ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சமீபத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டது உலகளவில் கவனம் பெற்றது. அவர்களின் சந்திப்பின்போது, அமெரிக்கா குறித்து இரு நாடுகளுக்கும் இருக்கும் தனித்தனி மோதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக, ரஷ்யா - வடகொரியா நாடுகளின்மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் தளர்வு மற்றும் ஆயுத வளர்ச்சிக்கு இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுதல் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.கிம் ஜாங் உன்
வட கொரிய அதிபர், ``மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக ஒரு புனிதமான போராட்டத்தை ரஷ்யா நடத்திவருகிறது. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இனி ஒன்றாகப் போராடுவோம். புதின் மற்றும் ரஷ்ய தலைமையின் முடிவுகளை நாங்கள் எப்போதும் ஆதரிப்போம்" எனத் தெரிவித்திருந்ததும் பெரும் பேசுபொருளானது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வடகொரியாவுக்கு வருமாறு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்து வடகொரிய அரசின் KCNA செய்தி நிறுவனம், ``ரஷ்ய அதிபர் புதினிடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு புதினை அழைத்திருக்கிறார். ரஷ்ய அதிபரும் இந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.புதின்
ரஷ்யா- வடகொரியாவுக்கு இடையேயான நட்பின் வரலாறு மற்றும் பாரம்பர்யத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களின் விருப்பத்தை இரு நாடுகளின் தலைவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறது. இரண்டு நாடுகளின் நெருக்கம் அவர்களை எதிர்க்கும் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறிவருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYகைது வாரன்ட்டுக்குப் பிறகு ரஷ்ய எல்லையைத் தாண்டாத புதின்... சீனாவுக்குச் செல்ல ஒப்புக்கொண்டது ஏன்?!
http://dlvr.it/Sw5wtC
Thursday, 14 September 2023
Home »
» `எங்கள் நாட்டுக்கு நீங்கள் வருகை தர வேண்டும்!' - புதினை வடகொரியாவுக்கு அழைத்த கிம் ஜாங் உன்







0 comments:
Post a Comment