அமெரிக்காவில் முதுகலை படித்துவந்த இந்தியா மாணவியொருவர், போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்ததை ஒரு போலீஸ் கிண்டலடித்த வீடியோ சமூக வலைதங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு அமெரிக்காவை இந்தியா வலியுறுத்தியிருக்கிறது.ஜாஹ்னவி கந்துலா - டேனியல் ஆடரர் (அமெரிக்க போலீஸ்)
இது குறித்து வெளியான தகவலின்படி, உயிரிழந்த மாணவியின் பெயர் ஜாஹ்னவி கந்துலா (23) என்று தெரியவந்திருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்தவரான இவர், Northeastern பல்கலைக்கழக்தில் முதுகலை படிப்பு படித்துவந்திருக்கிறார். இப்படியிருக்க, கடந்த ஜனவரி மாதம், கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி போதையில் 120 கி.மீ வேகத்தில் ஓட்டிச் சென்ற போலீஸ் வாகனம், ஜாஹ்னவி கந்துலா மீது மோதியது. இதில், மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
இந்த நிலையில், விபத்து நடந்த பிறகு போலீஸாரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த வீடியோவை கடந்த திங்களன்று, சியாட்டில் (Seattle) காவல் துறை ட்விட்டரில் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில், சியாட்டில் போலீஸ் அதிகாரிகள் குழுவின் துணைத் தலைவர் டேனியல் ஆடரர், குழு தலைவரிடம் ``அவர் இறந்துவிட்டார். அவருக்கு ஒரு 26 வயது இருக்கும். 11,000 டாலர் காசோலை எழுதுங்கள். அவருக்கு குறைந்த மதிப்பே இருந்தது'' என்று மாணவியை கேலிசெய்து சிரித்தார்.
Justice for #JaahnaviKandula pic.twitter.com/95zJrH9928— Desidudewithsign (@Nikhilsingh21_) September 13, 2023
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரவே, இணையதளவாசிகள் பலரும், ஜாஹ்னவி கந்துலாவுக்கு நீதி வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் (San Francisco) உள்ள இந்திய துணைத் தூதரகம் தற்போது, மாணவியின் இறப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசை வலியுறுத்தியிருக்கிறது. மேலும், மாணவியின் உறவினர் ஒருவர், ``இந்த மரணம் தொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் கூறுவதற்கு என்ன இருக்கிறது. வாழ்க்கை என்பது வாழ்க்கை தானே" என்று இணையத்தில் பதிவிட்டிருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYஅமெரிக்கா: திருடியதாக குற்றச்சாட்டு; போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட கறுப்பின கர்ப்பிணி- என்ன நடந்தது?
http://dlvr.it/Sw51yl
Thursday, 14 September 2023
Home »
» இந்திய மாணவி கார் ஏற்றி கொலை... கிண்டலடித்த அமெரிக்கா போலீஸ்; விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்தல்!







0 comments:
Post a Comment