத்த, மேற்கத்திய தொழில்மயமான நாடுகளிலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்யத் தொடங்கியது. கிட்டத்தட்ட அதேசமயத்தில்தான், ஸ்வீடிஷ் வணிகங்களும் ஒரு நம்பிக்கைக்குரிய புதிய சந்தையாக விரிவடைவதை எதிர்பார்த்துக் கிடந்தன. அதற்கான சாத்தியக்கூறுகளாக வடகொரியாவைப் பார்த்தது ஸ்வீடிஷ் வணிகங்கள்.
அப்போது, ஸ்வீடன் 1974-ல் 1,000 வோல்வோ 144s மாடல் கார்களை ஏற்றுமதி செய்வதாக வடகொரியாவுடன் பெரிய அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த 1,000 வோல்வோ 144s மாடல் கார்களும் இறக்குமதி செய்ய, இப்போது அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் இல்-சங் அன்று ஆர்டர் செய்தார். இதன் அப்போதைய மதிப்பு 73 மில்லியன் டாலர். அந்த ஆண்டின் இறுதியிலேயே மொத்த கார்களும் வடகொரியாவில் வந்திறங்கிவிட்டன.Volvo Car
தற்போது, இதில் சோகம் என்னவென்றால், இது நடந்து 49 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும், ஒப்பந்தத்தின்படி 1,000 வோல்வோ கார்களுக்கான பணத்தை, ஸ்வீடனுக்கு இன்றுவரை வழங்காமலிருக்கிறது வடகொரியா. அதேசமயம், கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஸ்வீடன் அரசு தனது பொது நிதியிலிருந்து மொத்த தொகையையும் ஏற்கெனவே செலுத்திவிட்டது.
தற்போது வட்டியும், முதலுமாகச் சேர்த்து ஸ்வீடனுக்கு வடகொரியா வழங்கவேண்டிய மொத்த தொகை தோராயமாக 330 மில்லியன் டாலர். ஸ்வீடன் அதிகாரிகளும், ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை வட கொரியாவுக்கு பில்களை (Bills) அனுப்பிவருகின்றனர். ஆனால், வடகொரியா இதனைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இனியும் கண்டுகொள்ளுமா என்றும் தெரியவில்லை.வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்
இதில், கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலான சமயங்களில் சிறப்பு நோக்கங்களுக்காக இந்த கார்களை இன்றும் பயன்படுத்திவருகிறது வடகொரியா. இப்படியிருக்க, ஹிஸ்டரி விட்ஸ் (History Vids) என்ற X வலைதள பக்கம், இதனை `வரலாற்றின் மிகப்பெரிய கார் திருட்டு' எனக் குறிப்பிட்டு, சாலையில் வோல்வோ கார் செல்லும் வீடியோவைப் பகிர்ந்திருக்கிறது.
In the 1970s, North Korea ordered 1,000 Volvo cars from Sweden. The cars were shipped & delivered but North Korea just didn't bother paying & ignored the invoice. Till this day the bill remains unpaid making it the largest car theft in history. pic.twitter.com/SYbubt8due— Historic Vids (@historyinmemes) February 1, 2023
கடந்த பிப்ரவரியில் பகிரப்பட்ட அந்தப் பதிவில், ``1970-களில் வடகொரியா ஸ்வீடனிடம் 1,000 வால்வோ கார்களை ஆர்டர் செய்தது. கார்களும் டெலிவரி செய்யப்பட்டன. ஆனால், அதற்குப் பணம் தரவேண்டும் என்பதை வடகொரியா கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து பில்களை புறக்கணித்தது. இன்றுவரை பில் செலுத்தப்படாமல் இருக்கிறது. இதுவே வரலாற்றில் மிகப்பெரிய கார் திருட்டு" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.வடகொரியா: பைபிள் வைத்திருந்த குடும்பமே கைது; 2 வயதுக் குழந்தைக்கு ஆயுள் தண்டனை-அமெரிக்கா பகீர் தகவல்
http://dlvr.it/Syhh14
Saturday, 11 November 2023
Home »
» 1,000 Volvo Cars: `வரலாற்றின் மிகப்பெரிய கார் திருட்டு' - 49 ஆண்டுகளாக ஸ்வீடனை ஏமாற்றும் வடகொரியா!







0 comments:
Post a Comment