Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 31 October 2023

கிருஷ்ண ஜன்மபூமி - ஷாஹி ஈத்கா தகராறு: உயர் நீதிமன்றத்துக்கு 16 வழக்குகள் மாற்றம்

 

மதுராவிலுள்ள கிருஷ்ண ஜன்ம பூமி - ஷாஹி ஈத்கா தகராறு தொடர்பான மொத்தம் 16 சிவில் வழக்குகளை அலாகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மதுரா மாவட்ட நீதிமன்றம் மாற்றியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வாக்குமூலம் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அலாகாபாத் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி மயங்க் குமார் ஜெயினுக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒதுக்கியுள்ளார், நவ. 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட நீதிபதி முன் வந்த மேலும் இரு வழக்குகளையும் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கே ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்த பதிவாளர், உச்ச நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிப்பதில் நேரிட்ட தாமதத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

கிருஷ்ண ஜன்ம பூமி - ஷாஹி ஈத்கா பிரச்னை தொடர்பான இந்த வழக்குகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஹிந்து பக்தர்கள் கேட்டுக்கொண்டனர். எனினும், இது சரியான நடைமுறை அல்ல, எல்லாராலும் உயர் நீதிமன்றத்துக்குப் பயணம் செய்ய முடியாது என்று மசூதி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்னை தொடர்பான விசாரணையை வரும் நவ. 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்ளவிருக்கிறது.

விசாரணையில் தாமதத்தைத் தவிர்க்க இந்த வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

கிருஷ்ண ஜன்ம பூமி - ஷாஹி ஈத்கா பிரச்னை தொடர்பாக, மதுராவிலுள்ள வெவ்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.  பொதுவாக, கிருஷ்ணர் பிறந்த இடம் என நம்பப்படும் இடத்தில்தான் ஈத்கா  வளாகம்  கட்டப்பட்டுள்ளதாகவும் இந்த இடத்தில் கோவில் இருந்ததாகவும் இந்த வழக்குகள் குறிப்பிடுகின்றன.



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/omcFDqt https://ift.tt/SbQW5Ah
via IFTTT

Monday, 30 October 2023

AI: `நான் எப்போது இப்படி பேசினேன்?’ - ஏஐ குறித்து ஜோ பைடன்

உலகம் முழுவதும் AI கோலோச்சத் தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வெற்றிக்குப் பிறகு AI கருவிகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டன. பல புதிய புதிய AI கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் ஆய்வுகளுக்கும் நிதியும் குவிந்து வருகிறது. அதேநேரம் மற்றொருபுறம் AI துறையால் பெரிய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் அதிகரித்தே வருகிறது.செயற்கை நுண்ணறிவு

சமீபத்தில், AI துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட, இந்த ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற, AI துறையின் காட்பாதர் என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், "எதிர்வரும் காலத்தில் AI துறையால் மிகப் பெரிய ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, AI என்று வரும் போது அரசும் சரி, பெரும் நிறுவனங்களும் சரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என எச்சரித்திருந்தார். இந்த நிலையில், AI துறையை ஒழுங்குபடுத்துவதற்கான நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று வெளியிட்டு, அதன் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

அப்போது பேசிய அவர், "AI சாதனங்கள் மக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படுகின்றன. ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஆடியோ, வீடியோ-க்கள் ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் போலி செய்திகளைப் பரப்பவும், மோசடி செய்யவும் பயன்படும் சூழல் நிலவுகிறது. உங்கள் குரலை மூன்று வினாடிகள் பதிவு செய்தாலே போதும்.... அப்படிதான் நான் பேசியதாக ஒரு வீடியோ வெளியானது. அதில், நான் சொல்லாததை நானே சொன்னது போல வீடியோ இருந்தது. அதனை கேட்ட போது, `நான் எப்போது இப்படி பேசினேன்?’ எனக் கேட்டேன். இனி எல்லாம் AI

எனவே, இந்த நுண்ணறிவு சாதனத்தின் பாதுகாப்பும், புதிய தரநிலைகளை நிறுவுவதும் அமெரிக்கர்களின் தனி உரிமையைப் பாதுகாக்கும் என்ற அடிப்படையில், AI உருவாக்குநர்கள் தங்கள் பாதுகாப்பு சோதனை முடிவுகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களை அமெரிக்க அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். AI மூலம், பாதுகாப்பு - உற்பத்தி சட்டத்தின்படி, தேசியப் பாதுகாப்பு, தேசிய பொருளாதார பாதுகாப்பு, தேசிய பொதுச் சுகாதாரம் - பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் கடுமையான ஆபத்து ஏற்படுத்தும் சூழல் நிலவுவதால், AI உருவாக்கும் நிறுவனங்கள், தங்களின் பயிற்சிகள் குறித்தும், சோதனைகளின் முடிவுகள் குறித்தும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் AI அமைப்புகள் பாதுகாப்பானவை மற்றும் நம்பகமானவை என்பதை பொதுவில் வெளியிடுவதற்கு முன் உறுதி செய்யும். மேலும், AI -யால் உருவாக்கப்படும் வீடியோ - ஆடியோ உள்ளிட்டவற்றுக்கு லேபில், வாட்டர் மார்க் போன்றவை மூலம் அடையாளப்படுத்தும் வழிகாட்டுதலை வர்த்தகத் துறை விரைவில் உருவாக்கவிருக்கிறது. இதனால், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் தங்கள் அரசிடமிருந்து பெரும் தகவல்கள் உண்மையானவைதானா என்பதை எளிதாக அறிந்து கொள்ளமுடியும்.AI

அதன் மூலம், அரசு பொதுமக்களின் சிவில் உரிமைகளை மேம்படுத்தி, நுகர்வோர் மற்றும் தொழிலாளர்களுக்குப் பக்கபலமாக நிற்கும். புதுமை மற்றும் போட்டியை ஊக்குவித்து, உலகம் முழுவதும் அமெரிக்காவின் தலைமையை மேம்படுத்தும். இந்த கருவிகளைப் பயன்படுத்தும் உலகெங்கிலும் உள்ள அரசுகளுக்கு அமெரிக்கா ஒரு முன்மாதிரியாக இருக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
இந்தியா Israel-க்கு `உறுதியான' ஆதரவு! Modi அரசின் நிலைப்பாட்டுக்கு என்ன காரணம்? |Palestine |America


http://dlvr.it/Sy9nnk

Sunday, 29 October 2023

செயற்கை கருவுறுதலின்போது ஏமாற்றிய மருத்துவர்; 34 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தை நாடிய பெண்!

தற்போதைய உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் இன்னும் சில காரணங்களால் குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் என்பது கடந்த தலைமுறைகளுடனான ஒப்பீட்டளவில், அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இத்தகைய சூழலில் கருவுற இயலாத தம்பதிகள் செயற்கை கருவுறுதல் முறையையே பெரிதும் நாடுகின்றனர். இந்த நிலையில் 34 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை கருவுறுதல் சிகிச்சையின்போது மருத்துவர் ஒருவர், அவருடைய விந்தணுவைப் பயன்படுத்தியதாக அமெரிக்க பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.செயற்கை கருவுறுதல்

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் ஹேய்ஸ் (67). இவர், கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கணவருடன் இயற்கையாகக் கருத்தரிப்பதில் சிரமத்தை சந்தித்து வந்திருக்கிறார். அதையடுத்து கணவரும், மனைவியும், செயற்கை கருவுறுதல் சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டனர். அதற்காக 1989-ம் ஆண்டு இருவரும் வாஷிங்டனின் ஸ்போகனிலுள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் டேவிட் ஆர்.கிளேபூல்-ஐ நாடினர். சிகிச்சையின்போது தம்பதி, யாரென்று தெரியாத நபரிடமிருந்துதான் விந்தணுவை நன்கொடையாகப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பதியினர், நன்கொடையாளரின் முடி மற்றும் கண் நிறம் போன்ற குறிப்பிட்ட பண்புகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். மருத்துவர் கிளேபூலும் அவர்களின் விருப்பத்தின்படியே நன்கொடையாளர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் உடல் நலம் மற்றும் மரபணுக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என உறுதியளித்திருக்கிறார். இதற்கிடையில் சிகிச்சை ஒவ்வொன்றிற்கும் 100 டாலரைக் கட்டணமாக மருத்துவர் பெற்றிருக்கிறார். சிகிச்சைக்குப் பின்னர் கருவுற்ற ஹேய்ஸ், 1990-ல் ப்ரியான ஹேய்ஸ் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நீதிமன்றம்

தற்பொழுது 33 வயதாகும் ப்ரியான ஹேய்ஸ், கடந்த ஆண்டு மரபணு சோதனை மற்றும் வம்சாவளியைக் கண்டறிவதற்கான அமெரிக்க இணையதளமான `23andMe' -யில் தனது டி.என்.ஏ-வை சமர்ப்பித்திருக்கிறார். அதன் பின்னர், டாக்டர் கிளேபூல் தான் தனது உயிரியல் தந்தை என்பதையும் அவர் கண்டுபிடித்திருக்கிறார். இதனையறிந்த ஷரோன் ஹேய்ஸ், டாக்டர் கிளேபூல் பொய்யான தகவல்களைக் கூறி ரகசியமாக அவருடைய விந்தணுவைப் பயன்படுத்தி தன்னை கருவுறச் செய்திருப்பதாக ஸ்போகன் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.வெறும் 10 ரூபாய் கட்டணம்... 30 ஆண்டுகளாக வீல் சேரில் வந்து சிகிச்சை தரும் டாக்டர்!


http://dlvr.it/Sy61C3

Israel-Hamas War: ``மீண்டும் சிலுவைப் போர் ஏற்படும் சூழலை உருவாக்குகின்றனர்!" - துருக்கி அதிபர்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே கடந்த மூன்று வாரங்களாகப் போர் நடைபெற்றுவருகிறது. அக்டோபர் 7-ல் ஹமாஸ் தாக்கிய பிறகு, பதிலடி என்ற பெயரில் இஸ்ரேல் இன்றுவரை பாலஸ்தீனத்தின் காஸா மீது போர் தொடுத்துவருகிறது. முதலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் அப்பாவி இஸ்ரேலியர்களும், அதன் பிறகு இன்றுவரை இஸ்ரேல் நடத்திவரும் பதில் தாக்குதலில் 7,700-க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.இஸ்ரேல் - அமெரிக்கா

இவ்வாறு கிட்டத்தட்ட 9,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும்கூட, போர் நிறுத்தத்துக்கு குரல் கொடுக்காமல் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகள் இஸ்ரேல் தாக்குதலை ஆதரிக்கின்றன. அதோடு, போரை நிறுத்தவேண்டி ஐ.நா-வில் ரஷ்யா, சீனா கொண்டு வந்த தீர்மானத்தைக்கூட அமெரிக்கா வீழ்த்தியது. மேலும், நேற்று முன்தினம் ஐ.நா-வில் ஜோர்டான் சார்பில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தின்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 120 நாடுகள் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்றபெயரில் வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டது இந்தியா.

இந்த நிலையில், மேற்குலக நாடுகள் கிறிஸ்தவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக, சிலுவைப் போர் சூழலை உருவாக்குவதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) குற்றம்சாட்டியிருக்கிறார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று அவரது கட்சி நடத்திய பாலஸ்தீனிய ஆதரவு பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய எர்டோகன், ``காஸாவில் நடந்த படுகொலைகளுக்குப் பின்னாலிருக்கும் முக்கிய குற்றவாளி மேற்குலகம்தான். அங்கு நடந்த படுகொலைகள் முழுக்க முழுக்க மேற்குலகின் செயல். இஸ்ரேல் ஒரு போர்க் குற்றவாளிபோல நடந்து கொள்கிறது. நிச்சயமாக, ஒவ்வொரு நாட்டுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், இந்த விவகாரத்தில் நீதி எங்கே இருக்கிறது...துருக்கி அதிபர் எர்டோகன்

உக்ரைன் பொதுமக்கள் மரணங்களுக்கு கண்ணீர் வடிக்கும் மேற்குலக நாடுகள், பாலஸ்தீன குடிமக்களின் மரணங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கிறது. இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் மற்றும் அனைத்து பாசாங்குத்தனங்களுக்கும் எதிரானவர்கள் நாங்கள். இஸ்ரேலின் நட்பு நாடுகள் கிறிஸ்தவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக, சிலுவைப் போர் சூழலை உருவாக்குகின்றன. நீங்கள் மீண்டும் அத்தகைய மோதலை தொடங்க விரும்புகிறீர்களா? ... எனவே, உரையாடலுக்கான எங்கள் அழைப்பைக் கேளுங்கள், அமைதியில் யாரும் இழக்கப்படுவதில்லை" என்று கூறினார்.Israel - Hamas War: ``இரண்டாம் கட்ட போரை தொடங்கிவிட்டோம்; எதிரிகளை மண்ணுக்கு..!" - நெதன் யாகு சபதம்


http://dlvr.it/Sy5m8w

Saturday, 28 October 2023

`கொலை, ஆயுத கடத்தல்...' - 19 வயது ஹரியானா இளைஞரை பிடிக்க Interpol Red Corner Notice... பின்னணி என்ன?

காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி கனடா பிரஜைகளுக்கு விசா கொடுப்பதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் சுகா என்பவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதில், இந்தியாவிற்கு பங்கு இருப்பதாக கனடா குற்றம்சாட்டியதால் இரு நாடுகளிடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கனடா தூதரகங்களில் அளவுக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களை உடனே நாட்டைவிட்டு வெளியேறும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனால் நாட்டில் டெல்லி தவிர்த்து இதர பகுதியில் உள்ள கனடா தூதரகங்கள் விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கின்றன.

