சென்னை கன்டோன்மென்ட் பல்லாவரம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வரும் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மாரியம்மன் கோவில் வீதியிலுள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் ஆலயத்தின் நூதன ராஜகோபுர ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிறு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை கிராம நாட்டாண்மை, ஆலய நிர்வாகிகள், கட்டத் திருப்பணிக் குழுவினர் மற்றும் கும்பாபிஷேக விழாக் குழுவினர் செய்துவருகின்றனர். படிக்க: முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகின்றன. சனிக்கிழமை இரண்டாம் நாள் பூஜைகளைத் தொடர்ந்து, மூன்றாம் நாள் ஞாயிறு காலை 6 மணிக்குத் தொடங்கி கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் ஆகுதிகளும் நடைபெறுகின்றன. காலை 9 மணிக்கு யாத்ராதானமும் மகா பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கும்பம் புறப்பாடு நடைபெறும்; 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நூதன ராஜகோபுர விமான கலசம் மற்றும் சர்வசக்தி ஸ்ரீ தண்டுமாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகா அபிஷேகமும் மாலையில் அம்மன் திருவீதிவுலாவும் நடைபெறும்.
from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/oFeYcsx https://ift.tt/8OvqRsk
via
IFTTT
0 comments:
Post a Comment