Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Wednesday, 2 August 2023

Oppenheimer: அணுகுண்டுகள் வெடித்தால் பூமி என்னவாகும்? இதன் வரலாறும் பயன்பாடும்!

சமீபத்தில் ஹாலிவுட்டிலிருந்து வெளியாகியிருக்கும் 'ஓப்பன்ஹைமர்' (Oppenheimer) திரைப்படத்தில் அணு ஆயுத சோதனையும், அதைக் கண்டுபிடித்தவரின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட்டுள்ளது. நாம் திரைப்படத்துக்குள் செல்லவில்லை. அணுகுண்டுகள் பற்றிய வரலாற்றையும் அது பூமியில் வெடித்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், பயன்பாடுகளை பற்றியும் பார்ப்போம். உங்களுக்குச் சின்ன பையனைத் (Little boy) தெரியுமா? 'சின்னப் பையன்' என்ற  செல்லப் பெயரை அமெரிக்கா ஒரு அணு குண்டுக்கு வைத்தது.  பெயர்தான் சின்னப் பையன். ஆனால் இவனின் மொத்த எடை 4,400 கிலோ. ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்கதிர்வீச்சு தொழில்நுட்பத்தில் வெங்காயத்தை சேமிக்கும் மத்திய அரசு... பாதுகாப்பான தொழில்நுட்பமா? இவனை 1946-ம் ஆண்டு ஆகஸ்ட்  6-ம் நாள் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா என்ற நகரத்தின் மேல் போட்டனர். அதன் விளைவு  1.6 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இருந்த கட்டடங்கள் தரைமட்டமாயின.  அடுத்த மூன்று நாட்களில் 'நாகசாகி' என்ற ஜப்பானிய நகரின் மீது குண்டன் என்ற இன்னொரு குண்டை போட்டனர். இதனால் 2.4 கிலோமீட்டர் சுற்றளவிற்கும் அதிகமான இடத்திலிருந்த கட்டடங்கள் தரைமட்டமாயின.  இப்படி இரண்டாம் உலகப் போரில் மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்திய அணுகுண்டு எப்படி உருவானது தெரியுமா? அணுகுண்டின் வரலாறு.... 1896 -ம் ஆண்டு ஹென்றி பெர்குரல்  (Henri Becquerel) தற்செயலாக யுரேனியம் என்ற தனிமம் கதிரியக்கத்தை உமிழ்கிறது எனக் கண்டறிந்தார். அடுத்த இரண்டு வருடங்களில்  (1898 -ம் ஆண்டு)  மேரிக் கியூரி தன் கணவருடன் இணைந்து ரேடியம் மற்றும் போலோனியம் என்ற இரண்டு கதிரியக்கத்தை உமிழும் தனிமங்களைக் கண்டறிந்தார். ஆல்பா, பீட்டா மற்றும் காமா எனக் கதிரியக்கம் மூன்று வகைப்படும். இதில் ஆல்பா கதிரியக்கம் மிகவும் மென்மையானது. இது நம் தோலில் மேல் பரப்பில் உள்ள இறந்த செல்களால் ஆன அடுக்கைக் கூட ஊடுருவ முடியாது. இரண்டாவது பீட்டா கதிர்வீச்சு. இந்த கதிர்வீச்சு சில அடி தூரம் பயணிக்க வல்லது. ஆனால் அரை அங்குல ஈயத் தகடால் இந்த கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்த முடியும். காமா கதிர்வீச்சு மிகவும் சக்தி வாய்ந்தது. இது பெரிய காங்கிரீட் சுவரையும் ஊடுருவும் வல்லமை படைத்தது. தன் வலிமையால் தண்ணீர் மூலக்கூற்றையும் கூட உடைக்கும்  சக்தி படைத்தது. எக்ஸ் ரே-வும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். இந்த காமா கதிரியக்கத்தைக் கொண்டு மரபணுவான DNA-வை உடைக்க முடியும். பின்னர் இந்த உடைந்த DNA வை எப்படிப் பழுதுபார்க்கிறது என்பதையும் கண்டறிய முடியும். இந்த வகை ஆராய்ச்சி புற்றுநோய் பற்றி அறியவும் புற்றுநோய் மருத்துவத்திற்கு மிகவும் அவசியம்.