இந்நிலையில் ஹரியானாவை சேர்ந்த யோகேஷ் கடியான் என்ற 19 வயதே நிரம்பிய மாஃபியா கும்பலைச் சேர்ந்தவன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக இரண்டு ஆண்டுகளாக பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. தனது 17 வயதிலேயே கொலை, கொள்ளை மற்றும் ஆயுத கடத்தில் உள்ளிட்டவற்றில் தொடர்புடைய யோகேஷ், அமெரிக்காவில் உள்ள ஆயுத சப்ளையர்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவன். அவன் தனது 17 வயதிலேயே போலி பாஸ்போர்ட் மூலம் அமெரிக்காவிற்கு சென்று அங்கு பதுங்கி இருக்கிறான் என்று தெரிய வந்துள்ளது. அகமதாபாத் சிறையில் இருக்கும் பஞ்சாப் பாடகர் கொலையில் முக்கிய குற்றவாளியான லாரன்ஸ் பிஷ்னோயின் பரம எதிரியான பாம்பிஹா கூட்டத்தினருடன் சேர்ந்துகொண்டு, லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்திற்கு எதிராக யோகேஷ் செயல்பட்டு வருகிறான்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள யோகேஷ், ஆயுதங்களை கையாள்வதில் கைதேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து ஆயுதங்களை இந்தியாவிற்குள் கொண்டு வந்து லாரன்ஸ் கூட்டாளிகளை குறிபார்த்து அழிப்பதில் யோகேஷ் முன்னிலை வகித்து வருகிறான். பாம்பிஹாவின் நெருங்கிய கூட்டாளியான லக்கி பட்டியா, அர்ஜென்டினாவில் பதுங்கி இருக்கிறான். அவனும் யோகேஷும் இணைந்து லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளை அழிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

லாரன்ஸின் நெருங்கிய கூட்டாளியான கோல்டி பிரர் மற்றும் லாரன்ஸ் சகோதரர் அன்மோல் ஆகியோர் அமெரிக்காவில் பதுங்கி இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரையும் கொலைசெய்ய யோகேஷும், லக்கி பட்டியாவும் திட்டமிட்டு வருகின்றனர். இது குறித்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து யோகேஷை கைதுசெய்ய இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. யோகேஷ்

சமீபத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி ஹரியானாவில் உள்ள யோகேஷ் வீட்டில் ரெய்டு நடத்தியது. அதோடு அவனைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1.5 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், அவர்கள் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கின்றனர். எனவே அவர்களை பிடிக்க மத்திய அரசு இன்டர்போல் உதவியை நாடி இருக்கிறது. காலிஸ்தான் ஆதரவாளர் கரன்வீர்சிங்கிற்கு எதிராக கடந்த மாதம் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. உள்ளூர் போலீஸார் மூலம் தேடப்படும் நபர்கள், எந்த நாடுகளில் தங்கி இருந்தாலும் அவர்களை கைதுசெய்து நாடு கடத்தும் வரை பாதுகாப்பாக வைத்திருக்க இன்டர்போலுக்கு அதிகாரம் இருக்கிறது.

ஏற்கெனவே அமெரிக்காவில் பதுங்கி இருப்பதாக கருதப்படும் ஹிமன்சு மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. ஹிமன்சு மற்றும் யோகேஷ் ஆகியோரும் அமெரிக்காவில் இணைந்து செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உ.பி: 50 வழக்குகளில் தொடர்புடைய கேங்ஸ்டர் கோர்ட்டில் சுட்டுக் கொலை; வக்கீல்போல் வந்தவர் வெறிச்செயல்!


http://dlvr.it/Sy5JcB

16 வயது சிறுவனுக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் - நடந்தது என்ன?!

அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் நோவா நெய். இவர் கடந்த ஆண்டு துப்பாக்கியுடன் திரிந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறார் தடுப்பு மையத்தில் இருந்தார். விசாரணையில், ஓக்லஹோமாவின் துல்சா நகரத்தை அச்சுறுத்தும் ஹூவர் கிரிப்ஸ் குழுவுடன் இணைய விரும்பியதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் சிறார் தடுப்பு மையத்திலிருந்து தப்பித்த சிறுவன், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான்.சிறை

உடனே அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இதற்கிடையில், சிறுவன் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கு தொடர்பாக பேசிய வழக்கறிஞர் மோர்கன் மெடர்ஸ், "சிறுவன் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவனுக்கான சரியான மருத்துவ சிகிச்சையும் மறுக்கப்பட்டிருக்கிறது. அவனின் இந்த நிலைக்கு அவனை முழுவதும் புறக்கணித்து பிரிந்த அவனது பெற்றோர்கள்தான் காரணம் என அவரது அத்தை சாட்சியமளித்திருக்கிறார். அவனுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகளை அவன் நிராகரித்து சிறை ஊழியர்களை சிரமப்படுத்தியிருக்கிறான்" எனக் குறிப்பிட்டார்.

எதிர்தரப்பு வழக்கறிஞர், "ஏற்கெனவே சிறார் தடுப்பு மையத்தில் இருந்த சிறுவன், மலத்தை ஜெயில் சுவர் முழுவதும் தடவுவது, தப்பிக்க முயற்சிப்பது, காவலர்களுக்கு தொல்லையளிப்பது என அதீதமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறான். அவனை வெளியே விடுவது ஆபத்தை ஏற்படுத்தும்" என வாதிட்டார். அதைத் தொடர்ந்து, நீதிமன்றம்,"அக்டோபர் 23 அன்று, துப்பாக்கி வைத்திருந்தது, கொல்லும் நோக்கத்துடன் துப்பாக்கியை பயன்படுத்தியது, போதைப்பொருள் வைத்திருந்தது உள்ளிட்ட பத்து குற்றச்சாட்டுகளுக்காக 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது" எனத் தீர்ப்பளித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
USA: துப்பாக்கியுடன் சுற்றும் இளைஞர்... 22 பேர் பலி - வெளியே வர வேண்டாம் எனக் காவல்துறை எச்சரிக்கை!


http://dlvr.it/Sy4G88

அமெரிக்கா, கனடாவில் திரும்பப் பெறப்படும் 10 லட்சம் குக்கர்கள்!

பத்து லட்சம் பிரஷர் குக்கர்களையும் உள் பாத்திரங்களையும் திரும்பப் பெறுகிறது அமெரிக்காவிலுள்ள பெஸ்ட் பை நிறுவனம்.

அமெரிக்காவிலும் கனடாவிலும் 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஜூன் மாதம் வரை சுமார் 9.30 லட்சம் இன்சிக்னியா பிரஷர் குக்கர்களை இந்த நிறுவனம் விற்றிருக்கிறது.

இவற்றில் அளவுகள் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு கமிஷன் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக குக்கரைத் திறக்குபோது  உணவுப் பொருள்களுடன் திரவமும் வெளிவந்துவிடுகின்றன. பயன்படுத்துவோர் மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறும் கமிஷன் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதையும் படிக்க..பயங்கரவாதம் வீரியம்கொண்டது; அதற்கு எல்லைகள் தெரியாது: ஐநாவில் இந்தியா

தீக்காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்ட 17 புகார்கள் உள்பட, உணவுப்  பொருள்கள் கொட்டிவிடுவதாக 31 புகார்கள்  பெஸ்ட் பை நிறுவனத்தால்  பெறப்பட்டுள்ளன. கனடாவில் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், குக்கர்களை மாற்றிக்கொள்ள பெஸ்ட் பை நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று நுகர்வோர் அமைப்பு தெரிவித்துள்ளது.



from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/Po7ewJC https://ift.tt/cPgsrty
via IFTTT

Friday, 27 October 2023

IMEC: `இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் அரசியலில் இந்தியாவைக் கோர்த்துவிட்ட பைடன்?' - பின்னணி காரணம் என்ன?!

`இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு, இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா (India-Middle East-Europe Economic Corridor) இடையிலான பொருளாதார வழித்தடத் திட்டம் ஒரு காரணமாக இருக்கலாம்' என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்த நிலையில், `அதிபரின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது' என அமெரிக்க வெள்ளை மாளிகை விளக்கம் அளித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் தலை உருளக் காரணம் என்ன? ஜோ பைடன் - மோடி

அதிபர் ஜோ பைடன் பேச்சு:

நேற்று முந்தினம்(26-10-2023) வாஷிங்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஜி-20 கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட `இந்தியா - ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தடத் திட்டத்தை (IMEC)' தடுப்பதற்காக, இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஹமாஸ் தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நான் உறுதியாக நம்புகிறேன். இதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால், இஸ்ரேலுக்கான பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒட்டுமொத்த பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் நாம் செய்துகொண்டிருக்கும் முன்னேற்றம்தான் இந்த தாக்குதலுக்கான காரணம் என என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது!" எனத் தெரிவித்தார்.Israel Hamas conflict: அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பதற்கான `ரகசியப் பின்னணி' என்ன? Detailed Explanation

அமெரிக்க வெள்ளை மாளிகை மறுப்பு:

இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை, `அதிபர் ஜோ பைடனின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது' என விளக்கம் அளித்திருக்கிறது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி (National Security Council's Strategic Communications Coordinator - John Kirby) பேசியபோது, ``அதிபர் ஜோ பைடன் உண்மையில் கூறவந்த விஷயம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அவர் என்ன கூறினாரென்றால், இந்தியா - ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தடத் திட்டத்தின் மூலம், இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் நாம் ஏற்படுத்த முயற்சிக்கும் இயல்பான உறவு மற்றும் செயல்முறை ஒப்பந்தம் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியிருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இஸ்ரேல் - சவுதி அரேபியாவுக்கு இடையே பகைமை விலகி, ஒற்றுமைக்கான தீர்வு எட்டப்பட்டிருப்பதால், அந்தத் `தீர்வு' தான் ஹமாஸை கோபம்கொள்ளச் செய்து தாக்கல் நடத்த தூண்டியிருக்கும்!" என்ற பொருளில் அமெரிக்க அதிபர் பேசியதாக ஜான் கிர்பி விளக்கமளித்திருக்கிறார்.வெள்ளை மாளிகை - ஜான் கிர்பி

IMEC - பொருளாதார வழித்தடமும் சிக்கலும்:

ஐரோப்பா-ஆப்ரிக்கா- ஆசியா கண்டங்களை `பெல்ட் அண்ட் ரோடு' எனும் பொருளாதார வழித்தடம் மூலம் இணைக்கும் திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு சீனா கொண்டுவந்தது. அதாவது, சீனாவின் பண்டைய பாரம்பரிய பொருளாதார வழித்தடமான `பட்டுப்பாதையை' மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை சாலை, ரயில் மற்றும் கடல்வழி போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டத்தைக் கையிலெடுத்தது. இந்த திட்டத்தில் சுமார் 154 நாடுகளை சீனா சேர்த்துக்கொண்டது. இந்த திட்டம் நிச்சயம் அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக இருக்கும் என்று பல்வேறு உலக நாடுகளும் கருதின. இந்தியா இஸ்ரேலுக்கு `உறுதியான' ஆதரவு! - பாஜக, மோடி அரசின் நிலைப்பாட்டுக்கு என்ன காரணம்?

அந்தநிலையில்தான் சீனாவின் `பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்துக்கு மாற்றாக, அதற்கு சவால் விடுக்கும் விதமாக கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில், ` இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே ஒரு பொருளாதார வழித்தடத்தை உருவாக்கும் IMEC - India-Middle East-Europe Economic Corridor எனும் மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாகச் சேர்ந்து அறிவித்தனர். அப்போது பேசிய இந்தியப் பிரதமர் மோடி, ``IMEC பொருளாதார வழித்தட திட்டம் உலக வர்த்தத்தின் அடித்தளமாக அமையும். அதற்கான முயற்சி இந்திய மண்ணில் எடுக்கப்பட்டிருப்பது உலக வரலாற்றில் இடம்பெறும்!" எனப் பெருமிதம் தெரிவித்திருந்தார். ஜி-20 கூட்டம்

இந்த நிலையில், IMEC திட்டம் முதற்கட்டமாக இந்தியாவின் மும்பை துறைமுகத்தில் தொடங்கி, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகளைக் கடந்து இஸ்ரேல் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கிரீஸ் நாடு வரைக்கும் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் இந்த திட்டத்தில் இஸ்ரேலும் அங்கம் வகிப்பதுதான். ஏற்கெனவே பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பகை உணர்வு இருக்கிறது. பல அரபு நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்க மறுக்கின்றன. இந்தியாவின் IMEC திட்டம்

இந்த இக்கட்டானச் சூழலில் IMEC பொருளாதார வழித்தட திட்டத்தை இருதரப்பு சம்மதத்துடன் கொண்டுபோகும் சவால் இந்தியாவுக்கு இருந்தது. இருப்பினும் பொருளாதார நலனுக்காக இந்தியா மேற்கொண்ட சமரச முயற்சியின் விளைவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகளும் இஸ்ரேலுடன் ஒருமனதான இணைந்து இந்தத் திட்டத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இதனால், பாலஸ்தீனம் - ஹமாஸ் அமைப்புக்கு இதுவரை ஆதரவளித்து வந்த அரபு நாடுகளின் ஆதரவு கையைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் ஹமாஸ் அமைப்புக்குத் தோன்றியிருக்கலாம். ஹமாஸின் இந்த அச்ச உணர்வுதான் சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இஸ்ரேல் மீதான தாக்குதலாக அமைந்திருக்கலாம் என சந்தேகம் எழுப்பி இருக்கிறார் பைடன்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: உலக நாடுகளில் யார் யாரெல்லாம் யார் யார் பக்கம்?!


http://dlvr.it/Sy3YXr

`` குழந்தைகள் கூச்சல் போட்டால், பெற்றோருக்கு அபராதம்" ஹோட்டலின் பாலிசி... ஏன் தெரியுமா?

