Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Wednesday, 2 August 2023

50-வது திருமணநாள்: காதல் மனைவிக்கு விவசாய கணவன் கொடுத்த அடடே சர்ப்ரைஸ்!

பொதுவாக நமக்குப் பிடித்த நபர்களுக்கு, நம்மைப் பிடித்த நபர்களுக்கு எதிர்பாரா நேரத்தில், எதிர்பார்க்காத ஒன்றை சர்ப்ரைஸாகக் கொடுப்பதென்பது, கொடுப்பவருக்கும் அதைப் பெற்றுகொள்பவருக்கும் எப்போதும் அளப்பரிய சந்தோஷத்தைத் தரும். இந்த நிலையில், நமக்குப் பிடித்தவருக்கு இப்படியொரு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று எண்ணுமளவுக்கு, அமெரிக்காவில் தங்களுடைய 50-வது திருமண நாளில் மனைவிக்கு கணவர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.காதல் லீ வில்சனும் (Lee Wilson), ரெனீயும் (Renee) கணவன் மனைவி. இருவரும் தங்களின் உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலிருந்தே ஒன்றாகவே இருக்கின்றனர். இத்தகைய சூழலில், இருவருக்கும் ஆகஸ்ட் 10-ம் தேதி 50-வது திருமணநாள் வரவிருக்கிறது. இதைப் பல மாதங்களுக்கு முன்பே நினைவில் வைத்துக்கொண்ட லீ வில்சன், இதுவரை யாரும் செய்யாத ஒன்றை ரெனீக்கு சர்ப்ரைஸாகத் தர வேண்டும் என நிறைய யோசித்தார். ரெனீக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று ஆராய்ந்த லீ வில்சன், ஒரு வழியாக ரெனீக்கு சூரியகாந்தி மலர் பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டார். பிறகு சூரியகாந்தியை வைத்து என்ன சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று யோசித்த லீ வில்சன், தன்னுடைய வயலில் சூரியகாந்தியை விதைக்கத் திட்டமிட்டார். அதைத் தொடர்ந்து லீ வில்சன் ரெனீக்கு கூட தெரியாமல் ரகசியமாக தன்னுடைய மகனின் உதவியுடன் கடந்த மே மாதத்தில், ஏக்கருக்கு 15,000 சூரியகாந்தி என 80 ஏக்கரில் 1.2 மில்லியன் சூரியகாந்தியை நட்டார். இப்போது அந்த சூரியகாந்திகள் அனைத்தும், புவியின் ஒரு பகுதியை மஞ்சள் போர்வையால் போர்த்தியதாய் உயர்ந்து மலர்ந்து விரிந்திருக்கின்றன. இதை எப்படியோ தெரிந்துகொண்ட ஊடகங்கள் லீ வில்சன், ரெனீயை நோக்கி நகர்ந்தன.சூரியகாந்தி அப்போது ஊடகமொன்றிடம் பேசிய லீ வில்சன், ``ஆமாம், ஆகஸ்ட் 10-ல் நாங்கள் எங்களின் 50-வது திருமணநாளைக் கொண்டாடப்போகிறோம். 50-வது திருமணநாளில் அவளுக்காக நான் என்ன வைத்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா... அது பற்றி நிறைய யோசித்தேன், அவளுக்கு எப்போதுமே சூரியகாந்தி பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டேன்" என்றார். அவரைத் தொடர்ந்து ரெனீ, ``இது என்னைச் சந்தோஷமாக, சிறப்பானதாக உணரவைத்திருக்கிறது. இந்த சூரியகாந்தி வயலை விட எதுவும் சிறந்த திருமணநாள் பரிசாக எதுவும் இருக்க முடியாது " எனக் கண்ணில் காதலோடு கூறினார். இத்தகைய சுவாரஸ்ய நிகழ்வு வெளியில் பரவவே, பொதுமக்கள் பலரும் அந்த சூரியகாந்தி வயலை நோக்கிப் படையெடுத்துச் செல்கின்றனர்.மீண்டும் ஒரு நாடு கடந்த காதல் பயணம்... ஆன்லைன் காதலனைக் காண பாகிஸ்தானுக்குப் பறந்த சீனப் பெண்!
http://dlvr.it/St602t

0 comments:

Post a Comment