Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Thursday, 7 September 2023

G20 Summit: ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் வானிலை அப்டேட்... தங்க முலாம் பூசிய தட்டுகள்! - ஜி20 ஹைலைட்ஸ்

`ஜி20' உச்சி மாநாடு, டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் பிரமாண்ட பாரத் மண்டபத்தில் செப்டம்பா் 9, 10 ஆகிய இரு நாள்கள் நடக்கின்றன. இதற்கு வருகை தரும் 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவர்கள் டெல்லியில் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குகின்றனர். பாதுகாப்பு கருதி அமெரிக்கா, கனடா, சீனா போன்ற நாடுகளின் தலைவர்கள் ஐடிசி, தாஜ் போன்ற நட்சத்திர ஹோட்டலிலுள்ள அறைகள் முழுவதையும் தனியாக எடுத்து தங்குகின்றனர். இந்தாண்டு சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாகக் கொண்டாடப்படும் நிலையில், ஹோட்டல்களில், புதுமையான தினை உணவு வகைகளைக் கொண்டு சர்வதேச தலைவர்களுக்கு உணவுகளைப் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் போன்ற உலகின் முக்கியத் தலைவர்களுக்கு வெள்ளித் தட்டுகள், குவளைகள் போன்ற பாத்திரங்களாலும், தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்களாலும் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய பாரம்பர்யத்தை பறைசாற்றும் விதமாக 15,000 பாத்திரங்களை ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தப் பாத்திரங்களை 200 கலைஞர்கள் வடிவமைத்திருக்கின்றனர். பாரத் மண்டபத்திலும், நட்சத்திர விடுதிகளிலும் முக்கியத் தலைவர்களுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தப் பாத்திரங்களில்தான் உணவு பரிமாறப்படவிருக்கிறது.ஜி-20 மாநாடு இதேபோன்று தஞ்சையைச் சேர்ந்த சகோதரர்கள் உருவாக்கிய 28 அடி உயரமுள்ள நடராஜர் சிலை `ஜி20' மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக ஐம்பொன்னால் சிலைகள் வடிவமைக்கப்படும் நிலையில், ஆயிரம் ஆண்டுகள் அழியாமல் இருப்பதற்காக எட்டு வகையான தாதுக்களால் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, “பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டிருக்கும் பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. `ஜி20' உச்சி மாநாட்டுக்காக உலக நாடுகள் ஒன்றுகூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பர்யங்களுக்கு ஒரு சான்றாக அமையும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.ஜி- 20 மாநாட்டில் வைக்கப்பட்டிருக்கும் நடராஜர் சிலை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் வானிலை ஏதும் இடையூறு ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டால், அதற்கேற்றாற்போல் திட்டமிட 15 நிமிடங்களுக்கு ஒரு முறை வானிலை குறித்தான தகவல்கள் அப்டேட் செய்வதற்கு, மாநாடு நடக்கும் இடத்துக்கு அருகிலேயே இந்திய வானிலை மையம் ஓர் ஆய்வரங்கம் அமைத்திருக்கிறது. மற்ற நாடுகளிலிருந்து வரும் தலைவர்கள் மற்றும் அந்தக் குழுவில் உள்ளவர்கள், ஊடகப் பிரதிநிதிகள், பாதுகாப்பு பணியாளர்களை வழிநடத்த, தொடர்புகொள்ள கிட்டத்தட்ட நாற்பது தூதுக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி ஒவ்வொரு குழுவிலும் 150-200 பேர் இருப்பார்கள். மாநாடு நடக்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 10,000 பேர் பாரத மண்டபத்தில் இந்தக் குழுவில் பணியாற்றவிருக்கின்றனர். ஒவ்வொரு நாட்டின் தலைவர்களை சனிக்கிழமை அன்று (செப் 9) தனித்தனியாக வரவேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவ்வாறு வரவேற்று விழா நடக்கும் அரங்குக்குள் அழைத்துச் செல்லப்பட்டு சரியாக ஒன்பது மணியளவில் மாநாடு தொடங்கவிருக்கிறது. ஜி- 20 மாநாடு உலகத்தரம் வாய்ந்த பாரத மண்டபத்தில் நான்கு நிலைகளில் கட்டடம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் முதல் மட்டத்திலுள்ள மண்டபத்தில் `ஜி20' உச்சி மாநாட்டின் முக்கியக் கூட்டம் நடைபெறுகிறது. அடுத்து பெரும் கொள்ளளவைக்கொண்ட பல்நோக்கு மண்டபத்தில் ஜனாதிபதியால் இரவு விருந்து வழங்கப்படுகிறது. அந்த விருந்து சமயத்தில் இந்தியாவின் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக கலாசார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மற்றொரு மண்டபத்தில், டிஜிட்டல் இந்தியாவின் பெருமைகளை எடுத்துவைக்கும் விதம் ஆதார், யு.பி.ஐ போன்றவற்றில் தொழில்நுட்ப மாற்றம் ஒரு நாட்டில் சமூக-பொருளாதார மாற்றத்தை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை எடுத்துரைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பாதுகாப்பு வளையத்துக்குள் வந்திருக்கும் டெல்லி, `ஜி20' மாநாடு நெருங்க நெருங்க இன்னும் வீரியம் அடைந்துவருகிறது. அந்தவகையில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். விமான நிலையத்தை ஒட்டியிருக்கும் உயரமான கட்டடங்களில் காவலர்கள் நிறுத்தப்படுகின்றனர்.ஜி20 மாநாடு மற்ற நாடுகளிலிருந்து வரும் தலைவர்கள் எந்த ஓர் இடையூறும் இல்லாமல் வந்து செல்வதற்கு விமான நிலையத்தில் பிரத்யேக வாயில்கள், நடைபாதைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புக் காரணங்களுக்காக டெல்லியிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மாநாடு நடைபெறும் நாடாளுமன்றத்தை ஒட்டியிருக்கும் பகுதியில் சிறப்பு விமானங்கள் நிறுத்துவதற்கான இட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/Svm1yl

0 comments:

Post a Comment