பல உணவகங்கள் வித்தியாசமான ஆஃபர்களையும், ரூல்ஸ்களையும் அறிமுகப்படுத்தி கவனம் பெறுவதுண்டு. அந்தவகையில் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உணவகம் ஒன்று மோசமான பெற்றோருக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து கவனம் பெற்றுள்ளது. 

அட்லாண்டாவின் ப்ளூ ரிட்ஜ் மலைகளில் அமைந்துள்ள டோக்கோவா ரிவர்சைடு உணவகத்தின் மெனுவில் விதிமுறைகள் வித்தியாசமாக இருந்ததால் அவற்றை ரெட்டிட் தள பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். foodDoctor Vikatan: அடிக்கடி உதடுகளில் வரும் கொப்புளங்கள்... பல்லி எச்சம்தான் காரணமா?

அதில், ``மோசமான பெற்றோருக்கு இந்த உணவகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. பெரியவர்களுக்கான கூடுதல் கட்டணம் எனக் குறிப்பிடப்பட்டு $$$ எனத் தொகையை வெளிப்படுத்தாமல் குறிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் கூச்சலிடும் குழந்தைகளைக் கட்டுப்படுத்த முடியாத மோசமான பெற்றோருக்குக் கூடுதல் கட்டணம்.

உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். `நோ பாலிசி நோ சர்வீஸ்’ என்ற கொள்கையைப் பின்பற்றி உணவகம் செயல்படுகிறது.

அதோடு ஆறு பேருக்கு மேல் குழுவாக வருபவர்களுக்கும், பில்களை பிரித்துக் கொள்பவர்களுக்கும், தனித்தனியாக செக் கொடுப்பவர்களுக்கும், பிறந்தநாள் மெனுவில் இருந்து ஆர்டர் செய்பவர்களுக்கும் கட்டண தொகையில் இருந்து 20 சதவிகித தொகை கழிக்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த முடிவு செய்தீர்கள் என்றால் மெனுவில் குறிப்பிடப்பட்ட விலைகளுக்கும் மேல் கூடுதலாக 3.5 சதவிகித கட்டணம் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. ரெஸ்டாரன்ட் மெனு! கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்குப் புது ரூல்ஸ்! மிஸ் பண்ணாதீங்க...

வாங்கிய உணவைப் பகிர்ந்துகொள்வதற்கு 3 அமெரிக்க டாலர்கள் கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது’’ என்று அந்த மெனுவில் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பதிவிட்டுள்ளார்.

இந்த விதிகள் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. ஒருவர் கமென்டில், ``அடங்காத குழந்தைகளுக்கான கட்டணமாக 3 அமெரிக்க டாலர்கள் விதிக்கப்படுகின்றன. நான் இதை ஓர் உணவகத்தின் மெனுவில் படித்தால், அந்த உணவகத்தை விட்டு வெளியேறிவிடுவேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுபோன்று ரூல்ஸ் போட்டு ரெஸ்டாரன்ட்டில் உங்களிடம் மெனு கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?!


http://dlvr.it/Sy1PVl

இஸ்‌ரேல்-ஹமாஸ் யுத்தம் 5: பாலஸ்தீனர்களுக்கு பரிவு; இஸ்ரேலுடன் உறவு; இந்தியாவின் அரசியல் சாமர்த்தியம்

இஸ்ரேலில் பொதுமக்கள் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் பேசினார், நம் பிரதமர் நரேந்திர மோடி. இந்தத் தாக்குதலுக்கு அதிர்ச்சி தெரிவித்த மோடி, ‘‘இக்கட்டான இந்தத் தருணத்தில் இஸ்ரேல் மக்களுக்காக இந்திய மக்கள் துணை நிற்கிறார்கள்’’ என்று சொன்னார். ஹமாஸ் தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவித்தார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் பிரதமர் நரேந்திர மோடி.

உலக அரங்கில் இது உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. காரணம், இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் பெரும்பாலான தருணங்களில் பாலஸ்தீன மக்களின் பக்கமே இந்தியா நின்றிருக்கிறது. இப்போது திடீரென இஸ்ரேல் பக்கம் சாய்ந்துவிட்டதோ என்று பலரும் அதிர்ச்சியுடன் இந்தியாவின் நிலைப்பாட்டை கவனித்தார்கள். இரு நாட்டு உறவுகளைத் தாண்டி பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் மோடிக்கு தனிப்பட்ட நட்பும் ஆழமாக உள்ளது. அதன் வெளிப்பாடாக இது இருக்கலாம் என்றும் சிலர் காரணம் சொன்னார்கள்.

ஆனால், அடுத்த இரு நாட்களில் இந்திய வெளியுறவுத் துறை ஓர் அறிக்கை வெளியிட்டது. ‘‘இஸ்ரேல் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதலைக் கண்டிக்கிறோம். அதேசமயத்தில், பாலஸ்தீன மக்கள் இறையாண்மை மற்றும் சுதந்திரத்துடன் சாத்தியமான ஒரு சுயாட்சி அரசை அமைக்க இந்தியாவின் ஆதரவு எப்போதும் உண்டு’’ என்றது அந்த அறிக்கை. பிரதமர் மோடி ஒருவித நிலைப்பாட்டிலும், வெளியுறவுத் துறை வேறுவித நிலைப்பாட்டிலும் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.நரேந்திர மோடி

அடுத்த சில நாட்களில் காஸா மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன மக்களுக்கு இரங்கல் தெரிவித்த மோடி, ‘‘இரு தரப்பு மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலைக்குரிய விஷயம். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றார். தொடர்ந்து பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி, பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளைச் செய்யும் என உறுதியளித்தார். அதுபோலவே காஸாவுக்கு இந்திய நிவாரணப் பொருட்கள் உடனே போய்ச் சேர்ந்தன.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நிலப்பரப்புடன் இந்தியாவுக்கு இருக்கும் அரசியல்ரீதியான தொடர்பு என்பது நூற்றாண்டு கடந்தது. முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்திருந்த ஏராளமான இந்திய வீரர்களும் பங்கெடுத்தனர். துருக்கியை ஆண்ட ஒட்டோமான் பேரரசுடன் பிரிட்டிஷ் ராணுவம் நடத்திய யுத்தத்தில், இந்திய வீரர்களே அதிகம் பங்கேற்றார்கள். 1917-ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் காஸா போரில் ஒட்டோமான் பேரரசு மற்றும் ஜெர்மனி படைகள் தோற்றுப் பின்வாங்கின. பாலஸ்தீன நிலப்பரப்பை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் கைப்பற்றுவதற்காகப் போரிட்டவர்கள் இந்திய வீரர்கள்தான்.பெஞ்சமின் நெதன்யா

ஆனால், இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் சுதந்திர இந்தியா தெளிவான முடிவுகளை எடுத்தது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆதரவுடன் இஸ்‌ரேல் என்ற நாடு புதிதாக உருவான நேரத்தில், இந்தியா அதை எதிர்த்தது. பாலஸ்தீன அரேபியர்களுக்காகவும் இஸ்‌ரேலின் யூதர்களுக்காகவும் அந்த நிலப்பரப்பை துண்டாடி ஐ.நா பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அரபு நாடுகளைத் தாண்டி அந்த தீர்மானத்தை எதிர்த்த ஒரே நாடு இந்தியாதான். ‘பாலஸ்தீனர்களும் யூதர்களும் சுயாட்சி உரிமையுடன் வாழும் ஒரு கூட்டாட்சி அரசு அங்கு இருக்க வேண்டும், ஜெருசலேம் நகருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும்’ என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தியின் கருத்தைப் பின்பற்றி நேரு அரசின் கொள்கை முடிவு இருந்தது. ஹிட்லரின் ஆட்சியில் நாஜிக்களிடம் யூதர்கள் சந்தித்த கொடுமைகள், வரலாறு நெடுகவும் அந்த இனம் சந்தித்த பிரச்னைகள் என்று எல்லாவற்றுக்காகவும் காந்தி அனுதாபம் காட்டினாலும், ‘பாலஸ்தீனத்தின் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆறு லட்சம் அரேபியர்களுக்கு அநீதி இழைத்துவிட்டு அங்கு இஸ்ரேல் என்ற புதிய நாட்டை உருவாக்குவது தவறு’ என்றார். நேரு அதைக் குறிப்பிட்டு, ‘‘பாலஸ்தீனப் பிரச்னைக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே காரணம்’’ எனக் குற்றம் சாட்டினார்.

இவ்வளவுக்கும் மத்தியில் இஸ்ரேல் என்ற நாடு உருவானது. மூன்றே ஆண்டுகளில், அதாவது 1950-ம் ஆண்டே இஸ்ரேலை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்தது. சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஆனாலும் 1992-ம் ஆண்டு வரை இஸ்ரேலுடன் தூதரக உறவு ஏற்படுத்திக்கொள்ளாமல் அந்த நாட்டை ஒதுக்கியே வைத்திருந்தது.Nehru

அதற்கு இரண்டு காரணங்கள்... அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பனிப்போர் நடந்த காலங்களில் இஸ்ரேலை ஆதரித்தது அமெரிக்கா. அருகில் இருக்கும் அரபு நாடுகளின் பக்கம் நின்றது சோவியத் யூனியன். அப்போது இந்தியா அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்து நடுநிலை வகித்தாலும், பல விஷயங்களில் ரஷ்யாவைச் சார்ந்திருந்தது. அதனால் இஸ்ரேலுடன் உறவுக்குத் தயாராக இல்லை. இன்னொரு பக்கம், அரபு நாடுகளுடன் இந்தியாவுக்கு இணக்கமான வர்த்தக உறவு இருந்தது. அரபு உலகமே வெறுக்கும் இஸ்ரேலுடன் உறவு கொண்டாடி, அரபு நாடுகளின் கோபத்துக்கு ஆளாகவும் இந்தியா தயாராக இல்லை.

யாசர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை, பாலஸ்தீன மக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதித்துவ அமைப்பாக 1974-ம் ஆண்டே இந்தியா அங்கீகரித்தது. அரபு நாடுகளைத் தாண்டி இப்படி அங்கீகரித்த முதல் நாடு இந்தியாதான்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக் காலத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், துணிச்சலாக முடிவெடுத்து இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார். அரபு நாடுகளின் அதிருப்தி பற்றிக் கவலைப்படாமல் இந்த முடிவை அவர் எடுத்தார். அதேசமயத்தில் பாலஸ்தீனர்களின் சுயாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கும் கொள்கையிலிருந்து அவர் நழுவவில்லை.யாசர் அராபத்

மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளை இணைத்து பாலஸ்தீன சுயாட்சி அரசு அறிவிக்கப்பட்டபோது, அதை முதலில் அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1988-ம் ஆண்டே பாலஸ்தீன அரசை இந்தியா அங்கீகரித்தது. 1996-ம் ஆண்டில் காஸா பகுதியில் இந்தியப் பிரதிநிதியை நியமித்து அலுவலகமும் திறந்தது. பாலஸ்தீன அரசின் தலைமையகம் காஸாவிலிருந்து மேற்குக்கரையில் உள்ள ரமல்லா நகருக்கு மாற்றப்பட்டபோது, இந்தியப் பிரதிநிதி அலுவலகமும் அங்கு மாற்றப்பட்டது. பாலஸ்தீனத்துக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான். 2018-ம் ஆண்டு அங்கு சென்ற மோடி, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத் திரும்பினார். அங்கு அவருக்கு பாலஸ்தீனத்தின் மிக உயரிய விருது அளிக்கப்பட்டது.என்னதான் அடுத்த நாடுகளின் பிரச்னைகளில் துணை நின்றாலும், ஒரு தேசத்தின் வெளியுறவுக் கொள்கை என்பது அவர்களின் சொந்த நலன்கள் சார்ந்தே இருக்கும். இந்தியா அந்த அடிப்படையில்தான் இஸ்ரேலுடன் உறவு கொண்டாடுகிறது. பெருமளவில் ஆயுதங்கள் மற்றும் ராணுவத்துக்கான தற்காப்பு உபகரணங்களை இப்போது இஸ்‌ரேலிடமிருந்து வாங்குகிறது இந்தியா. அதேசமயத்தில் பாலஸ்தீனத்துக்கான ஆதரவையும் கைவிடவில்லை.

