Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Monday, 7 August 2023

`நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோதெல்லாம், காங்கிரஸ் சீனாவிடமிருந்து பணம் பெற்றது!' - சாடும் பாஜக

தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில், சீனா குறித்து செய்திகளைப் பரப்புவதற்கு உலக அளவில் `News Click' செய்தி நிறுவனம் உதவுவதாகவும், அதற்குப் பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் வந்த செய்தியைக் குறிப்பிட்டு, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ``சீனா, காங்கிரஸ், நியூஸ் க்ளிக் செய்தி இணையதளம் ஆகிய மூன்றும் ஒரே தொப்புள்கொடி உறவுகள்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கும், அவரது கட்சிக்கும் சீனாவுடனான தொடர்புகள் குறித்து எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.ராகுல் காந்தி தி நியூயார்க் டைம்ஸில் வெளிவந்திருக்கும் செய்தியில், நியூஸ் க்ளிக் நிறுவனம், சீனாவைத் தளமாகக் கொண்ட அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான மொகல் நெவில் ராய் சிங்கமிடமிருந்து நிதியுதவி பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த மொகல் நெவில் ராய் சிங்கம் நிறுவனம், சீன அரசுடன் தொடர்புடையது என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது. நியூஸ் க்ளிக்கின் பணப் பரிவர்த்தனை இந்திய எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது. சில ஆர்வலர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், சீனாவுக்குமிடையே ஆழமான தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் வருகிறது. காங்கிரஸ் விரும்பினால் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் நிற்கலாம்... ஆனால் நாங்கள் இந்தியாவைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம். அரசின் நடவடிக்கை தவறான தகவல்களுக்கு எதிரான போர், இந்தப் போர் தொடர வேண்டும். ஜூலை 2021-ல், அமலாக்க இயக்குநரகம் நியூஸ் க்ளிக்கின் அலுவலகம் மற்றும் அதன் ஆசிரியர்களின் வீடுகளில் பணமோசடி வழக்கு தொடர்பாகச் சோதனை நடத்தியது.பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே அப்போது நியூஸ் க்ளிக், `எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை' எனக் கூறியது. அந்த நேரத்தில் இந்தப் பத்திரிகைக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து, அரசை விமர்சித்தது. சீனா, காங்கிரஸ், நியூஸ் க்ளிக் ஆகிய மூன்றும் ஒரே தொப்புள்கொடி உறவுகள் போலச் செயல்படுகின்றன" எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியைக் குறிவைத்துப் பேசிய பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, ``காங்கிரஸ் சீனப் படைகள் மற்றும் சில ஊடகங்கள் மூலம் இந்தியாவைப் பிளவுபடுத்த விரும்புகிறது. 2005 - 2014-க்கு இடையில், நாட்டில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோதெல்லாம், காங்கிரஸ் சீனாவிடமிருந்து பணம் பெற்றது. 2008-ல் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரையும் சீனா அழைத்துப் பேசியது. 2016-ல், டோக்லாம் நெருக்கடியின்போது அவர்கள் சீனர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். மாவோயிஸ்ட்டுகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களுக்கு எப்படிப் பணம் கொடுக்கப்பட்டது என்பதை தி நியூயார்க் டைம்ஸ் விளக்கியிருக்கிறது" எனக் குறிப்பிட்டார்.ராகுல் காந்தி வாங்கிய ஜாக் ரஸ்ஸல் டெரியர் நாய்க்குட்டி... இவ்வளவு சிறப்புகள் கொண்டதா?
http://dlvr.it/StK0LR

0 comments:

Post a Comment