டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 9 ,10 ஆகிய தேதிகளில் `G20' மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட 25 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காகவே, உலகத் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் மும்முரமாகச் செய்துவருகிறது.ஜில் பைடன்
டெல்லியில் அமைந்திருக்கும் அரசு அலுவலகங்கள், மால்கள், சந்தைகள் உள்ளிட்டவற்றைச் செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை மூடுவதற்கும் மத்திய அரசும், டெல்லி அரசும் முடிவுசெய்திருக்கின்றன. `G20' மாநாட்டுக்காக இரண்டு அரசுகளும் தீவிரமாகத் தயாராகிவரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இந்தியாவில் நடைபெறும் G20 மாநாட்டில் பங்கேற்கவில்லை என அறிவித்தனர். எனினும் அந்நாடுகளின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிரதிநிதிகளாக கலந்து கொள்கிறார்கள். நேற்றுவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார் என உறுதியான தகவல்கள் வெளியானது.
அவரும் வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பில் இந்தியா தலைமையிலான G20 மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு( 72) கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. ஜில் பைடன் ரெஹோபோத் கடற்கரையில் உள்ள அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதிபர் பைடனுக்கும் கோவிட் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தற்போது நெகட்டிவ் என முடிவு வந்திருப்பதாகவும், தொடர்ந்து அவருக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் - ஜில் பைடன்
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் G20 மாநாட்டில் கலந்துகொள்வாரா என்பது தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜில் பைடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYஉலகின் முதல் மனித ரோபோ மாநாடு | ரிஷி சுனக்கைச் சந்தித்த ஜோ பைடன் - உலகச் செய்திகள்
http://dlvr.it/SvdbQl
Monday, 4 September 2023
Home »
» நெருங்கும் டெல்லி G20 மாநாடு: ஜில் பைடனுக்கு கொரோனா! - ஜோ பைடன் கலந்து கொள்வாரா?!







0 comments:
Post a Comment