ஐ.நா சபை போன்ற பொதுவான இடங்களில் பாலஸ்தீனப் பிரச்னை பேசப்படும்போது இந்தியா அவர்களுக்காகத் துணை நிற்கும். ஆனால், அதுபோன்ற விவாதங்களில் பாலஸ்தீனத்தையும் காஷ்மீரையும் ஒப்பிட்டு பாகிஸ்தான் பேசும். இந்தியா மட்டுமே இதைக் கடுமையாக எதிர்க்கும். ‘இந்த இடத்தில் இது தேவையில்லாத பேச்சு, இரண்டையும் ஒப்பிடுவது தவறு’ என்று அரபு நாடுகளும் பாகிஸ்தானைக் கண்டிப்பதில்லை. அதனால் இந்தியா பேசுவதைக் குறைத்துக்கொண்டது. அதேசமயத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்த யாசர் அராபத், காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டையே ஆதரித்தார்.பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் மோடி

இப்படிப்பட்ட சூழலில்தான் பாலஸ்தீன விவகாரத்தில் அடிக்கடி இந்தியாவின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. சமீபத்தில் அப்படி உச்சரித்தவர், சவுதி இளவரசர்களில் ஒருவரான துர்கி பின் ஃபைசல் (Turki bin Faisal). சவுதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறை தலைவரான அவர், அமெரிக்காவின் ரைஸ் பல்கலைக்கழகத்தில் பேசியது சமீபத்தில் உலக கவனம் பெற்றது. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அதைக் கண்டித்து அவர் பேசினார். அதேசமயம் இஸ்ரேலையும் சமமானதொரு தராசில் நிறுத்தியிருந்தார். ‘‘இந்த இரு நாடுகளின் முரண்பாட்டில் யாரும் ஹீரோக்கள் இல்லை, பாதிக்கப்பட்ட அபலைகள்தான் மிச்சம் இருக்கிறார்கள்’’ என்று முடியும் அவரது பேச்சு.துர்கி பின் ஃபைசல் (Turki bin Faisal)

‘‘எந்தக் காரணமும் இல்லாமல் ஹமாஸ் அமைப்பு இஸ்‌ரேலியர்களைத் தாக்கியது என்று மேற்கத்திய உலகம் சொல்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் செய்துவரும் மிக மோசமான ஒடுக்குமுறையைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? ராணுவ ஆக்கிரமிப்பு நிகழ்ந்திருக்கும் எல்லா நிலங்களிலும் வசிக்கும் மக்களுக்கு அதை எதிர்த்து எல்லாவிதங்களிலும் போராட உரிமை உண்டு. பாலஸ்தீன மக்கள் அதையே செய்கிறார்கள். பாலஸ்தீனர்கள் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் கொல்லப்படும்போது கண்ணீர் வடிக்கும் மேற்கத்திய நாடுகளின் அரசியல்வாதிகள், இஸ்ரேல் ராணுவத்தால் பாலஸ்தீனர்கள் கொல்லப்படும்போது குறைந்தபட்சமாக வருத்தம்கூட தெரிவிப்பதில்லை. எப்போதும் நடப்பது இதுதான்.

அதற்காக ஹமாஸ் நடத்திய தாக்குதலை நான் ஆதரிக்கவில்லை. அப்பாவிப் பொதுமக்களை ஆயுதங்களால் கொல்வது இஸ்லாமிய நெறிகளுக்கு எதிரானது. அந்த தாக்குதலுக்கு பதிலடியாக காஸா பகுதியில் அப்பாவிகளை குண்டுவீசிக் கொல்கிறது இஸ்‌ரேல். மேற்குக்கரையில் கரணமே இல்லாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பலரையும் கைது செய்கிறது’’ என்று குற்றம் சாட்டினார் துர்கி அல் ஃபைசல்.

‘‘பாலஸ்தீனத்தில் ஆயுதங்கள் மூலம் தீர்வை எட்ட முடியாது. சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியாவில் நடந்தது போன்ற மக்கள் கிளர்ச்சியும் ஒத்துழையாமை இயக்கமும் மட்டுமே பாலஸ்தீனர்களுக்கு விடுதலை வாங்கித் தரும். அதுதான் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை இந்தியாவில் வீழ்த்தியது. கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் யூனியனின் தலையீட்டை இல்லாமல் ஆக்கியது’’ என்று யோசனை சொன்னார் அவர்.

இதுபோன்ற அமைதிப் போராட்டத்தை இஸ்‌ரேல் எப்படி எதிர்கொள்கிறது? காதர் அட்னன் (Khader Adnan) மரணம் அதை உணர்த்தும். பாலஸ்தீன சுயாட்சிப் பகுதியில் உள்ள மேற்குக் கரையில் பிறந்தவர் அட்னன். இப்போது உயிருடன் இருந்தால் அவருக்கு 45 வயதாகி இருக்கும். கணிதப் பட்டதாரியான அவர் ஒரு பேக்கரி வைத்திருந்தார்.காதர் அட்னன் (Khader Adnan)

கல்லூரி காலத்தில் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பில் இணைந்தார் அவர். அடுத்த சில நாட்களிலேயே இஸ்ரேல் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ‘‘நான் இந்த அமைப்பின் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அரசியல்ரீதியிலான போராட்டங்களை மட்டுமே செய்கிறேன்’’ என்று வாக்குமூலம் கொடுத்தார் அட்னன். அதன்பின் விடுதலை செய்யப்பட்டார். இப்போது வரை ஆயுதக்கலகம் செய்ததாக அவர்மீது இஸ்ரேல் அரசுகூட குற்றம் சாட்டியதில்லை.

கடந்த 2011 வரை எட்டு முறை இப்படி அடிக்கடி கைது செய்யப்படுவதும், சில நாட்களில் விடுதலை ஆவதுமாக அவர் வாழ்க்கை தொடர்ந்தது. 2011 டிசம்பர் 17-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டபோது, அவர் மனைவி ராண்டா அட்னன் கர்ப்பிணியாக இருந்தார். ‘நிர்வாகக் காரணங்களுக்காக’ என்று சொல்லியே பாலஸ்தீனர்களைக் கைது செய்யும் இஸ்ரேல் அரசு. அப்படிக் கைது செய்யப்பட்டால், அதற்கு காரணமும் சொல்ல வேண்டியதில்லை, கைதானவர்களுக்கு சட்ட உதவியும் கிடைக்காது.

18 நாட்கள் விசாரணை என்ற பெயரில் அவர் இஸ்ரேல் ராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டார். ‘நான் ஆயுதக் கலகம் செய்யாதவன், அமைதிவழிப் போராட்டத்தை விரும்புகிறவன். என்னை இப்படிச் செய்கிறீர்களே?’ என்று கேட்டு அவர் சிறையில் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். தொடர்ச்சியாக 66 நாட்கள் உண்ணாவிரதம். இந்தப் போராட்டம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேற்குக்கரையிலும் காஸாவிலும் அட்னனுக்காக மக்கள் போராட்டங்கள் வெடித்தன. கடைசியில் இஸ்ரேல் அரசு பணிந்து அவரை விடுதலை செய்தது. பாலஸ்தீனக் கைதிகள் அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவதுண்டு. அப்படி மிக நீண்ட காலம் போராட்டம் நடத்தியவராக காதர் அட்னன் அறியப்பட்டார்.

அதன்பின் 2014-ம் ஆண்டு இதேபோல கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் அட்னன். அதைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டார்.

அரசியல் போராட்டங்களை நடத்திவந்த அவரை 2023 பிப்ரவரி 5-ம் தேதி மீண்டும் கைது செய்தது இஸ்ரேல் அரசு. தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தார், வன்முறையைத் தூண்டினார் என்று குற்றம் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டார். ‘நான் அப்படி எந்தத் தவறும் செய்யவில்லை, என்னைக் கைது செய்தது தவறு’ என்று மீண்டும் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார் அட்னன். 87 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மே 2-ம் தேதி இறந்து போனார்.

அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பாக Physicians for Human Rights Israel என்ற அமைப்பைச் சேர்ந்த இஸ்ரேல் டாக்டர்கள் குழு ஒன்று சிறையில் அவரைப் போய்ப் பார்த்தது. ‘அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து அவரைக் காப்பாற்றுங்கள்’ என்று என்று இஸ்ரேல் அரசைக் கேட்டுக்கொண்டது. ஆனால், ‘அவர் சாப்பிட மறுக்கிறார், மருத்துவப் பரிசோதனைகளையோ, மருந்துகளையோ மறுக்கிறார். எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?’ என்று அலட்சியமாக பதில் சொன்னது இஸ்ரேல் சிறைத்துறை.

ஆயுதம் ஏந்தியவர்களும் கொல்லப்படுகிறார்கள், அமைதி வழியில் போராடினாலும் மரணமே பரிசு, அப்பாவிகளும் பலியாகிறார்கள் என்ற சுடும் நிஜம்தான் ஹமாஸ் போன்ற அமைப்புகளை அங்கு உருவாக்கியது. ஹமாஸின் கதை என்ன?

(நாளை பார்க்கலாம்…)


http://dlvr.it/Sy1PQ5

Thursday, 26 October 2023

USA: துப்பாக்கியுடன் சுற்றும் இளைஞர்... 22 பேர் பலி - வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை!

அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள மைனே (Maine) மாநிலத்தின் லெவிஸ்டன் பகுதியில் இருக்கும் பௌலிங் விளையாட்டு அரங்கம், உணவு விடுதி, வால்மார்ட் விநியோக மையம் ஆகிய மூன்று இடங்களில் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. யார் என அடையாளம் காணப்படாத நபர் கைகளில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுக் கொலை செய்கிறார். அவரின் சாரமாரியான துப்பாக்கிச்சூட்டுக்கு இதுவரை 22 அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சுமார் 50 முதல் 60 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். ஜி 7 மாநாட்டில் ஜோ பைடன்

அதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறை தீவிரமாக முன்னெடுத்திருக்கிறது. மேலும், மாநில காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில், “லெவிஸ்டனில் துப்பாக்கியுடன் ஒருவர் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே, குடிமக்கள் தங்களின் இல்லங்களில், வீட்டைப் பூட்டிக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள். யாரும் வெளியே நடமாட வேண்டாம். உங்கள் பகுதியில் எதாவது சந்தேகத்துக்குரிய நபர்கள் உலா வந்தால் 911 என்ற எண்ணுக்கு அழைத்துத் தெரியப்படுத்தவும்." என்று பதிவிட்டு, இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட மர்ம நபரின் மூன்று புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விசாரித்து அறிந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பிறகு அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. மே 2022-ம் ஆண்டு டெக்சாஸின் உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். 2022-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 647 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மே 2022-ல் நடந்த துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு மிக மோசமாக நடந்த துப்பாக்கிச்சூடு இது என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
அமெரிக்கா: யூத அரசியல் செயற்பாட்டாளர் கொலை; இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலியா? - போலீஸ் விசாரணை!


http://dlvr.it/SxyqYp

Wednesday, 25 October 2023

சீனா: `மாயமாகும் அமைச்சர்கள்... பதவி நீக்கம் செய்யும் அரசு!' - என்னதான் நடக்கிறது அங்கே?

சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு நெருக்கமாகத் திகழ்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு திடீரெனக் காணாமல் போன நிலையில், தற்போது அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் அதிபர் ஜி ஜின்பிங். ஏற்கெனவே இதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர் காணாமல் போனதும், அவர் பதவிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், சீனாவில் திடீரென்று அமைச்சர்கள் காணாமல் போவதும், அவர்கள் பதவி பறிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருவது சீன மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.சீன அதிபர் ஜி ஜின்பிங்

முதலில் காணாமல் போன வெளியுறவுத்துறை அமைச்சர்:

சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் கேங்(Qin Gang) கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து காணாமல் போனார். கடைசியாக ஜூன் 25-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்யா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்ட கின் கேங் அதன்பிறகு நடைபெற்ற எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் தென்படவில்லை. சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்ட பிறகுதான் இப்படியொன்று நிகழ்ந்ததே வெளியுலகிற்கு தெரியவந்தது. ஒரு மாதம் கடந்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்தநிலையில்தான், கின் கேங் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சீனாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக வாங் யீ நியமிக்கப்பட்டார். `மூன்றாவது முறை சீன அதிபராகப் பதவியேற்ற ஜி ஜின்பிங்!' - இனி வாழ்நாள் வரை அவர்தான் சீன அதிபரா?

என்ன காரணம்: தொடக்கத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் பொது நிகழ்ச்சிகளில் கின் கேங் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல் பரவியது. பின்னர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு மற்றொரு ரகசியமும் கிசுகிசுத்தது. அதாவது, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஃபூ ஷியாவோடியன் (Fu Xiaotian) என்ற பெண்ணுடன் கின் கேங் ரகசிய உறவில் இருந்ததாகவும், சீன அரசின் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் திருமணத்தை மீறிய தொடர்பை வைத்துக்கொள்ளக்கூடாது என்பது அதிகாரப்பூர்வ உத்தரவு என்பதால் அந்த விதியை மீறிய கின் கேங் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன.கின் கேங் - தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஃபூ ஷியாவோடியன்

தற்போது காணாமல் போன பாதுகாப்புத்துறை அமைச்சர்:

சீன வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் கேங்கைப் போலவே, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த லி ஷாங்ஃபூவும் காணாமல் போனார். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சீனா-ஆப்பிரிக்கா அமைதி மற்றும் பாதுகாப்பு மன்றத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அதன்பிறகு பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாததால் தொடர்ந்து லி ஷாங்ஃபூவும் காணாமல் போய்விட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த நிலையில், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து ஷாங்ஃபூ நீக்கப்பட்டுவிட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறது. முறைப்படி ஷாங்ஃபூ நீக்கம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதிபர் ஜி ஜின்பிங் ஒப்புதலுடன் நீக்கப்பட்டிருக்கிறார். தைவான் விவகாரம்: ``போருக்குத் தயாராகுங்கள்...'' - சீன ராணுவத்துக்கு ஜி ஜின்பிங் போட்ட உத்தரவு!பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபூ

என்ன காரணம்: லி ஷாங்ஃபூ சீனப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து சீனா-அமெரிக்கா இடையேயான ராணுவப் பரிமாற்றங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சீனா ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிய விவகாரத்தையடுத்து லி ஷாங்ஃபூ தங்கள் நாட்டுக்கு வரக்கூடாது என அமெரிக்கா தடைவிதித்தது. அதபோல, இவர் அமைச்சராக இருந்தபோது சீனா தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கியதும் அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்காக அடுத்த மாதம் அமெரிக்க பாதுகாப்புத்துறை பிரதிநிதிகள் சீனாவுக்கு வரவிருக்கின்றனர். இந்தச் சூழலில் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட லி ஷாங்ஃபூ பாதுகாப்பு அமைச்சராக இருப்பது ஒத்துவராது என்பதால்தான் அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

`நீக்கப்படுவதெல்லாம் சரிதான்... காணாமல் போனவர்களின் கதி என்ன?' என்பதை சீன அரசாங்கமே மறைப்பதுதான் இங்கு புரியாத புதிர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... 
https://bit.ly/46c3KEk
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 
https://bit.ly/46c3KEk

``சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி!'' - ஜோ பைடன் விமர்சனம்


http://dlvr.it/SxyX2d

Hijab: 12 நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க தடை! - இரான் அரசின் நடவடிக்கைக்குக் காரணம் என்ன?

