இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு தரப்பு மோதலில் இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். சர்வதேச நாடுகளும், ஐ.நா சபையும் பலமுறை போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தும், இன்றுவரை அதைப் புறக்கணித்துப் போர் தொடரும் என அறைகூவல் விடுகிறது இஸ்ரேல். பிணைக்கைதிகளை விடுவிக்காமல், தங்கள் நாட்டு மக்களைப் பலி கொடுத்துக்கொண்டிருக்கிறது ஹமாஸ்.வடக்கிலிருந்து தெற்கு காஸா நோக்கிப் பயணப்படும் பாலஸ்தீனர்கள்
இந்த நிலையில், வடக்கு காஸாவில் தினசரி நான்கு மணிநேரம் மனிதாபிமான அடிப்படையில் போர் இடை நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக, அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``பாலஸ்தீனத்தின்மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்துவதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தனிப்பட்ட முறையில் பலமுறை பேசியிருக்கிறார்.
அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரின் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வடக்கு காஸாவில் தினசரி நான்கு மணிநேரம் மனிதாபிமான போர் இடை நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டிருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் எதுவும் இருக்காது என்றும், இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்திருக்கிறது.இஸ்ரேல் - காஸா தாக்குதல்
மேலும் ஒவ்வொரு நாளும் போர் இடை நிறுத்தம் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு, எப்போதிலிருந்து எப்போதுவரை போர் நிறுத்தப்படும் என்ற நேரம் அறிவிக்கப்படும். அந்த நேரத்தில் நிவாரணங்களையும், உணவு, தண்ணீர், மருந்துகளைப் பெறவும் தெற்கு காஸாவுக்கு மக்கள் செல்வது அனுமதிக்கப்படும். எத்தனை நாள்கள் இது தொடரும் எனத் தெரியவில்லை. நேற்று மட்டும் சுமார் 50,000 பாலஸ்தீனர்கள் தெற்கு காஸாவை நோக்கி இடம் பெயர்ந்திருக்கிறார்கள். சர்வதேச சட்டத்துக்கு இணங்குவதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சரியான திசையில் இஸ்ரேல் பயணிக்கும் என நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``தெய்வாதீனமாக இஸ்ரேலிய ராணுவம் சிறப்பாகச் செயல்படுவதாக நான் நினைக்கிறேன். எவ்வளவு நாள்கள் ஆனாலும், எங்களின் குறிக்கோள் நிறைவேறும்வரை போரை நிறுத்தமாட்டோம். நாங்கள் போரை நிறுத்தினால், அது சரணடைதலாகும். மேலும், நாங்கள் காஸாவை ஆக்கிரமிக்க நினைக்கவில்லை.இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
அதை ஆளும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இஸ்ரேல் யாரையும் அகதிகளாக்க விரும்பாது. பாலஸ்தீனத்தில் உறுதியான ஓர் அரசை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் ஹமாஸ் போன்ற அமைப்பு மீண்டும் தோன்றுவதைத் தடுக்கும். காஸாவுக்குள் மீண்டும் நுழைவதற்கு இஸ்ரேலியப் படைகள் தயாராக இருக்க வேண்டும். ஹமாஸ் குழு அழிக்கப்பட்ட பிறகு, பாலஸ்தீனத்துடனான எங்கள் பேச்சுவார்த்தை தொடரும்" எனத் தெரிவித்திருக்கிறார்.இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காஸா... இனி என்ன?!
http://dlvr.it/Syf6x7
Friday, 10 November 2023
Home »
» Israel-Gaza: `தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்; காஸாவை ஆக்கிரமிக்கும் எண்ணமில்லை!' - இஸ்ரேல்






0 comments:
Post a Comment