ஹங்கேரி தலைநகரமான புடாபெஸ்ட் நகரில் நடந்துவரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆசிய சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஹீட் சுற்றில் ஓடிய அமோஜ் ஜேக்கப், முகம்மது அனாஸ், முகம்மது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் அடங்கிய நால்வர் அணி 2:59.05 என்ற நேரத்தில் பந்தயத்தை முடித்து ஜப்பான் அணி வசமிருந்த ஆசிய ரெக்கார்டை(2.59.51) முறியடித்திருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஓரிகன் நகரில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்த சாதனையை படைத்திருந்தது ஜப்பான். இத்துடன் அமோஜ் ஜேக்கப், முகம்மது அனாஸ், நோவா நிர்மல் டாம், ஆரோக்கிய ராஜிவ் டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்திருந்த 3:00.25 என்ற தேசிய சாதனையையும் முறியடித்திருக்கிறது இந்த அணி.
Incredible teamwork at the World Athletics Championships!
Anas, Amoj, Rajesh Ramesh and Muhammed Ajmal sprinted into the finals, setting a new Asian Record in the M 4X400m Relay.
This will be remembered as a triumphant comeback, truly historical for Indian athletics. pic.twitter.com/5pRkmOoIkM— Narendra Modi (@narendramodi) August 27, 2023
இறுதிசுற்றுக்குத் தகுதிபெற்றிருக்கும் இந்தியா மொத்தமாக ஹீட் சுற்று முடிவில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. தடகள போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்கும் ஜமைக்கா, கென்யா போன்ற நாடுகளையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது இந்தியா. Yo-Yo Test ஸ்கோரை பகிரங்கமாக வெளியிட்ட கோலி; கண்டித்து கட்டுப்பாடு விதித்த பிசிசிஐ - என்ன பிரச்னை?
Who saw this coming
India punches its ticket to the men's 4x400m final with a huge Asian record of 2:59.05 #WorldAthleticsChamps pic.twitter.com/fZ9lBqoZ4h— World Athletics (@WorldAthletics) August 26, 2023
நான்காவது லேனில், மூத்த வீரரான முகம்மது அனாஸ் ரேஸை சிறப்பாகத் தொடங்கி வைத்தார். அதன் பிறகு இரண்டாவதாக ஓடிய அமோஜ் ஜேக்கப்பும், மூன்றாவதாக ஓடிய அஜ்மலும் முன்னிலையை தக்கவைத்தனர். இறுதியாக ஓடிய தமிழக வீரர் ரமேஷ் தனது முழு ஆற்றலுடன் அமெரிக்க அணியை முந்த முயற்சி செய்தார். அதைச் செய்யத் தவறினாலும் இரண்டாவதாக வந்து இறுதிச்சுற்றுக்கு அணியைத் தகுதிபெறச் செய்தார். ஆசிய ரெகார்டும் இந்தியாவின் வசமானது.இந்த அணியில் ராஜேஷ் ரமேஷை தவிர்த்து மற்ற மூவரும் கேரளத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இறுதிசுற்றுக்கு தகுதிபெற்ற அணிகள்!
இன்று நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்ல இன்னும் கூட வேகமாக இந்திய அணி ஓடவேண்டியிருக்கும். அப்படி பதக்கம் வென்றால் இந்திய தடகள வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அது அமையும். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கையும் பெரும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் இந்தியா!
http://dlvr.it/SvFHqL
Sunday, 27 August 2023
Home »
» 4x400m: அமெரிக்காவுக்கு டஃப் கொடுத்த இந்தியா... ஆசிய ரெக்கார்ட்டை முறியடிப்பு!







0 comments:
Post a Comment