அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஒன்றான மெளயி-ல் (Maui) கடந்த 8-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது. இந்தக் காட்டுத் தீயில் மாட்டி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்திருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் இந்த காட்டுத் தீயிலிருந்து தப்பிக்கக் கடலினுள் குதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததில் சுமார் 271 கட்டடங்கள் சேதம் அடைந்தன. இதில் லைஹானா நகரம் முற்றிலும் உருக்குலைந்ததாகக் கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும் செல்போன் சேவை இல்லாததால் மக்கள் அவதியுற்று வருவதாக கூறப்படுகிறது.
``காட்டுத் தீயிலிருந்து தப்பிக்கக் கடலில் குதிப்பதுதான் ஒரே வழி” என மீட்புப்படையினர் கூறியதாகப் பேராபத்திலிருந்து மீண்டவர்கள் தெரிவித்தனர். தனது 25-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாட, ஹவாய் சென்றிருந்த கனடாவைச் சேர்ந்த பிரண்டன் வில்சன் என்பவர், யாரோ ஒருவர் திடீரென வந்து அந்த நகரம் முழுவதும் குண்டு வீசியதுபோல இருந்ததாக அதிர்ச்சியிலிருந்து மீளாதவராய் கூறியிருக்கிறார்.காட்டுத் தீ
மௌயி பகுதியின் கவர்னர் ஜோஷ் கிரீன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நான்காம் முறையாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், `` ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ ஒரு பேரழிவு. ராணுவம் மீட்புப்பணியில் ஈடுபடும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.
I don't think any of us fully realized the absolute tragedy that unfolded in Lahaina, Maui. Some people were even forced to jump into the ocean to escape the flames. I can only imagine how terrifying that must have been. To donate, visit
https://t.co/4vepc5u2xm pic.twitter.com/tTmxPMvXAI— Nahel Belgherze (@WxNB_) August 11, 2023
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxs“அமெரிக்கா மாதிரி இந்திய வீரர்களும் கோடிகளில் சம்பாதிக்கலாம்!” - ஆதவ் அர்ஜுனா
http://dlvr.it/StY0xt
Saturday, 12 August 2023
Home »
» ஹவாய் தீவைச் சூழ்ந்த காட்டுத் தீ; தப்பிக்க கடலில் குதித்த மக்கள் - பலி எண்ணிக்கை 67-ஆக உயர்வு!







0 comments:
Post a Comment