இஸ்லாமிய குடியரசு நாடான இரானில், இஸ்லாமியப் பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஆடைக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. இதில், கடந்த ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கைதுசெய்யப்பட்ட மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண், போலீஸ் காவலிலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், மக்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தி போராட்டத்துக்கு வழிவகுத்தது.ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் - இரான்

அத்தகைய போராட்டங்களில், போராட்டக்காரர்கள்மீது போலீஸார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டார். பலருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறு பல கொடுமைகள் அரங்கேறின. இதனால், இஸ்லாமிய அரசின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இரானில் இன்றளவும் தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன.

ஐ.நா சபையும், இரானின் நடவடிக்கைகளை எச்சரித்தது. இருப்பினும் கடந்த செப்டம்பரில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. `ஹிஜாப் மசோதா' என்றழைக்கப்படும் இந்த மசோதா, அரசின் ஆடைக் கட்டுப்பாடுகளை மீறும் பெண்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகுக்கிறது. இந்த நிலையில், இரான் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம், ஹிஜாப் சட்டத்தை மீறியதாக 12 நடிகைகளை திரைப்படங்களில் நடிக்கத் தடைவிதித்திருக்கிறது.இரான்

முன்னதாக, தரனேஹ் அலிதூஸ்டி (Taraneh Alidoosti), கட்டயோன் ரியாஹி (Katayoun Riahi), ஃபதேமே மோடமேட்-ஆரியா (Fatemeh Motamed-Aria) ஆகியோர் உட்பட 12 நடிகைகள் ஹிஜாப் சட்டத்தை மீறுவதாக இரானிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இத்தகைய சூழலில், இன்று நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இரான் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சர் முகமது மெஹ்தி எஸ்மாலி (Mohammad Mehdi Esmaili), ``சட்டத்தைப் பின்பற்றாதவர்கள் வேலைசெய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன்படி, 12 நடிகைகள் திரைப்படங்களில் வேடங்களில் நடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று கூறினார்.ஹிஜாப் அணிவதைக் கண்காணிக்க கேமரா... தவறினால் சட்ட நடவடிக்கை - இரான் அரசு அறிவிப்பு!


http://dlvr.it/SxxSCn

Tuesday, 24 October 2023

"காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள், அதற்கே பின்னடைவை ஏற்படுத்தும்!" - எச்சரிக்கும் ஒபாமா

இஸ்ரேல் - ஹமாஸ் போராளிக்குழுவுக்கு மத்தியில் கடந்த 7-ம் தேதி முதல் நடந்துவரும் போரில் 1,400 இஸ்ரேலியர்களும், 5,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு

இந்தப் போரின் விளைவாக இஸ்ரேல், காஸா பகுதிக்குச் செல்லும், தண்ணீர், மின்சாரம், உணவுப்பொருள்கள், மருந்துகள் செல்வதைத் தடைசெய்தது. சர்வதேச அரசியல் முன்னெடுப்பின் மூலம் ஐ.நா திரட்டிய உதவிகளை மட்டும் காஸாவுக்குள் செல்ல அனுமதித்தது. ஒபாமா

இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, ``2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து, இஸ்ரேல் - பாலஸ்தீனத் தலைவர்களுக்கு மத்தியில் நீண்டகாலமாக எந்தப் பேச்சுவார்த்தையையும் ஏற்படுத்த முயலவில்லை.

காஸாவில், இஸ்ரேல் அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட குடிமக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தைத் துண்டிக்கும் இஸ்ரேல் அரசின் முடிவு மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்குவது மட்டுமல்லாமல், பல தலைமுறைகளாகப் போராடும் பாலஸ்தீனிய மக்களின் மனப்பான்மையை மேலும் கடினப்படுத்தலாம். இதனால், இஸ்ரேல் வரும் காலங்களில் பெரும் பின்னடைவைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. இஸ்ரேலின் தற்போதைய செயல்பாடுகள் இஸ்ரேலுக்கான உலகளாவிய ஆதரவைக் குறைக்கும்.இஸ்ரேல் - பாலஸ்தீன போர் - காஸா

இஸ்ரேலின் இது போன்ற நடவடிக்கைகள் தனது நாட்டில் அமைதியை நிலைநாட்ட நீண்டகாலமாக முயலும் முயற்சிகளை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. எல்லா வகையிலும் இஸ்ரேலுக்கு இது பின்னடைவாக முடியும்" என எச்சரிக்கும்விதமாகக் கூறியிருக்கிறார். ஒபாமா அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தபோது, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு முயன்றார்.

ஆனால் இறுதியில் அது தோல்வியடைந்தது. ஆனால், பாலஸ்தீனிய குழுவான ஹமாஸுடனான மோதல்களின் தொடக்கத்தில் இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கையை ஒபாமா ஆதரித்தார். எப்போது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் பாலஸ்தீனிய குடிமக்கள் கொல்லப்படும் சூழல் ஏற்பட்டதோ அப்போது, இஸ்ரேல் தனது ராணுவத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.israel-Hamas War: பரிதவிக்கும் காஸா மக்கள்; உதவிகள் சென்றடைய `ராஃபா' எல்லையை திறந்தது எகிப்த்!


http://dlvr.it/SxscHm

Monday, 23 October 2023

Israel-Hamas War: இஸ்ரேலுடன் கைகோக்கிறதா அமெரிக்க 'டெல்டா' படை? - `போர்' பூமியில் நடப்பதென்ன?

இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடந்த 7-ம் தேதி காஸா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 220 பேர் வரை சிறைப்பிடிக்கப்பட்டு காஸாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஆத்திரமடைந்த இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்புமீது போர்த் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே இரண்டு வாரங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.காஸா மீது தாக்குதல்

14,000-க்கும் மேற்பட்டோர் இந்தப் போரில், இதுவரை காயமடைந்திருக்கின்றனர். குறிப்பாக கடந்த 36 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 117 குழந்தைகள் உட்பட 266 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் இதுவரை வான்வழி தாக்குதல் மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதற்கு வசதியாக தனது துருப்புகளை எல்லையில் குவித்து வருகிறது, அந்த நாடு. மேலும் இந்தப் போர் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் இஸ்ரேலுக்கு தனது மிகவும் சக்திவாய்ந்த 'தாட்' எனப்படும் ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்பை அனுப்பிவைத்திருக்கிறது அமெரிக்கா. இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையும் காஸாவுக்குள் நுழைய இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. இதில், 13,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில் நவீன தாக்குதல் அமைப்புகளை அனுப்பிவைத்திருப்பது, போரை மேலும் தீவிரமடையச் செய்திருப்பதாக அச்சம் தெரிவிக்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். ஆனால், அமெரிக்கா-இஸ்ரேல் தரப்பில் இது குறித்ததான தகவல்கள் ஏதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.அமெரிக்கா - இஸ்ரேல்

இது குறித்து இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, "இந்தப் போரில் ஹிஸ்புல்லாக்கள் இணைவார்களேயானால் அது இரண்டாவது லெபனான் போருக்கு வழிவகுக்கும். அவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய தவற்றைச் செய்கிறார்கள். இந்த முயற்சி, லெபனானுக்கு நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் இஸ்ரேலின் பதிலடி இருக்கும். இந்தப் போர் இஸ்ரேலுக்கு வாழ்வா... சாவா போன்றது" என எச்சரித்திருக்கிறார். "ஹிஸ்புல்லாக்கள் மிகவும் அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறார்கள். அவர்கள் நிலைமையினை மேலும் தீவிரமாக்குகிறார்கள்" என அந்த நாட்டின் ராணுவ செய்தித் தொடப்பாளர் ஜோனாதன் கான்ரிகஸ் வேதனை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இரானின் உயர் தூதரக அதிகாரி ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன், "இஸ்ரேலும், அமெரிக்காவும் காஸாமீதான இனப்படுகொலைத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த பிராந்தியம் கட்டுப்பாட்டை மீறியதாக மாறிவிடும்" எனக் கூறியிருக்கிறார். "இந்த நிலைமைய தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு யாரும் இஸ்ரேல் மீதோ, எங்களின் துருப்புகள்மீது தாக்குதல் நடத்தக் கூடாது.இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு

அவ்வாறு தாக்குதல் அதிகாரித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்" என எச்சரித்திருக்கிறார், அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் அந்தோணி பிலின்கன். மறுபுறம் சீனா, ரஷ்யா, சவூதி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் தொண்டு அமைப்புகள் சார்பில் சரக்கு விமானங்கள் மூலம் எகிப்தின் அல் ஆரிஷ் விமான நிலையத்துக்கு சுமார் 3,000 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அங்கிருந்து அவை காஸாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர்...
எண்ணெய் ஊற்றும் சுயநலப் புலிகள்! -


http://dlvr.it/SxsHYk

Sunday, 22 October 2023

அமெரிக்கா: யூத அரசியல் செயற்பாட்டாளர் கொலை; இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலியா? - போலீஸ் விசாரணை!

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு மத்தியில் கடந்த 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரின் தாக்கம் பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. இரான், இராக், துருக்கி போன்ற நாடுகளில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மக்கள் பேரணிகளை முன்னெடுத்தனர். அதைத் தொடர்ந்து, அமெரிக்கா போன்ற சில நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவான பேரணிகளும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான பேரணிகளும் நடத்தப்பட்டன.கொலைசெய்யப்பட்ட சமந்தா வோல்

இந்தப் போரால் அமெரிக்கா முழுவதும் யூத மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர அரசியல் செயற்பாட்டாளரும், ஐசக் அக்ரீ டவுன்டவுன் யூத ஜெப ஆலயத்தின் பொறுப்பாளருமான சமந்தா வோல் (40) நேற்று கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அவரது வீட்டுக்கு வெளியே அவரின் சடலம் மீட்கப்பட்டது.

இந்தக் கொலை குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``இந்தக் கொலையில் பதிலில்லாத பல கேள்விகள் இருக்கின்றன. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. எனவே அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். கிடைக்கும் அனைத்து உண்மைகளும் மதிப்பாய்வு செய்யப்படும் வரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பது முக்கியம். இறந்தவரின் உடலில் பல கத்திக் காயங்கள் இருக்கின்றன. குற்றம் நடந்ததாக நம்பப்படும் இடத்தில் இருந்த ரத்தத் தடயங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கொலைக்கான நோக்கம் குறித்து அறிந்துகொள்ள FBI புலனாய்வு அதிகாரிகளிடம் உதவி கேட்டிருக்கிறோம்.கொலைசெய்யப்பட்ட சமந்தா வோல்

இறந்தவர் அமெரிக்க காங்கிரஸ் கட்சிக்காகவும், மிச்சிகன் அட்டர்னி ஜெனரல் டானா நெசெலின் பிரசாரத்திலும் பணியாற்றியிருக்கிறார். அதனால் மேலதிக தகவல்களுக்காக விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னர் கடந்த 16-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோவுக்கு அருகில் இருக்கும் ப்ளைன்ஃபீல்ட் டவுன்ஷிப்பின் இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்த சுபுர்பன் (71) என்ற யூதர், 6 வயது சிறுவனைக் கத்தியால் குத்திக் கொலைசெய்து, சிறுவனின் தாயையும் கத்தியால் தாக்கியதாகக் கைதுசெய்யப்பட்டது சர்வதேச அளவில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.அமெரிக்கா: முஸ்லிம் சிறுவனைக் கொன்ற முதியவர்; `இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலியா?' - சந்தேகிக்கும் போலீஸ்


http://dlvr.it/SxnSyK

israel-Hamas War: பரிதவிக்கும் காஸா மக்கள்; உதவிகள் சென்றடைய `ராஃபா' எல்லையை திறந்தது எகிப்த்!

