வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், இந்த மாதம் ரஷ்யாவுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆயுதப் பரிவர்த்தனை தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக முன்னெடுப்பதற்காக வட கொரிய அதிபர், இந்த மாதம் ரஷ்யாவுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறார் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரின் வாட்சன் (Adrienne Watson) தெரிவித்திருக்கிறார். ரஷ்ய அதிபர் - சீன அதிபர்
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷ்யாவுக்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தச் சந்திப்பில் ஆயுதப் பேச்சுவார்த்தைக் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது. எப்போது, எந்த இடத்தில் சந்திப்பார்கள் எனத் தெரியவில்லை. கடந்த ஜூலை மாதம் ரஷ்ய அதிகாரிகள் வட கொரியா சென்றுவந்த பிறகே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் தென் கொரியா, வட கொரியாவிடம், `ரஷ்யாவுடன் ஆயுதப் பேச்சுவவார்த்தை நடத்தக் கூடாது' என வலியுறுத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை, பீரங்கி உட்பட பல்வேறு ஆயுதங்களுக்கு குறிப்பிடத்தக்க வெடிமருந்துகளை வழங்கி, தடுமாறிக்கொண்டிருக்கும் உக்ரைன் மீது படையெடுக்க வழிவகுக்கும் என்பதற்கான அறிகுறி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல்யூன்
இதற்கிடையில், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தென்கிழக்கு ஆசியாவின் ஆசியன் உச்சி மாநாட்டில் பேசிய தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல்யூன், ``வட கொரியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் ஆயுதப் பரிவர்த்தைக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சர்வதேச அமைதிக்கு கேடு விளைவிக்கும் வட கொரியாவுடன் ராணுவ ஒத்துழைப்புக்கான முயற்சிகள் அனைத்தையும், ஆசிய நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும்" எனக் கோரிக்கை முன்வைத்தார்.
இந்த நிலையில், ``வட கொரியாவும் ரஷ்யாவும் எந்த ஆயுதப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை'' என்று இரு நாடுகளும் மறுத்திருக்கின்றன.வடகொரியா தலைநகரில் வெடிகுண்டு விபத்து... கிம் ஜாங் உன்னுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு - என்ன நடந்தது?
http://dlvr.it/SvpgfK
Friday, 8 September 2023
Home »
» வட கொரிய அதிபர் ரஷ்யாவுக்குச் செல்ல திட்டம்? - `ஆயுதப் பேச்சுவார்த்தை தீவிரம்' - அமெரிக்கா தகவல்!






0 comments:
Post a Comment