Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Monday, 7 August 2023

அமெரிக்காவில் என் மனதை கவர்ந்த ஒரு விஷயம்! - நெகிழும் தமிழ் பெண் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் எங்கள் குடும்பத்தில் நாங்கள் அதிகமான பயணங்கள் மேற்க்கொண்டது கிடையாது. ஆனால் எங்கள் மகள் நிமித்தமாக அமெரிக்காவிற்கு நான்கு முறை சென்று வந்தோம். அங்கு கண்டுகளிக்க பல சுற்றுலா இடங்கள், இயற்கை காட்சிகள் நிறைந்து இருக்கிறது. அதை பற்றி பலரும் பல கட்டுரைகளும், நூல்களும் எழுதி விட்டனர். அதனால் என் மனம் கவர்ந்த சில விஷயங்களை பற்றி மட்டும் கூற விரும்புகிறேன்.  எனக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அதிகம்.சிறுவயது முதலே என் டில் அனைவரும் புத்தக பிரியர்கள்.ஆனால் இப்பொழுது படிக்கும் பழக்கமே குறைத்து விட்டது.இது என் பெரிய மனக்குறை. ஆனால் அமெரிக்காவில் நான் பார்த்து வியந்த, மகிழ்ந்த ஓன்று என்றால் எங்கு பார்த்தாலும் புத்தகம் வாசித்துக்கொண்டு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வலம் வருகின்றனர்.America எந்த இடம் என்று இல்லை பார்க், ரயில்வே ஸ்டேஷன், பீச் , பள்ளி மைதானங்கள், மற்றும் கூட்டமான இடங்களில் கூட புத்தகமும் கையுமாக அமர்ந்து ஆழ்ந்து படித்து கொண்டிருக்கின்றனர். சிறு வயது முதலே குழந்தைகளுக்கு பள்ளியிலும், உள்ளூர் லைப்ரரியிலும் பலவிதமான பரிசுகள் அளித்து புத்தக வாசிப்புக்கு ஊக்குவிக்கிறார்கள். Representational Image லைப்ரரியில் இத்தனை புத்தகங்கள் வாசித்தால் இவ்வளவு பாயிண்ட் என்று வைத்து ஸ்டார் பேட்ஜ் கொடுக்கிறார்கள்.அதனை குழந்தைகள் சட்டையில் பெருமையுடன் அணிந்து கொள்கிறார்கள். பொது நூலகங்களில் அவ்வப்போது இலவசப் புத்தகங்கள் 50 சென்ட் , ஒரு டாலர் என்று மலிவு விலையில் கண்கவர் ஓவியங்கள் நிறைத்த புத்தகங்கள், பெரியவர் முதல் சிறுவர் வரை படிப்பதற்கு ஏற்றவாறு வழங்குகிறார்கள். Representational Image இதையெல்லாம் விட என்னை கவர்ந்த விஷயம் நம் ஊரில் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைப்பது போல அவரவர் வீட்டருகில், மரநிழலில், தெரு ஓரங்களில் ஒரு பெஞ்சும், இலவச புத்தங்கங்கள் நிறைந்த ஒரு கண்ணாடிப் பெட்டியும் அமைத்திருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அமர்ந்து படிக்கலாம், புத்தகம் எடுத்து செல்லலாம், நம்மிடம் உள்ள நூல்களையும் அவைற்றில் போடலாம். நம் ஊரில் காகித விலை அதிகம், அதனால் மலிவு விலையில் நூல்களை விற்கமுடியாது. ஆனால் வசதி படைத்தவர்கள் சிறு சிறு நூல்கள் அச்சிட்டு பொது நூலகங்கள் மூலம் அளிக்கலாமே.Representational Image படித்த பெற்றோர்களே பிள்ளைகளுக்கு மொபைல் போன், தொலைக்காட்சி போன்றவற்றை பழக்கி பொழுதை வீணடிக்கிறார்கள். எதை எடுத்தாலும் அமெரிக்காவை பார்த்து பின்பற்றுபவர்களே இந்த மாதிரி விஷயங்களை பற்றி யோசிக்கலாமே! என்னை கவர்ந்த சில விஷயங்களை அடுத்த கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி. அன்புடன், லதாதாஸ் கோவை விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
http://dlvr.it/StJbPD

0 comments:

Post a Comment