அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம், கொலம்பஸில் உள்ள ஒரு மளிகைக் கடையில் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 21 வயதான தாகியா யங் என்ற கருப்பின கர்ப்பிணி, ஒரு காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகளை காவல்துறை வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவில், ஓஹியோவின் வெஸ்டர்வில்லில் உள்ள ஒரு மளிகைக் கடைக்கு வெளியே, ப்ளெண்டன் டவுன்ஷிப் காவல்துறை அதிகாரி, கொலைசெய்யப்பட்ட தாகியா யங்கின் அருகே வந்து காரிலிருந்து இறங்குமாறு கூறுகிறார்.அமெரிக்கா காவல்துறை
உடலில் கேமரா அணிந்திருக்கும் இரண்டாவது அதிகாரி, காருக்கு முன்பு துப்பாக்கியுடன் நெருங்கி வந்து, "நீங்கள் கடையிலிருந்து திருடிவிட்டீர்கள், எனவே, காரிலிருந்து இறங்குங்கள்" என்று கூறுகிறார். ஆனால், தாகியா யங், ``நான் எதையும் திருடவில்லை" என்று காரிலிருந்தவாறே வாதிடுகிறார். இரண்டு காவல்துறை அதிகாரிகளும், ``மது பாட்டில்களை ஒரு பெண் திருடிவிட்டதாகவும், கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் அவை இருப்பதாகவும் மளிகைக் கடை ஊழியர் புகார் அளித்திருக்கிறார்" என்கிறனர்.
இந்த விவாதத்தின் இறுதியில், தாகியா யங், காவல்துறை அதிகாரிகளிடம், ``இப்போது நீங்கள் என்னைச் சுடப் போகிறீர்களா?" எனக் கேட்டு காரை இயக்க முயன்றார். காரிலிருந்து இறங்கும்படி கூறிக்கொண்டே இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், காருக்கு முன்னால் கண்ணாடியின் வழியாகச் சுடுகிறார். அப்போது அந்த கார் மளிகைக் கடையின் சுவரில் மோதி நின்றது. காவல்துறை அதிகாரிகள் காரின் ஜன்னலை உடைத்து, தாகியா யங்கை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.துப்பாக்கிச்சூடு
அங்கு அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், தாகியா யங்கின் பெற்றோர் அவர்மீது சுமத்தப்பட்ட திருட்டு குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்கள். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, ``தாகியா யங் எந்தத் திருட்டுச் செயலிலும் ஈடுபடவில்லை. திருடாத ஒருவரைக் காவலில் வைப்பதற்கும், அவன் உயிரைப் பறிப்பதற்கும் இந்த அதிகாரிகளுக்கு உரிமை கிடையாது. கர்ப்பிணியான அவளை, அவர் குழந்தையுடன் பறிகொடுத்துவிட்டோம்" எனத் தெரிவித்தனர். பிளெண்டன் டவுன்ஷிப் காவல்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாக துணைத் தலைவர் பிரையன், ``உண்மைகள் வெளிவரும் முன்பே துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது.
துப்பாக்கிச்சூடு நியாயமானதா என்பதை விசாரணை தீர்மானிக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார். தேசிய பயன்பாட்டு நிபுணரும் வழக்கறிஞருமான எட்வர்ட் ஒபயாஷி, "இந்தச் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அதிகாரி நகரும் வாகனத்துக்கு முன்னால் நின்றிருந்ததால் கார் மோதிவிடும் என அச்சத்தின் காரணமாக, இப்படிச் செய்திருக்கலாம். ஆனால், அவரின் இத்தகைய நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த நபர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கறுப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பது வேதனையளிக்கிறது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYநடுரோட்டில் 2 குழந்தைகளைத் தவிக்கவிட்டுச் சென்ற பெண்; சிசிடிவி பதிவுகளைக் கொண்டு தேடும் காவல்துறை!
http://dlvr.it/SvYZkl
Sunday, 3 September 2023
Home »
» அமெரிக்கா: திருடியதாக குற்றச்சாட்டு; போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட கறுப்பின கர்பிணி! - என்ன நடந்தது?







0 comments:
Post a Comment