அமெரிக்கா - ரஷ்யா இடையே முழு அளவிலான அணு ஆயுதப் போர்`நல்ல நீரை கெட்ட நீரா மாத்தாதீங்க!' 7 ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்றை சுத்தப் படுத்தும் டாக்ஸி டிரைவர்! அணுக்கள் கதிரியக்கத்தை உமிழ்கின்றன என்ற கண்டுபிடிப்புகள் அணுக்களுக்குள் அபரிமிதமான ஆற்றல் புதைந்துள்ளது என படமிட்டுக் காட்டியது. அதனால் ஆற்றலுக்கும் அணுக்களுக்கும் உள்ள தொடர்பை ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கண்டறியப் பாடுபட்டார். இறுதியாக 1905-ம் ஆண்டு E=mc2  என்ற சமன்பாட்டை உருவாக்கினார். இந்த சமன்பாடு அணுகுண்டு உருவாக்கப் பெரிதும் பயன்பட்டது. பின்னர் 1945-ம் ஆண்டு அமெரிக்கா,  தான் தயாரித்த அணுகுண்டை  முதல்  முறையாகச் சோதனை நடத்தியது. சூரியனில் வெடிக்கும் அணுகுண்டுகள்... சூரியனில் ஒவ்வொரு வினாடியும் பல கோடான கோடி அணுகுண்டுகள் வெடிக்கின்றன. இந்த வையகம் அணுக்களால் ஆனது. இந்த அணுக்களை உடைத்தாலும்  நிறைய ஆற்றல் வெளிப்படும்.  அதேபோல் ஓர் அணுக்குள் இன்னொரு அணுவைப்  புகுத்தி ஒரு பெரிய அணுவை உண்டாக்கும் போதும் அபரிமிதமான ஆற்றல் வெளிப்படும். உதாரணமாக நமது சூரியன் ஹைட்ரஜன் அணுக்களால் ஆனது. சூரியனில் இந்த சிறிய ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றையொன்று விழுங்குகிறது. அதனால்  சற்று பெரிய ஹீலியம் அணு உருவாகிறது. இந்த தருணத்தில் நிறைய  கதிரியக்க ஆற்றல்  உருவாகின்றன.  சூரியனுக்கு அருகில் இந்த கதிரியக்கம் மிகவும் வலிமையானதாக உள்ளது. இந்த ஆற்றல் நாம் உருவாக்க வேண்டுமானால் ஒவ்வொரு வினாடியும் பல கோடி அணுகுண்டுகளை வெடித்தாக வேண்டும்.சூரிய கிரகணம்`கோளை விழுங்கிய நட்சத்திரம்' பூமிக்கு ஆபத்து வருமா..?ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன? சூரியனுக்கு அருகிலிருக்கும் இந்த வலிமையான கதிரியக்கம்  14.96 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்து பூமியை வந்தடைகிறது. இந்த நெடும் தூரப் பயணத்தில் கதிரியக்கம் தன் வலுவை பெரும் அளவில் இழக்கிறது. அதனால்  இதமான சூரிய ஒளியாய் பூமியில் விழுகிறது. சூரியனில் நடப்பதுபோல் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டு ஹீலியம் உருவாக்கும்  தொழில்நுட்பம் இன்றும் எந்த நாட்டிலும் இல்லை.  இப்படி இரண்டு அணுக்கள் சேர்ந்து ஓர் அணுவாக மாறுவதால் ஆற்றல் மட்டுமே கிடைக்கிறது. மோசமான கதிரியக்கப் பொருட்கள் உருவாக்குவதில்லை. அதனால் இந்த தொழில்நுட்பத்தை  மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.  பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கப் போட்டிப் போட்டு வருகிறது. இது சாத்தியமானால் இன்னும் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் அணுகுண்டுகள் தயாரிக்கலாம். அணுகுண்டைத் தயாரிக்க எளிதில் உடையக்கூடிய  யுரேனியம்-233, யுரேனியம்-235, புளூட்டோனியம் -239  ஆகிய தனிமங்களைப் பயன்படுத்துகின்றனர்.  