இஸ்ரேல் - பாலஸ்தீன இடையே தொடங்கிய போர், 15 நாள்களைக் கடந்துவிட்டது. காஸாவில் இதுவரை 4,137-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களும், இஸ்ரேலில் 1,400-க்கும் அதிகமானவர்களும் இந்தப் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தப் போரால் காஸா நகரை இஸ்ரேல் முற்றுகையிட்டதால், நகருக்குள் குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள்கள் விநியோகம் தடைப்பட்டது. இதனால் தண்ணீர், உணவு, மருந்து பற்றாக்குறையால் அவதிப்படும் காஸா மக்களுக்குத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை செய்ய ஐ.நா-வின் பல்வேறு ஏஜென்சிகள் முடிவு செய்து, அதற்கான உதவிகள் பெறப்பட்டன.காஸா

திரட்டப்பட்ட மனிதாபிமான உதவிகளை காஸாவுக்கு கொண்டுசெல்ல எகிப்தின் ராஃபா எல்லை மட்டுமே ஒரே வழி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, காஸாவாசிகளுக்கான மனிதாபிமான உதவிகளான சுமார் 3,000 டன் உதவி பொருள்கள் விமானம் மூலமாக எகிப்துக்குக் கொண்டுவரப்பட்டு, எகிப்து செஞ்சிலுவைச் சங்கத்துக்குச் சொந்தமான 20-க்கும் அதிகமான லாரிகளில் ஏற்றப்பட்டு, ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, எகிப்திய ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி ஆகியோருடன் பல நாள்களாக நடந்த தீவிரப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஜோ பைடனுடன் நடந்த உடன்படிக்கைக்குப் பிறகு, தனது கட்டுப்பாட்டின்கீழ் இல்லாத எகிப்தின் ராஃபா பகுதி வழியாக காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் செல்ல இஸ்ரேல் அனுமதித்தது. இதனிடையே, ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரஸ், ராஃபா எல்லைப் பகுதியில் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிவாரணப் பொருள்களைப் பார்வையிட வெள்ளிக்கிழமை எகிப்துக்குச் சென்றார்.வரிசையாக நிற்கும் லாரிகள்

அப்போது அவர், ``இவை வெறும் லாரிகள் அல்ல, பாலஸ்தீன மக்களின் உயிர்நாடிகள். காஸா மக்களின் நலனுக்காக இன்றியமையாத உதவிகளைத் தொடர்ந்து செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ரஃபா எல்லையைத் திறந்து வைக்க வேண்டும். ஹமாஸின் கொடூரமான பயங்கரவாதத்திற்கு பாலஸ்தீனிய பொதுமக்கள் பொறுப்பல்ல. எனவே அதன் மோசமான செயல்களுக்காக மக்கள் பாதிக்கப்படக் கூடாது" எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது ராஃபா எல்லை வழியாக காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.இஸ்ரேலில் ஜோ பைடன்... காஸா மீது தீவிரமடையும் தாக்குதல்! - இனி என்ன?!


http://dlvr.it/SxnChX

Saturday, 21 October 2023

இஸ்‌ரேல் - ஹமாஸ் யுத்தம் 2: யூதர்கள், பாலஸ்தீனர்கள் - இரண்டு அகதிகளின் கதை!

இத்தொடரின் முதல் அத்தியாயம் - இஸ்‌ரேல் - ஹமாஸ் யுத்தம் 1: ஏன் தாக்கியது ஹமாஸ்?வரலாறு நெடுக இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் ஏராளமான மோதல்கள் நிகழ்ந்து வந்திருக்கின்றன, இப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் மிகவும் பழைமையானதும் சிக்கலானதுமான மோதலே இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல். இதற்கு சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு.

இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று இரண்டு பிரதேசங்களும் முக்கியமாகக் கருதுவது ஜெருசலேம் நகரை! உலகின் மிகப் பழைமையான நகர்களில் ஒன்றான ஜெருசலேம், ஆபிரகாமிய மதங்களான யூத மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் என மும்மதங்களாலும் புனித பூமியாகக் கருதப்படுகிறது.

பழைய ஜெருசலேமில் கோயில் மலை என்ற யூதர்களின் வழிபாட்டுப் பகுதி உள்ளது. இங்கிருக்கும் Dome of the Rock யூதர்களின் புண்ணியத்தலம். இதையொட்டி இருக்கும் மேற்குச் சுவர் எனப்படும் அழுகைச்சுவர், கி.மு காலத்தைய கட்டுமானம். பழைமையான யூத தேவாலயத்தின் எஞ்சிய பகுதியாக இது கருதப்படுகிறது. 'நான் உங்களுடன் இருக்கிறேன்' என்று தங்களுக்கு இறைவன் இந்த சுவர் வழியாக உணர்த்துவதாக யூதர்கள் நம்புகிறார்கள். இந்த சுவரில் சாய்ந்து அழுவதை ஒரு புனித யாத்திரை போல யூதர்கள் கருதுகிறார்கள்.Dome of the Rock

இந்த மேற்குச்சுவரை ஒட்டியிருக்கிறது அல் அக்சா மசூதி. ஜெருசலேமின் மிகப் பழைமையான, மிகப்பெரிய மசூதி இது. இந்த மசூதி இருக்கும் மலைப்பகுதியிலிருந்துதான் நபிகள் நாயகம் விண்ணுலகிற்குச் சென்று வந்ததாக நம்பிக்கை. அதனால், இஸ்லாமியர்களுக்கு மெக்கா மற்றும் மதீனாவை அடுத்து மூன்றாவது முக்கியமான புனிதத்தலமாக இது இருக்கிறது.

ஜெருசலேமில் இருக்கும் Church of the Holy Sepulchre, உயிர்த்தெழுந்த தேவாலயம் எனப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது, அவர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தது ஆகிய நிகழ்வுகள் நடந்ததாக நம்பப்படும் பகுதிகள் இந்த தேவாலய வளாகத்தில் உள்ளன. உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் மிகவும் புனிதமாகக் கருதும் புண்ணியத்தலம் இது. கடந்த கி.பி நான்காம் நூற்றாண்டிலிருந்து இங்கு புனித யாத்திரை வருவதை கிறிஸ்தவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.Church of the Holy Sepulchre

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஜெருசலேம், அதைச் சுற்றியிருக்கும் நிலப்பரப்பு ஆகியவற்றுக்காக மோதல் தொடர்வதில் வியப்பில்லை. இஸ்ரேலின் ஆதிகுடிகளாக இருந்தவர்கள் யூதர்கள். ஆனால், தொடர்ச்சியாக அசிரியன் பேரரசு, பாபிலோனியப் பேரரசு மற்றும் ரோமப் பேரரசுடன் நடந்த போர்கள் அவர்களை சின்னாபின்னமாக்கின. பலர் கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர், பலர் மத்திய தரைக்கடலைத் தாண்டிச் சென்று பல்வேறு பகுதிகளில் குடியேறினர். மத்தியக் கிழக்கு ஆசியாவிலும் ஐரோப்பா முழுக்கவும் இப்படி யூதக் குடியேற்றம் நிகழ்ந்தது. காலப்போக்கில் அந்தப் பிரதேசம் பாலஸ்தீனமாக மாறியது.

பல்வேறு நாடுகளில் குடியேறிய யூதர்கள், அங்கெல்லாம் பொருளாதாரரீதியாகவும் அரசியல் வட்டாரத்திலும் செல்வாக்கு செலுத்தினர். அவர்களுக்கான நெருக்கடிக் காலம், இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் வடிவில் வந்தது. ஜெர்மனியில் விஸ்வரூபமெடுத்து வளர்ந்த நாஜிக்கள், ஐரோப்பாவை முழுக்கவே தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயன்றனர். தாங்கள் ஆக்கிரமித்த அத்தனை நாடுகளிலும் யூதர்களைத் தேடித் தேடி அழித்தனர். 'நமக்கு சொந்தமற்ற நாடுகளில் ஏன் அகதிகள் போல அலைய வேண்டும்? நமக்கு உறுதி செய்யப்பட்ட நிலத்தில், நமக்கான தேசத்தை உருவாக்க வேண்டும்' என்று இஸ்ரேல் தேசம் குறித்து அவர்கள் சிந்திக்கத் தொடங்கியது அப்போதுதான்.Hitler

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்த யூதர்களால் இதை சுலபமாக சாதிக்க முடிந்தது. (இப்போதும்கூட இஸ்ரேலில் இருப்பதைவிட அதிக யூதர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!) அந்த நேரத்தில் பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதிகள் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்ததால், இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்குவது இன்னும் சுலபமானது. பாலஸ்தீனத்தில் பணக்கார யூதர்கள் எங்கெங்கோ இருந்துவந்து நிலங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தனர். இதன் உள்நோக்கம் தெரியாத பாலஸ்தீனர்கள், குறைந்த விலைக்கு நிலங்களை விற்றனர். படிப்படியாக யூதர்கள் குடியேற்றம் நிகழ ஆரம்பித்தது. 1947 - பாலஸ்தீனத்தை யூதர்கள் பகுதி, அரபுப் பகுதி என்று பிரித்து ஒரு ஐ.நா உருவாக்கிய வரைப்படம்

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் ஜெர்மனி நிகழ்த்திய போர்க்குற்றங்களில் அதிக இழப்பைச் சந்தித்த யூதர்களுக்குத் தனி நாடு உருவாக்குவதை ஐ.நா சபையே ஏற்றது. 1947 நவம்பரில் பாலஸ்தீனத்தை யூதர்கள் பகுதி, அரபுப் பகுதி என்று பிரித்து ஒரு வரைபடத்தை ஐ.நா உருவாக்கி ஏற்றது. அரபு நாடுகள் பலவும் இதை எதிர்த்தன. இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகளும் போர்க்கொடி உயர்த்தின. இப்படி முரண்பாடுகள் முற்றிய சூழ்நிலையில், 1948 மே 14-ம் தேதி பாலஸ்தீனத்தில் தங்கள் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்தது. யூதர்களின் அரசியல் தலைவரான David Ben-Gurion, இஸ்ரேல் என்ற தேசம் உருவாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே எகிப்து, ஜோர்டான், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. 1949 ஜூலையில் போர் முடிந்தபோது, அரபு நாடுகள் நான்கும் தோல்வியை ஒப்புக்கொள்ள நேர்ந்தது. பழைய பாலஸ்தீனத்தின் 80% நிலப்பரப்பை இஸ்ரேல் பிடித்துவிட்டிருந்தது. தற்போது பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசத்தின் தலைமையகமாக இருக்கும் மேற்குக்கரையை ஜோர்டான் கைப்பற்றியது. காஸா நிலப்பரப்பை எகிப்து கைப்பற்றியது. சுமார் ஏழரை லட்சம் பாலஸ்தீனர்கள் வீடிழந்து, நாடிழந்து அகதிகளாக இஸ்ரேலிலிருந்து வெளியேற நேர்ந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் காஸாவில் போய்க் குடியேறினர். 'நக்பா' என தங்களுக்கு நேர்ந்த பேரழிவாக இதை பாலஸ்தீன மக்கள் வரலாற்றில் பதிவிடுகின்றனர்.இஸ்ரேல் உருவானபிறகு, மத்தியக் கிழக்கு ஆசியாவில் தொடர்ந்து சண்டைகள் நடக்கத் தொடங்கின. சூயஸ் கால்வாய் தொடர்பான பிரச்னையில் எகிப்து மீது போர் தொடுத்தது இஸ்ரேல். பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அதற்கு உதவின. காஸா பகுதி இதன்பின் இஸ்ரேல் ஆதிக்கத்தில் வந்தது.

1973-ம் ஆண்டு Yom Kippur போர் எனப்படும் நான்காவது இஸ்ரேல் - அரபுப் போர் நடைபெற்றது. அதுவரை எல்லாப் போர்களிலும் ஆதிக்கம் செலுத்திய இஸ்ரேல், முதல்முறையாக இதில் கடும் இழப்புகளை சந்தித்தது. எகிப்து மற்றும் சிரியா தலைமையிலான அரபுப் படைகள் நடத்திய தாக்குதலில் 2,700 இஸ்ரேல் வீரர்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அரபுப்படைகளுக்கு ரஷ்யாவும், இஸ்ரேல் படைகளுக்கு அமெரிக்காவும் ஆயுத சப்ளை செய்ய, கிட்டத்தட்ட இரண்டு வல்லரசுகளின் வலிமையை சோதிக்கும் யுத்தக்களமாக இது மாறியது. கடைசியில் ஐ.நா தலையிட்டு அமைதியை நிலைநிறுத்தியது.

