Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Saturday, 4 November 2023

அமைதிக்கான நோபல் பரிசு: ``வெற்றி நிச்சயம் கிடைக்கும்” சிறையிலிருந்து நர்கஸ் முகமதி எழுதிய கடிதம்...

ஈரானிய பெண்களின் உரிமைக்காக அதிகாரத்தையும், அரசையும் எதிர்த்துப் போராடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நர்கஸ் முகமதி, 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். 

தனது வாழ்நாளில் பத்துக்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு, டெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் 2012 முதல் அடைக்கப்பட்டுள்ளார்.சிறை

12 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நர்கஸ் முகமதி, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கு நன்றி கடிதம் எழுதி இருக்கிறார். 

சிறையில் இருந்து எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை அவரின் மகள் கியானா வாசிக்க, அந்தக் காட்சி வீடியோவாக நோபலின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், ``உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்; இறுதி வெற்றிவரை ஈரான் மக்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எவினில் அடைக்கப்பட்டுள்ள 46 பெண் கைதிகள் சார்பாக நோபல் கமிட்டிக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.   

இந்த இயக்கத்தின் பலம் ஈரானிய பெண்களின் அமைப்பில் உள்ளது. நாங்கள் விரும்பாததைவிட எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக அறிவோம். வெற்றி எளிதானது அல்ல, ஆனால் அது நிச்சயம் கிடைக்கும். நர்கஸ் முகமதி | Narges Mohammadi நமக்குள்ளே: ஆயிரமாயிரம் பெண்களின் வெற்றியில் ஒரு புள்ளியாக... அவள் விகடன்!

நாங்கள் அதை நம்புகிறோம், வெற்றியில் உறுதியாக இருக்கிறோம்’’ என்று கடிதத்தில் கூறியுள்ளார்.    

ஈரானில் நடந்த போராட்ட இயக்கத்தை மேற்கத்திய நாடுகளின் தலைமையிலான நாசவேலை என்று தெஹ்ரான் கூறி வருகிறது. முகமதிக்கு அமைதி பரிசு வழங்க முடிவெடுத்ததை அடுத்து மனித உரிமைகள் பிரச்னையில் நோபல் குழு தலையிட்டு அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


http://dlvr.it/SyMnrd

0 comments:

Post a Comment