அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் (Transportation Security Administration ) (TSA), பயணிகளின் பைகளிலிருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பிற பொருள்களைத் திருடும் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. இந்த விமான நிலையத்தின் திருட்டு பற்றிய புகார்களை சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரித்த பின்னர், 20 வயதான ஜோசு கோன்சலேஸ், 33 வயதான லாபரியஸ் வில்லியம்ஸ் என்ற இரண்டு ஊழியர்களைக் கடந்த ஜூலை மாதம் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ கடந்த ஜூன் 29-ம் தேதி எடுக்கப்பட்டிருந்தாலும், தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.
அந்த வீடியோவில், பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்ய எக்ஸ்ரே இயந்திரத்தில் வைக்கும்போது, அதை இருவரும் சோதனை செய்கின்றனர். அப்போது ஒவ்வொரு பையிலிருந்து கிடைக்கும் பணத்தைத் திருடி, தங்களது பைகளில் வைத்துக்கொள்கின்றனர். அதோடு கையில் கிடைத்த சில பொருள்களையும் திருடிவைத்துக்கொள்கின்றனர்.
TSA Agents caught on surveillance video stealing hundreds of dollars in cash from passengers’ bags at Miami airport. pic.twitter.com/LhFW9yNRNV— Mike Sington (@MikeSington) September 13, 2023
இந்தத் திருட்டின்போது இருவரும் சேர்ந்து பயணிகளிடம் குறைந்தது $600 டாலர் ரொக்கம் மற்றும் பிற பொருள்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது. மேலும் விசாரணையில், இவர்கள் இருவரும் பணியில் இருக்கும்போது ஒரு நாளைக்குச் சராசரியாக $1,000 டாலர் வரை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். விசாரணை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் முடிவடையும் வரை ஸ்க்ரீனிங் பணிகளிலிருந்து அதிகாரிகள் நீக்கப்பட்டிருக்கின்றனர்.
பொதுவாக விமான நிலையங்களில் பயணிகளை கவனிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளே இது போன்ற செயலில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYமணிப்பூர்: துப்பாக்கிச்சூடு... தீவைப்பு... மணிப்பூர் - மியான்மர் எல்லையில் பதற்றம்!
http://dlvr.it/SwBnCw
Saturday, 16 September 2023
Home »
» மியாமி விமான நிலையம்: பயணிகளின் பணத்தைத் திருடும் அதிகாரிகள் - சிக்கியது எப்படி? | Video







0 comments:
Post a Comment