சினாய் தீபகற்பத்திலிருந்து இஸ்ரேல் வெளியேறி, அதை எகிப்திடம் ஒப்படைத்தது. இதற்காக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டன. இதன்மூலம் தான் இழந்த பகுதிகள் எகிப்துக்குக் கிடைத்தது. இஸ்ரேலுடன் முதன்முதலில் ஓர் ஒப்பந்தம் போட்ட அரபு நாடாக வரலாற்றில் இடம் பிடித்தது எகிப்து. இஸ்ரேலை ஒரு தேசமாக எகிப்து அங்கீகரித்ததாக அர்த்தமாகிவிட்டது. இது இஸ்ரேலுக்குக் கிடைத்த வெற்றி.Yom Kippur

இந்தப் போரில் சந்தித்த இழப்புகளுக்குப் பிறகே, பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கு சுயாட்சி வழங்குவது குறித்து யோசிக்க ஆரம்பித்தது இஸ்ரேல். அதற்கான பேச்சுவார்த்தைகள் 20 ஆண்டுகள் நடைபெற்று, கடைசியில் 1993-ம் ஆண்டு ஆஸ்லோ ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் முன்னிலையில் இஸ்ரேல் பிரதமர் யிட்ஷாக் ராபினும், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத்தும் கையெழுத்திட்டனர். மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகள் பாலஸ்தீன தேசிய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுயாட்சிப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டன. அது தனி நாடாக இல்லாமல், இஸ்ரேலின் ஆளுகைக்கு உட்பட்ட சுயாட்சிப் பிரதேசமாக அமைந்ததில் பெரும்பாலான பாலஸ்தீனர்களுக்கு அதிருப்தி. இன்னொரு பக்கம் இஸ்ரேலின் தீவிர வலதுசாரிகளும் இதை எதிர்த்தனர். ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட இஸ்ரேல் பிரதமர் யிட்ஷாக் ராபின் இரண்டே ஆண்டுகளில் சுட்டுக் கொல்லப்பட்டார்.2005-ம் ஆண்டு யாசர் அராபத் மரணமடையும் வரை, அவரின் ஆளுமைக்காக அடங்கியிருந்த பாலஸ்தீனர்கள் கிளர்ந்தெழத் தொடங்கினர். அதற்கு முன்பே ஹமாஸ் அமைப்பு அங்கு ஆழமாக வேரூன்றி இருந்தது.
இந்த அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்களுக்கு மத்தியில் பாலஸ்தீனர்கள் பல நாடுகளுக்கு அகதிகளாகப் போய்க் குடியேற நேர்ந்தது. இன்று உலகிலேயே அதிக அகதிகளை உருவாக்கிய மண்ணாக பாலஸ்தீனம் திகழ்கிறது.
(அந்த சோகக்கதையை நாளை பார்க்கலாம்...)


http://dlvr.it/SxmyyP

Friday, 20 October 2023

இஸ்ரேல்: அமெரிக்க ராணுவ வீரர்களுடன் பைடன் எடுத்த புகைப்படம்; டெலீட் செய்த வெள்ளை மாளிகை - ஏன்?!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே 10 நாள்களுக்கும் மேலாகப் போர் நடைபெற்றுவருகிறது. அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தொடங்கிய தாக்குதலுக்கு எதிராகப் பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்திவருகிறது. இதில், உயிரிழந்த பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 3,000-ஐ தாண்டிவிட்டது.தாக்கப்பட்ட காஸா மருத்துவமனை

அதே நேரம், உக்ரைன்மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் எனக் கடந்த ஒரு வருடமாகக் கூறிவரும் அமெரிக்கா, உக்ரைனுக்குச் செய்ததைப்போலவே இஸ்ரேலுக்கும் போர் ஆயுத உதவிகளை வழங்கிக்கொண்டே, ஐ.நா-வில் ரஷ்யா கொண்டுவந்த போர் நிறுத்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தோல்வியடையச் செய்தது.

இந்த நிலையில்தான் காஸாவிலுள்ள மருத்துவமனைமீது நடந்த திடீர் தாக்குதலில், சுமார் 500 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `இஸ்ரேல்தான் இந்தத் தாக்குதலை நடத்தியது' என ஹமாஸ் கூற, `மருத்துவமனைமீது ஹமாஸ்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறது’ என சில ஆடியோ ஆதரங்களையும் வெளியிட்டது இஸ்ரேல். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகரில் அந்த நாட்டுப் பிரதமர் நெதன்யாகுவை நேரில் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, போரில் பிணைக்கைதிகளாக இருந்து, பின்னர் மீட்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.பைடன் - நெதன்யாகு

மேலும், அமெரிக்கா இஸ்ரேலின் உதவிக்காக அனுப்பிய இராணுவ வீரர்களையும் சந்தித்தார். அப்போது,"நீங்கள் செய்யும் உதவிக்கு என்னால் எதுவும் ஈடுசெய்ய முடியாது. நன்றி" எனத் தெரிவித்தார். அவர் அமெரிக்க இராணுவ வீரர்களைச் சந்திக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களை ஜோ பைடன் எதிர்கொண்டார்.

நேற்று அமெரிக்க பாதுகாப்புத் துறை நடத்திய மாநாட்டின் போது, ஜெனரல் பாட் ரைடர், ``புகைப்படம் வெளியிடப்பட்ட வீரர்கள் உண்மையில் அமெரிக்கச் சிறப்பு ராணுவ அதிகாரிகள் தானா என்பதையும், சிறப்புப் படைகளின் புகைப்படங்களை எடுப்பதற்கு அனுமதிக்கும் கொள்கைகள் நமது ராணுவத்தில் இருக்கிறதா?” என்பதை உறுதிப்படுத்தும்படி கேட்டுக்கொண்டர்.ஜோ பைடன்

அதைத் தொடர்ந்து, ஜோ பைடன் ராணுவ அதிகாரிகளுடன் இருக்கும் படியாக வெளியிட்ட புகைப்படத்தை வெள்ளி மாளிகை தனது வலைதளப்பக்கங்களிருந்து நீக்கியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
இஸ்ரேலில் ஜோ பைடன்... காஸா மீது தீவிரமடையும் தாக்குதல்! - இனி என்ன?!


http://dlvr.it/Sxj64W

Thursday, 19 October 2023

USA: `மேயர் பதவியை ராஜினாமா செய்யவில்லையென்றால்..!’ - இந்தியருக்கு தொடர் கொலை மிரட்டல் கடிதம்

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தின் ஹோபோக்கன் நகர மேயராக சீக்கியரான ரவீந்தர் பல்லா 2017 -ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் மேயர் பதவிக்குத் தேர்வு பெற்றது அதுவே முதல் முறை. அவருக்கு முன் மேயர் பதவி வகித்து வந்த டான்ஜிம்மரால் இவர் முன்மொழியப்பட்டவர். பலத்த போட்டிக்கு மத்தியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவீந்தர் பல்லா, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதார உளவியல் பட்டமும், லண்டன் பொருளாதார பள்ளியில் படித்து எம்.எஸ்.சி. பொது நிர்வாக பட்டமும், லூசியானாவில் டுலானே சட்டப்பள்ளியில் படித்து ஜூரிஸ் முனைவர் பட்டமும் பெற்றார். 2021-ல் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று மேயராகவே தொடர்கிறார்.மேயர் ரவீந்தர் பல்லா

அவர் மேயராக தேர்ந்தெடுக்கும் முன்னரே அவரது காரில் யாரோ அவரை பயங்கரவாதி எனச் சித்தரிக்கும் வாசகங்களை எழுதிப் பரபரப்பை ஏற்படுத்தினர். அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடும் கடிதங்களும், மின்னஞ்சல்களும் தொடர்ந்து வருவதாகத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இது அவர் பேசியதாவது, "மின்னஞ்சலில் எனக்கு வந்த கடிதங்கள், முதலில் என்னை ராஜினாமா செய்யும்படி குறிப்பிட்டிருந்தது.

ஆனால் பின்னர் நான் சீக்கிய மதத்தைப் பின்பற்றுவதால் எனக்கும், என் குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் தொடங்கியிருக்கிறது. எனக்கு வந்த மூன்றாவது மிரட்டலில் 'உன்னைக் கொல்லும் நேரம் வந்துவிட்டது. இது உனக்குக் கடைசி எச்சரிக்கை. உடனடியாக ராஜினாமா செய்யாவிட்டால், நாங்கள் உன்னை, உன் மனைவியை, உன் குழந்தைகளைக் கொல்வோம்' எனக் குறிப்பிட்டிருந்தது. எனது பெரிய கவலை என் குழந்தைகள்தான்.மேயர் ரவீந்தர் பல்லா

நான் மேயராகவே கையெழுத்திட்டேன், என் குழந்தைகளைப் பலிகொடுப்பதற்கல்ல. ஒரு சீக்கிய அமெரிக்கன். பெருமைமிக்க அமெரிக்கனாக இங்கிருக்கும் மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், என் குழந்தைகள், மனைவி மீதான மிரட்டலாளர்களின் வெறுப்பு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
Nithari case: இந்தியாவை உலுக்கிய 19 பெண்களின் கொலை; மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுவிப்பு!


http://dlvr.it/SxfBl1

Wednesday, 18 October 2023

``வற்புறுத்தியதால் கர்ப்பத்தை கலைத்தேன்" வேதனையை பகிர்ந்த பிரிட்னி ஸ்பியர்ஸ்... கொந்தளித்த ரசிகர்கள்

அமெரிக்காவின் பிரபல பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ், பாப் பாடகரும் நடிகருமான ஜஸ்டின் டிம்பர்லேக்குடன் டேட்டிங்கில் இருந்தபோது உண்டான கர்ப்பத்தை டிம்பர்லேக்கின் வற்புறுத்தலின் பேரில் கலைத்ததாகக் கூறியுள்ளார்.

பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு தற்போது 41 வயதாகிறது. ஜஸ்டின் டிம்பர்லேக்கும், பிரிட்னி ஸ்பியர்ஸும் 2000 -ன் முற்பகுதியில் `தி மிக்கி மவுஸ் கிளப்’ நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள். மூன்று வருடங்கள் வரை டேட்டிங் செய்த இவர்கள் 2002-ல் திடீரென பிரிந்தனர். ஜஸ்டின் டிம்பர்லேக்

பிரிட்னி ஸ்பியர்ஸிடம் ஊடகங்கள் தொடர் கேள்விகளை எழுப்பியநிலையில், டிம்பர்லேக் `அவளுடன் உறங்கினேன்; அதன் பின்னரே, `Cry Me a River' என்ற பாடலை எழுதினேன். பிரிட்னி எங்கள் உறவில் துரோகம் செய்து விட்டார்’ என்று தெரிவித்து இருந்தார்.  

பல வருடங்களுக்குப் பின்னர் 2021-ல் பிரிட்னி ஸ்பியர்ஸ் குறித்த ஆவணப்படத்தை ஒரு தொலைக்காட்சி வெளியிட்டது. அதில் இவர்களின் உறவு முடிந்தபோது, அவர் ஊடகங்களிடம் எப்படியெல்லாம் அவமானப்பட்டார் என்பது குறித்து வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

அதனை கண்ட டிம்பர்லேக் ஸ்பியர்ஸிடம், `நான் உன்னிடம் தோற்றுவிட்டேன்’ என சமூக ஊடகங்களில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.   

இந்நிலையில் `The Woman in Me’ என்ற வெளியிடப்படவிருக்கிற சுயசரிதை புத்தகத்தில் தனது கடந்த காலம் குறித்து வெளிப்படுத்தி இருந்த பிரிட்னி ஸ்பியர்ஸ், ``நான் ஜஸ்டினை மிகவும் நேசித்தேன். நாங்கள் ஒருநாள் ஒன்றாக குடும்பமாக இருப்போம் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் ஜஸ்டின் டிம்பர்லேக் நிச்சயமாக எனது கர்ப்பம் பற்றி மகிழ்ச்சியடையவில்லை. நாம் குழந்தை பெறத் தயாராக இல்லை, மிகவும் இளமையாக இருக்கிறோம் என்றார். 

எனக்கு குழந்தை பெற விருப்பம் இருந்தது. ஆனால் டிம்பர்லேக்கின் வற்புறுத்தலின் பேரில் கருக்கலைப்புக்கு ஒப்புக்கொண்டேன். இது என்னுடைய முடிவாக மட்டும் இருந்திருந்தால் நான் அதை ஒருபோதும் செய்திருக்க மாட்டேன். ஆனால் ஜஸ்டின் ஒரு தந்தையாக இருக்க விரும்பவில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.Everytime song குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்; கர்ப்பத்தை கலைக்க அனுமதியளித்த மும்பை உயர்நீதிமன்றம்!

இந்த அத்தியாயம் எனது வாழ்வில் நான் அனுபவித்த மிக வேதனையான விஷயங்களில் ஒன்று’’ என்று தெரிவித்து இருந்தார். 

பிரிட்னி ஸ்பியர்ஸின் `Everytime' என்ற பாடல் அவரின் குழந்தைக்காகவே இருந்தது, ஜஸ்டின் டிம்பர்லேக்கிற்கானது அல்ல என்று ரசிகர்கள் ஆதரவு கூறி வருகின்றனர். அதோடு டிம்பர்லேக் செய்தது தவறு என அவருக்கு எதிராக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு இப்போது 18 மற்றும் 17 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் பாடகர் மற்றும் நடனக் கலைஞரான கெவின் ஃபெடர்லைனுடன் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். 


http://dlvr.it/Sxc3dv

`Time is up; இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!' - இஸ்ரேலை எச்சரிக்கும் இரான்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் போராளிக்குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. மனிதநேயமற்ற இந்தப் போரால் பெரும்பான்மையான அப்பாவி மக்களும், நூற்றுக்கணக்கான குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து பற்றாக்குறையால் காஸாவில் மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.தாக்கப்பட்ட காஸா மருத்துவமனை

ஆனால், இஸ்ரேல், மருத்துவமனைமீதான இந்தத் தாக்குதலில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என மறுத்திருக்கிறது. இந்த நிலையில், சிரியாவில் உள்ள இரானிய தூதரகம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ``நூற்றுக்கணக்கான ஆயுதமற்ற மற்றும் பாதுகாப்பற்ற மக்களைக் கொன்று குவித்து, பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைமீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு நாம் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

நேற்று இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, ``காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய அதிகாரிகள் செய்த குற்றங்களுக்காக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் வடக்கு நகரமான அலெப்போவிலுள்ள விமான நிலையங்கள்மீது ஒரே நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி, ஓடுபாதைகளைச் சேதப்படுத்தியதால், அங்கு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமர்

இந்த நிலையில், நாளைமுதல் அதன் பணிகள் முடிவடைவதால் வியாழக்கிழமைக்குள் மீண்டும் சேவை தொடங்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநரகம் செய்தி வெளியிட்டது. மேலும், லெபனான் எல்லையிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள 28 கிராமங்களில் வசிப்பவர்களை வெளியேற்றும் திட்டத்தை இஸ்ரேல் செயல்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ``காஸா பகுதியில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில், எதிர்வரும் நேரங்களில் இஸ்ரேலுக்கு எதிராக முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படும்" என இரான் எச்சரித்திருக்கிறது.