உலகில் நிறைய அணு உலைகள் உள்ளன. இந்த அணு உலைகளின் நோக்கம் மின்சாரம் உற்பத்திதான். ஆனால் கூடவே அணு உலையில் யுரேனியம்-235 மற்றும் யுரேனியம் 238 ஆகிய தனிமங்களும் உற்பத்தி ஆகின்றன.  இவற்றைக் கொண்டுதான் சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. யுரேனியம்,  புளூட்டோனியம் மற்றும் தோரிய அணுக்கள் உருவத்தில் பெரியவை. இந்த பெரிய அணுக்கள் உடையும்போது நிறையக் கதிரியக்க ஆற்றல் வெளிப்படுகிறது. கூடவே இரண்டு  சிறிய வகை அணுக்கள் உருவாகின்றன. இந்த சின்ன அணுக்களும் அடுத்து உடைகிறது. அதனால் பல வகையான கதிரியக்க பொருட்களும் வலுவான ஆற்றலும் உருவாகின்றன. ரஷ்யா - அணு உலைஆண்டுக்கு 1,000 பேரைக் கொல்லும் வெள்ளைக் காளான்கள்... உயிர்த்தெழுந்தவரின் அனுபவம்! ஒரு கிராம் யுரேனியத்தில் 2.56 x1021 என்ற எண்ணிக்கையில் அணுக்கள் உள்ளன. 256-க்குப் பின் 19 பூஜ்ஜியத்தைச் சேர்க்க வேண்டும். அதாவது ஒரு கிராமில் உள்ள 2560000000000000000000 அணுக்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் பிளவுபடுகிறது. இரண்டாகப் பிளந்த இந்த சிறு அணுக்கள் மேலும் சிறியதாகப் பிளவுபடுகின்றன. இது மாதிரி இந்த அணுக்கள் மேலும் மேலும் பிளவுபடுகிறன. இவை அனைத்தும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிவடைந்து விடுகிறது. அதனால் அபரிமித ஆற்றலும் வகை வகையான கதிரியக்கப் பொருட்களும் உற்பத்தியாகிறன. ஒரு அணு உடைந்தால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடாது. ஆனால் குண்டன் என்ற அணுகுண்டில் சுமார் 4000 கிலோ புளூட்டோனியம் திணிக்கப்பட்டிருந்து. அத்தனையும் ஒரே நேரத்தில் பலமுறை வெடித்ததால்தான் இந்த பேரழிவு. ஏன் இப்படி இந்த அணுக் குண்டுகளை நடுவானில் வெடிக்கச் செய்கிறனர்? அதிக பரப்பளவில் உள்ள கட்டடங்களைத் தரைமட்டமாக்கவும்; அந்த பகுதியில் உள்ள நீர், நிலம் மற்றும் காற்றில் கதிரியக்க பொருளைப் பரப்புவதற்காகவும்தான் இந்த ஏற்பாடு. இதனால் வாழ் நிலம், சுவாசிக்கும்  காற்று மற்றும்  அங்குள்ள குடிநீர் ஆதாரங்கள் பாழடையும். தரையில் வெடிக்கச் செய்தால் இவ்வளவு சேதம் வராது. பூமி அந்த அதிர்வைத் தாங்கிக் கொள்ளும். நஞ்சு கதிரியக்க பொருட்கள் அதிக தூரம் பரவாது. குண்டு வெடிப்பு கண் பார்வையை மீட்க வழிசொல்லும் மரபணு ஆராய்ச்சி... மதுரை விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு! அணுக்குண்டு வெடித்த இடத்தில் பாதிப்பு எவ்வளவு காலம் இருக்கும்? யுரேனியம்-235 என்ற அணு  காமா கதிரியக்கத்தை உமிழும் தன்மை உடையது. இது அணுகுண்டு வெடித்த இடத்தில் 1 கிலோ அளவு உள்ளதாக வைத்துக் கொள்ளுவோம். 