“விழுப்புரத்தைச் சேர்ந்த நபரைப் பிரெஞ்சுப் பெண் மணம் முடிக்கிறார்”, “பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் இந்தியரை PUBG கேமிங்கில் சந்தித்து காதல்” என்கிற சமீபத்திய செய்திகள் “அன்பு காட்டவும் அன்பு காட்டப்படவும் மனிதர்களாக இருந்தால் மட்டுமே போதும்” என்று நிரூபித்து கொண்டிருக்கின்றன.
அப்படி கடல் கடந்து எல்லைகளைக் கடந்த ஒரு காதல் கதை உத்தரப் பிரதேசத்திலும் நடந்துள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இளம் பெண் கிம் போ நீ (Kim Boh-nee). உத்தரப் பிரதேசம் மாநிலம் உத்னா கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்ஜித் சிங். நான்கு ஆண்டுகளுக்கு முன் சுக்ஜித் சிங், வேலைக்காக தென் கொரியாவிற்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு ஒரு காபி ஷாப்பில் வேலை கிடைத்திருக்கிறது. கிம் போ நீ-யும் அந்த காபி ஷாப்பில் பணிப்புரிந்திருக்கிறார். கிம் போ நீ - சுக்ஜித் சிங்
ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகிய இருவரும் பிறகு காதலிக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆறு மாதங்கள் மட்டுமே அங்கு பணிபுரிந்த சுக்ஜித் சிங் சூழ்நிலை காரணமாக இந்தியா திரும்பி இருக்கிறார். பிரிவால் வாடிய கிம் போ நீ சுக்ஜித் சிங்கைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து நண்பரின் உதவியுடன் மூன்று மாதக்கால சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருக்கிறார்.
பின் இருவரும் சீக்கிய மரபுப்படி உத்தரப் பிரதேசத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். சுக்ஜித் சிங்கின் குடும்ப உறுப்பினர்களும் வெளிநாட்டுப் பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.கிம் போ நீ - சுக்ஜித் சிங்
தான் இந்திய மரபுகளை விரும்புவதாகவும் கிம் போ-நீ தெரிவித்திருக்கிறார். தென்கொரியாவைச் சேர்ந்த இந்த இளம் பெண் தன் காதலுக்காக இந்தியா வந்த சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
http://dlvr.it/StxgT6
Monday, 21 August 2023
Home »
» உத்தரப் பிரதேசம்: காபி ஷாப்பில் மலர்ந்த காதல்; காதலனுக்காக எல்லைக் கடந்து வந்த தென்கொரிய பெண்!







0 comments:
Post a Comment