அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் கனோகா பூங்கா (Canoga Park) அமைந்திருக்கிறது. இதன் அருகேயுள்ள வெஸ்ட்ஃபீல்ட் டோபங்கா வணிக வளாகத்துக்குள், கடந்த சனிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 4 மணியளவில் திடீரென சுமார் 50 பேர்கொண்ட ஒரு முகமூடி கொள்ளைக் கும்பல் நுழைந்தது. அந்த வளாகத்திலிருந்த ஆடம்பரப் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றதோடு மட்டுமல்லாமல், ரேக்குகள், கண்ணாடி அலமாரிகள் என அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு உடைத்து, வணிக வளாகத்தைச் சூறையாடிச் சென்றது. கடந்த சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
முகமூடி அணிந்த 50 நபர்கள் திடீரென உள்ளே நுழைந்து, அலமாரிகளைக் கவிழ்த்தும், விலையுயர்ந்த பொருள்களைக் கீழே தள்ளி உடைத்தும், உயர்தர ஆடைகள், ஆடம்பர அணிகலன்கள் மற்றும் விலையுயர்ந்த பொருள்களைக் கொள்ளையடித்துக்கொண்டு வெளியேறும் வீடியோ காட்சிகளை லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை வெளியிட்டிருக்கிறது. சுமார் 60,000 முதல் 1,00,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் மதிப்பிட்டிருக்கின்றனர். இது இந்திய மதிப்பில் சுமார் 2.5 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.
இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், வணிக வளாகத்தில் பாதுகாப்புப் பணிக்காக நின்றுகொண்டிருந்த இரண்டு பாதுகாவலர்கள்மீது கரடிக்குப் பயன்படுத்தும் ஸ்பிரேவை அடித்து (Bear Spray) அவர்களை மயக்கமடையச் செய்துவிட்டு, உள்ளே நுழைந்திருக்கின்றனர். பின்னர் அங்கிருந்து பொருள்களைக் கொள்ளையடித்துவிட்டு, போலீஸார் தகவலறிந்து வருவதற்குள் அங்கிருந்து வெளியேறி, தங்கள் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றிருக்கின்றனர். லாஸ் ஏஞ்செல்ஸ்
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்திருக்கின்றனர். ``இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை விரைந்து கண்டுபிடித்து, அவர்களைக் கைதுசெய்வோம். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க, தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்" என போலீஸார் உறுதியளித்திருக்கின்றனர்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxsஏலியன்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா? - பொதுவெளியில் போட்டுடைத்த 3 முக்கிய சாட்சிகள்! | Video
http://dlvr.it/StjwDg
Wednesday, 16 August 2023
Home »
» அமெரிக்கா: வணிக வளாகத்தைச் சூறையாடிய 50 பேர்கொண்ட கொள்ளைக் கும்பல்... `அதிர்ச்சி' கிளப்பும் வீடியோ!







0 comments:
Post a Comment