`எங்கள் நாட்டைப் பாதுகாக்கிறோம். எங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. எனவே, ஹமாஸை முற்றிலுமாக அழிக்காமல் விட மாட்டோம். இதில் நாங்கள் வெற்றிபெறும் வரை இந்தப் போர் நிற்காது' எனக் கூறி பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், ஐ.நா உட்பட சர்வதேச நாடுகளின் போர்நிறுத்தக் குரல்களுக்கு செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்காவும் இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக, `ஹமாஸை விட்டுவிட்டால் அவர்கள் ஒருங்கிணைந்து மீண்டும் தாக்குதல் நடத்தலாம். இஸ்ரேலின் தற்காத்துக்கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதும் முக்கியம்' என்று கூறிவருகிறது.இஸ்ரேல் - அமெரிக்கா
இவற்றுக்கிடையில், பாலஸ்தீனத்தின் காஸா நகரில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருப்பதை `இனப்படுகொலை' எனத் தெரிவித்திருக்கும் இரான், `அமெரிக்காவின் உதவி, பாலஸ்தீனியர்களைக் கொல்ல இஸ்ரேலை ஊக்குவிக்கிறது' எனக் குற்றம்சாட்டியிருக்கிறது.
முன்னதாக, இராக் நாட்டுக்கு இன்று வருகை தந்த இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி (Ebrahim Raisi), தெஹ்ரானில் (Tehran) நடந்த கூட்டுச் செய்தி மாநாட்டில், இராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானியுடன் (Mohammed Shia al-Sudani) கலந்துகொண்டார். அதில், இஸ்ரேலின் தாக்குதல் குறித்தும், அமெரிக்காவின் செயல்பாடுகள் குறித்தும் பேசிய இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி, ``இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவி, பாலஸ்தீனிய மக்களைக் கொல்லவும், அவர்கள்மீது கொடூரமான செயல்களை நடத்தவும் இஸ்ரேலை ஊக்குவிக்கிறது.இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி
மனிதகுலத்துக்கு எதிரான இந்தக் கொடூரமான குற்றங்கள் ஓர் இனப்படுகொலை. இது, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேலால் நடத்தப்படுகிறது. எனவே, பாலஸ்தீனத்தில் குண்டுமழை பொழியப்படுவது கூடிய சீக்கிரம் நிறுத்தப்பட்டு, போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும். அதோடு, பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும்" என்றார்.இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் 11: ஹிஸ்புல்லா முதல் இஸ்லாமிக் ஜிகாத் வரை… இஸ்ரேலின் எதிரிகள் ஏராளம்!
http://dlvr.it/SySckZ
Monday, 6 November 2023
Home »
» Israel: ``இது ஓர் இனப்படுகொலை; பாலஸ்தீனியர்களைக் கொல்ல இஸ்ரேலை ஊக்குவிக்கிறது அமெரிக்கா!" - இரான்







0 comments:
Post a Comment