இரான் ஆதரவு, லெபனான் குழுவான ஹிஸ்புல்லா அமைப்புடன் இஸ்ரேல், லெபனான்-இஸ்ரேல் எல்லையில் பல நாள்களாகத் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

இது குறித்துப் பேசிய இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், ``எல்லா வகையான சாத்தியங்களும் ஹிஸ்புல்லாவுக்கு இயற்கையாகவே இருக்கின்றன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கற்பனை செய்யமுடியாதளவில் இருக்கும். நமது தலைவர்கள் இஸ்ரேலை காஸாவில் அது விரும்பியபடி செயல்பட அனுமதிக்கமாட்டார்கள்.இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன்

இன்று காஸாவை நாம் பாதுகாக்கவில்லை என்றால், நாளை நமது சொந்த நாட்டின் குழந்தைகள் மருத்துவமனையில், இந்த பாஸ்பரஸ் குண்டுகளுக்கு எதிராகப் போராட வேண்டிய நிலை உருவாகும். இஸ்ரேல், பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துகிறது என்ற மனித உரிமைக் குழுக்களின் தகவல் அதை உறுதிப்படுத்துகிறது. இப்போது நமது நாட்டின் தெற்கே இருக்கும் இந்த மோதல் மற்ற இடங்களிலும் பரவுவதற்கான சாத்தியங்கள் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள்.

அதை எதிர்கொள்ளத் தயாராகவும் இருக்கிறார்கள். காஸா பகுதியில் குழந்தைகளைக் கொன்றுகுவிக்கும் இஸ்ரேலிய தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. அதனால் சூழல் மிக வேகமாக மோசமாகிவருகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.நெதன்யாகுவுடன் பேசிய புதின்; ``ஹமாஸ் அழிக்கப்படும் வரை ஓயமாட்டோம்!'' - இஸ்ரேல் திட்டவட்டம்!


http://dlvr.it/SxbhkJ

ஹமாஸ் தாக்குதலில் பலியான மகள்; Iphone & Apple Watch உதவியுடன் கண்டுபிடித்த அமெரிக்கர்!

இஸ்ரேலில் கடந்த வாரம், சூப்பர் நோவா இசை விழாவில் ஹமாஸ் குழுவால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய - அமெரிக்கப் பெண்ணின் தந்தை, ஆப்பிள் வாட்ச் மற்றும் செல்போனின் கண்காணிப்பு அம்சத்தைப் பயன்படுத்தி, தன்னுடைய மகளின் சடலத்தைக் கண்டறிந்திருக்கிறார்.

கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை பெயர் இயல் வால்ட்மேன். தொழிலதிபரான இவர், கம்ப்யூட்டர் நெட்வொர்க் தயாரிப்புகளின் பன்னாட்டு விநியோக நிறுவனமான `மெல்லனாக்'ஸின் நிறுவனருமாவார். இயலின் 24 வயது மகள் டேனியேலும், தெற்கு இஸ்ரேலில் கடந்த வாரம் நடைபெற்ற இசை திருவிழாவில் தன்னுடைய காதலனுடன் கலந்துகொண்டிருக்கிறார். தாக்குதலில் கொல்லப்பட்ட டேனியல்

அந்த நேரத்தில்தான், ஹமாஸ் படையினர் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தினர். இதில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், சிலரை ஹமாஸ் படையினர் பிணைக்கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இது குறித்து தகவல் தனக்குக் கிடைத்ததும், தன்னுடைய மகளையும் ஹமாஸ் படையினர் பிணைக்கைதியாக அழைத்துச் சென்றிருக்கலாம் என நினைத்திருந்திருக்கிறார் இயல். ஆனால், தாக்குதல் நடந்து 4 நாள்களுக்குப் பிறகே, தன்னுடைய மகள், அவருடைய காதலன் ஆகிய இருவரும் இறந்துவிட்டனர் என்பதை அவர் தெரிந்துகொண்டார்.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய இயல் வால்ட்மேன், ``ஹமாஸ் தாக்குதல் குறித்து தகவல் அறிந்தவுடன், நான் சில மணிநேரத்திலேயே இஸ்ரேலுக்கு விரைந்தேன். அவளது ஆப்பிள் வாட்ச்சிலிருந்து எனக்கு அலர்ட் வந்த நிலையில், அதை வைத்து இசை நிகழ்ச்சி நடந்த இடத்துக்குச் சென்று, என்னுடைய மகளின் கார் மற்றும் சில உடைமைகளைக் கண்டுபிடித்தோம். அவளது ஐபோனிலிருந்து எமர்ஜென்சி காலும் வந்திருந்தது. அங்கிருந்த துப்பாக்கிக் குண்டுகளைப் பார்த்தபோது, அவரது காரைச் சுற்றிவளைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள், குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து பேர் இரண்டு திசைகளிலிருந்து என்னுடைய மகளைக் கொடூரமாகக் கொன்றிருக்கக்கூடும் என்பது புரிந்தது. ஹமாஸ் தாக்குதல் நடத்தத் தொடங்கியவுடன், என்னுடைய மகள், அவரின் காதலர், இன்னும் சிலர் காரில் ஏறி தப்ப முயன்றிருக்கின்றனர். இஸ்ரேல் - ஹமாஸ் போர்

அதையடுத்து, ஹமாஸ் படையினர் காரை வழிமறித்து அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். என்னுடைய மகளிடம் நான் கடைசியாகப் பேசியபோது, தன்னுடைய காதலனை விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகத் தெரிவித்தார். அதைக் கேட்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இப்போது அவளை இழந்து நிற்கிறேன். என்னுடைய மகள் அனைவரிடமும் அன்பாகப் பழகுவாள், அவளுக்கு நேர்ந்த இந்தக் கொடூரத்தை என் மனம் ஏற்க மறுக்கிறது, என்னுடைய மகள் யாருக்கு என்ன தவறு செய்தாள்... அவளை ஹமாஸ் பயங்கரவாதிகள் கொன்றதை ஏற்கவே முடியாது" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
நெதன்யாகுவுடன் பேசிய புதின்; ``ஹமாஸ் அழிக்கப்படும் வரை ஓயமாட்டோம்!'' - இஸ்ரேல் திட்டவட்டம்!


http://dlvr.it/Sxbhcz

Tuesday, 17 October 2023

முப்படை தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல்... அணிவகுக்கும் உலக நாடுகள்! - நடப்பது என்ன?!

பாலஸ்தீனர்கள் வசிக்கும் காஸா எல்லையை இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கிகள் சுற்றிவளைத்திருக்கின்றன. கடந்த ஒரு வார காலமாக விமானங்கள் மூலமாக குண்டுகளை வீசி காஸாவிலுள்ள கட்டங்களைத் தகர்த்து, ஏராளமானோரை கொன்றுகுவித்த இஸ்ரேல், தற்போது பாலஸ்தீனத்தின் மீது போரைத் தொடங்குவது குறித்து டெல் அவிவ்வில் அமைந்திருக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமையகத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் ஆலோசனை நடத்தியது. பெஞ்சமின் நெதன்யாகு

அந்தக் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பு விரைவில் முற்றிலுமாகத் தீர்த்துக்கட்டப்படும் என்றார். இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று பல நாடுகளின் தலைவர்கள் கூறிவரும் நிலையில், அந்தக் கோரிக்கையை இஸ்ரேல் ராணுவம் நிராகரித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில், அமெரிக்காவின் போர் கப்பல் தற்போது காஸாவுக்கு அருகே நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் கப்பலை அனுப்புவதற்கு இங்கிலாந்து ஆலோசித்துவருகிறது. இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இரண்டாவது அமெரிக்க போர்க்கப்பல் இஸ்ரேல் கடல் பகுதிக்கு விரைகிறது.இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்

இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளைக் குறிவைத்து லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவருகிறார்கள். வடக்கு எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. ‘வடக்கு காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மிகப்பெரிய சவால்களைச் சந்திக்க நேரிடும். போர் நடப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’ என்று கூறியிருக்கிறார் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமீர்.

மத்திய கிழக்கில் முகாமிட்டு இந்த விவகாரம் குறித்து அரபு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன். சவுதி அரேபிய இளவரசர் சல்மானுடனான சந்திப்பு குறித்து கூறிய ஆண்டனி பிளிங்கன், ‘சவுதி இளவரசருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்களிடம் சிக்கியிருக்கும் பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்க வேண்டும்’ என்றார்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் | போர் பதற்றம்

இந்த நேரத்தில், ‘போரில் அமெரிக்கா நேரடியாகப் பங்கேற்காது. இந்தப் பிராந்தியத்தில் ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் மறைமுகப் போர் நடத்துவதை முறியடிப்பதற்காகவே அமெரிக்காவின் கடற்படையின் சக்திவாய்ந்த கப்பலை நிறுத்தியிருக்கிறோம்’ என்று அமெரிக்க ராணுவம் கூறியிருக்கிறது. தெலங்கானா: பிஆர்எஸ் கட்சியின் `தாராள’ வாக்குறுதிகள்! - சாத்தியம் தானா?!

தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு போரை விரிவுபடுத்துவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது. தங்கள் நாட்டின் சுற்றுவட்டாரப் பகுதிகளை உன்னிப்பாகக் கண்காணித்துவருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தாங்கள் வலுவாக இருப்பதாகவும் கூறுகிறார், இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளரான டேனியல் ஹகரி. இதனால், மற்ற பகுதிகளுக்கும் போர் விரிவடையும் என்ற அச்சம் அந்தப் பிராந்தியத்தில் எழுந்திருக்கிறது.காசா மீது தாக்குதல்

ஹமாஸ் படையை கூண்டோடு அழிக்கப்போவதாகக் கூறிவரும் இஸ்ரேல் ராணுவம் காஸாவில் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்களையும் கொன்றுகுவித்துவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது, இஸ்ரேலின் பீரங்கிகளால் காஸா சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லையென்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தச் சூழலில், முப்படைத் தாக்குதலை திட்டமிட்டப்படி இஸ்ரேல் தொடங்கினால் பெரும் பாதிப்புகள் ஏற்படும். மத்திய கிழக்கு பகுதிகளுக்கும் போர் விரிவடைவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஈரான் உள்ளிட்ட பாலஸ்தீன ஆதரவு நாடுகள் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க களத்தில் இறங்கும். ஏற்கெனவே ஹமாஸ் படையின் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில், இன்னும் மோசமான பாதிப்புகளை இஸ்ரேல் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள். போர் என்று ஒன்று தொடங்கினால், இழப்பு எல்லா தரப்புக்கும் தான்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />

http://dlvr.it/SxY7Qb

Monday, 16 October 2023

Israel-Hamas War: ``இஸ்ரேல், காஸாவை ஆக்கிரமிப்பது பெரும் தவறு என நினைக்கிறேன்!" - ஜோ பைடன்

இஸ்ரேல் - பாலஸ்தீனுக்கு மத்தியில் நடந்துவரும் போர் நாளுக்கு நாள் நூற்றுக்கணக்கான குழந்தைகளை ஆதரவற்றவர்களாக்கி வருகிறது. கடந்த 7-ம் தேதி ஹமாஸ் போராளிக்குழு இஸ்ரேல்மீது தாக்குதலைத் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலும், தனது எதிர்த் தாக்குதலைத் தொடர்ந்திருக்கிறது.இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்

இந்த அதிகார மோதலுக்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இதற்கிடையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் போர் உதவிகளும், `ஹமாஸ் குழு விரும்பினால், நாங்கள் எப்போதும் அவர்களிடம் தொடர்பில் இருப்போம்' என்ற ரஷ்யாவின் அறிவிப்பும், போர்ப் பதற்றத்தை அதிகரித்திருக்கின்றன.

மேலும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடுமையான ராணுவ தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல், வடக்கு காஸா பகுதியிலிருப்பவர்களை, தெற்கு காஸா பகுதிக்கு இடம்பெயருமாறு கூறியிருந்தது. இந்த நிலையில், `காஸா நகரை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது' என அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இது தொடர்பாகத் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமித்தால் அது பெரிய தவறாக அமையும் என்று நினைக்கிறேன்.ஜோ பைடன்

ஏனென்றால், எனது பார்வையில் ஹமாஸ் மற்றும் அதன் செயல்பாடுகள் பாலஸ்தீன மக்களைப் பிரிதிநிதித்துவப்படுத்தவில்லை. எனவே, காஸாவை மீண்டும் இஸ்ரேல் ஆக்கிரமித்தால் அது மிகப்பெரும் தவறாக அமையும்" எனத் தெரிவித்தார். அதே சமயம், இஸ்ரேலுக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும்விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கு நேரில் செல்லக்கூடும் என்ற தகவலும் வெள்ளை மாளிகையிலிருந்து கசிந்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk">
https://bit.ly/46c3KEk />
`பாலஸ்தீனத்துக்குக் குரல் கொடுத்த சிரியாவைத் தாக்கிய இஸ்ரேல்' - எச்சரிக்கும் ரஷ்யா! - நடந்தது என்ன?


http://dlvr.it/SxVyJH