Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Monday, 6 November 2023

அமெரிக்கா: மனைவியை 17 முறை கத்தியால் குத்திக் கொன்ற இந்தியர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

கேரள மாநிலம் செங்கனாசேரியை சேர்ந்தவர் ஃபிலிப் மேத்யூ (37). அவருக்கும் அதே மாநிலத்தின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த செவிலியரான மெரின் ஜாய் (27) என்பவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. இருவருக்கும் ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில், கணவன் மனைவிக்கு மத்தியில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. இதனால், மெரின் ஜாய் இந்தியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவின் ப்ரோவர்ட் ஹெல்த் கோரல் ஸ்பிரிங்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார்.மெரின் ஜாய் - ஃபிலிப் மேத்யூ

2020-ம் ஆண்டு அமெரிக்கா சென்ற ஃபிலிப் மேத்யூ. நேராக மருத்துவமனைக்குச் சென்று, கார் பார்க்கிங்க் பகுதியில் மெரின் ஜாயிடம் பேசியிருக்கிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மெரின் ஜாயை 17 முறைக் குத்தி சரித்திருக்கிறார். இதை அங்கு பணியிலிருந்த மற்றொரு ஊழியர் பார்த்ததும், அவரது காரை மெரின் ஜாய் மீது ஏற்றிவிட்டுத் தப்பியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த மெரின் ஜாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக புளோரிடா காவல்நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.

மேலும், குற்றவாளியான ஃபிலிப் மேத்யூவையும் கைது செய்தது. இந்த வழக்கு புளோரிடா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. ஃபிலிப் மேத்யூ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதின் அடிப்படையில், அவருக்கு ஆயுள் தண்டனையும், மெரின் ஜாயை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய குற்றத்துக்காகக் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்புக் குறித்துப் பேசிய மெரின் ஜாய்யின் தாயார், "எனது மகளைக் கொன்றவருக்குச் சரியான தண்டனை வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், இவ்வளவு விரைவில் சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்துவிட்டதை அறிந்து நிம்மதியடைகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
கர்நாடகா: வீடு புகுந்து கொலைசெய்யப்பட்ட சுரங்கத்துறைப் பெண் அதிகாரி - டிரைவரைக் கைதுசெய்த காவல்துறை


http://dlvr.it/SyV1V8

0 comments:

Post a Comment