70.38 கோடி ஆண்டுகளில் இந்த அணு 500 கிராமாகக் குறையும். அடுத்த 70.38 கோடி ஆண்டுகளில்  25 கிராமாகக் குறையும். இப்படி ஒவ்வொரு 70.38 கோடி ஆண்டுகளிலும் இதன் அளவு பாதியாகக் குறையும். இதனைக் கதிரியக்கப் பொருளின் அரை ஆயுள் காலம் என அழைக்கின்றனர். நீண்ட ஆயுளைக் கொண்ட இவ்வகை கதிரியக்கப் பொருட்கள் அணுகுண்டு வெடித்த நிலப்பரப்பில் கோடான கோடி ஆண்டுகள் நிலைத்திருக்கும் வல்லமை படைத்தது. அதனால் இந்த நிலம் நிரந்தரமாக விவசாயத்திற்கும் மக்கள் வாழ்வதற்கும் பயனற்றுப் போகும். யுரேனியம்-238  அணுக்களும் குண்டு வெடித்த இடத்தில் காணப்படும். இதுவும் காமா கதிரியக்கத்தை உமிழும் பண்புடையது. இதன் அரை ஆயுள் காலம் 4468 கோடி வருடங்கள். யோசித்துப் பாருங்கள். சில அணுகுண்டுகள் பூமியை எந்த உயிரினமும் வாழத் தகுதியற்றதாக மாற்றும் வல்லமை படைத்தது எனப் புரிந்து கொள்ளலாம்.பொக்ரான் அணுகுண்டு வெடிப்புநிலநடுக்கம் வரக் காரணங்கள்... முன்கூட்டியே கணிக்க முடியுமா? அனைத்து உயிர்களுக்கும் தாய் பாக்டீரியம் என்ற நுண்ணுயிரி. இது சுமார் 320 கோடி ஆண்டுகள் முன்தான் பூமியில் தோன்றியது. பின்னர் இதனிலிருந்து பிற உயிர்களும் தோன்றின. இதன் அடிப்படையில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதன் தோன்றினான் என்று சொல்லப்படுகிறது. யுரேனியம்-235 மற்றும் யுரேனியம் 238 போன்ற  கதிரியக்கப் பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்து ஆங்காங்கே சிதறவிட்டால் பூமி நிரந்தரமாக உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக மாறிவிடும் அபாயம் உள்ளது. காரணம் இவை  அடுத்த கோடான கோடி ஆண்டுகளுக்கும் மேலாக உயிரினங்களைத் தழைக்க விடாமல் தடுக்கும் வல்லமை படைத்தது. எப்படி இந்த கதிரியக்க பொருட்கள் உயிரினங்களை அழிக்கிறது? "கதிரியக்கப் பொருள்கள் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்தால்  நமக்கென்ன" என எண்ண வேண்டாம். இதிலிருந்து வெளியேற்றப்படும் காமா கதிரியக்கம் தண்ணீரை உடைத்து OH- மற்றும் H+ அயனிகளை உண்டு பண்ண வல்லது. இந்த அயனிகள் உயிரினங்களின் மரபணுவைச் சுக்கு நூறாக உடைக்கவும்  மற்றும் புரத கட்டமைப்பைச் சிதைக்கவும் முடியும். இதனால் உயிர்களின் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் செத்து மடியும். எனவே செடி கொடிகள் மற்றும் மரங்கள் மட்டும் அல்ல அனைத்து உயிரினங்களும் செத்து மடியும். பூமிக்குள் பல அடி ஆழத்தில் வாழும் உயிரினங்களும்; ஆழமான கடற்பகுதியில் வாழும் உயிரினங்களும் தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது. இவ்வாறாக அணுகுண்டு வெடித்த இடம்  உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக  மாறிவிடும்.Solar Storm | சூரிய புயல்அதிக மதிப்பெண் எடுப்பவர்கள், அதிக நண்பர்கள் உள்ளவர்கள்; வாழ்க்கையில் வெற்றிபெறுபவர்கள் யார்? இது மட்டும் அல்ல, அணுகுண்டு வெடிப்பின்போது செனான்133 (Xenon-133), கிரிப்டான-89 (Krypton-89) மற்றும் கிரிப்டான-89 போன்ற கதிரியக்கப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. இவை அனைத்தும் வாயுக்கள். இவற்றின் அரை ஆயுள் காலம் சில நிமிடங்களிலிருந்து சில நாள்கள் ஆகும். இவை எந்த தனிமத்துடனும் வாயுக்களுடனும் இணையாது. எப்பவுமே தனித்துதான் இருக்கும். இவற்றைச் சுவாசிக்க நேர்ந்தால் கொடுமையான மரணம் நிச்சயம். அணுகுண்டு வெடிக்கும் தருணத்தில் தண்ணீரில் யுரேனியம்-235, யுரேனியம்-238,  சிசியம்-137 (Cesium-137) ஸ்ரோனியம்-90,  ஐயோடின்-131 பேரியம்-140 ஆகிய கதிரியக்கப் பொருள்கள் கலக்கும்.  இந்த கதிரியக்கப் பொருள்களின் அரை ஆயுள் காலம் சில நாள்கள் முதல் கோடான கோடி  ஆண்டுகள் வரையிலானது. கதிரியக்கப் பொருள்கள் கலந்த தண்ணீரைக் குடிப்பதும் பத்து மாடி கட்டத்திலிருந்து குதிப்பதும் ஒன்றுதான். இரண்டிலும் சாவு நிச்சயம். இரண்டு நாட்கள் தண்ணீர் அருந்தாமல் இருந்தால் சிறுநீரக பாதிப்பால் மரணம் நிச்சயம் வரும். அதே நேரத்தில்  கதிரியக்கப் பொருள் நிறைந்திருக்கும் குடிநீரைக் குடித்தாலும் விரைவில் பரிதாபமாக இறக்க வேண்டிவரும். எப்படி இறக்க போகிறோம் என்பதுதான் கேள்வி.பூமி இவ்வாறாகக் குண்டு வெடித்த நகரத்தின் நீர்,  நிலம்,  காற்று ஆகியவற்றில் கதிரியக்கத்தை உமிழும் பொருள்கள் நிறைந்து காணப்படும்.  இதனால் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.இரண்டாம் உலக போர் இந்த அணுகுண்டு வெடித்த பகுதியில்  காயத்துடன் உயிர் தப்பியவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான் என  நினைக்க வேண்டாம். கடுமையான கதிர்வீச்சு காரணமாக அவர்களுக்கு சில ஆண்டுகளில் பல வகையான புற்றுநோய் வர வாய்ப்பு மிக அதிகம். ஓப்பன்ஹைமர் திரைப்படத்தில் அணுகுண்டு சோதனை நடத்திய நியூ மெக்சிகோ பகுதியிலும் அங்கே வசித்த மக்களுக்கு கதிரியக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. மேலும் அணுகுண்டு வெடிப்பு ஏற்பட்ட இடம் விவசாயத்திற்கு முற்றிலும் பயன்படாது. கோடான கோடி வருடங்களாகப் பொட்டல் காடாகக் காட்சி அளிக்கும்.  மண்ணை நாசமாக்கும் அணுகுண்டு சோதனையை அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா நடத்தியுள்ளது. கடல் தண்ணீருக்குள் வெடிக்கச் செய்யும் அணுகுண்டுகளையும் பல நாடுகள் சோதித்துப் பார்த்துள்ளன. விண்வெளியிலும் இந்த சோதனையை அமெரிக்காவும் ரஷ்யாவும் நடத்தியுள்ளது. ஏன் இப்படி அணு குண்டின் மேல் இவ்வளவு மோகம்? எனச் சிந்தித்தால்  சில நாடுகள் தம்மை உலக காவல்காரர்களாக நினைத்துக் கொள்கிறன. பிற நாடுகளைக் கட்டுப்படுத்தவே அணுகுண்டுகளை வைத்துள்ளதாக அவை கூறுகிறன.கட்டுரையாளர்: பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் இந்த அணுகுண்டு தயாரிப்பால் இரண்டே இரண்டு நன்மைகள்தான் உண்டு. நம் பூமி  தண்ணீர் நிரப்பிய ஒரு மண் பாண்டம் எனலாம். இதன் மேல் ஒரு விண்கல் மோதினால் பேரழிவை உண்டு பண்ணும். அதனால் பூமி மேல் மோத உள்ள விண்கற்களை அழிக்க இந்த அணுகுண்டைப் பயன்படுத்தலாம். அடுத்து வேற்றுகிரகவாசிகள் யாராவது வந்து நம்மைத் தாக்கினால் விண்வெளியிலேயே அவர்களைக் கட்டுப்படுத்த அணுகுண்டுகளைப் பயன்படுத்தும் காலம் வரலாம். அணுகுண்டு தொழில்நுட்பத்தில்தான் அணு மின்நிலையங்கள் செயல்படுகின்றன. எனவே இந்த அணுகுண்டு தொழில்நுட்ப வளர்ச்சி மின்சாரம் தயாரிப்பதற்கு மிகவும் உதவுகிறது. அணுகுண்டு தொழில்நுட்பத்தை கையாள்வது மனிதனின் கைகளில்தான் இருக்கிறது.
http://dlvr.it/St5787

0 comments:

Post a Comment