Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, 31 August 2023

`G20' உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கும் சீன அதிபர்? - வெளியான தகவலும், பின்னணியும்!

டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 9 ,10 ஆகிய தேதிகளில் `G20' மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் 25 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், டெல்லி அரசும், மத்திய அரசும் தீவிரமாகத் தயாராகிவருகின்றன. இதற்கிடையில், `G20' உச்சி மாநாட்டில், ரஷ்ய அதிபர் புதின் கலந்துகொள்ள மாட்டார் என்றும், அக்டோபர் மாதம் சீனாவில் நடைபெறவிருக்கும் `One Belt One Road forum' என்ற மாநாட்டில் பங்கேற்க அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் தகவல் வெளியானது.ஜோ பைடன் - ஜி ஜின்பிங் இந்த நிலையில். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் `G20' மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் சீனாவின் நிலையான வரைபடத்தின் 2023 பதிப்பை சீன அமைச்சகம் வெளியிட்டது. அதில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதி முழுவதும் சீனாவின் எல்லைக்குள் இருப்பதாக அந்த வரைபடமானது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் இரண்டு நாடுகளுக்கு மத்தியில் விவாதத்தைத் தொடங்கியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு, `அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால், இத்தகைய முயற்சிகள் உண்மையை மாற்றாது. வரைபடத்தின் மூலம் ஆக்கிரமிப்பைக் காட்டும் மனப்பான்மையை 1949-ம் ஆண்டு முதல் சீன அரசு முன்னெடுத்து வருகிறது. அதில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமானதாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.ஜி ஜின்பிங் எனவே, சீனாவின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம்' எனத் தெரிவித்தது. இந்த நிலையில்தான் `G20' மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு பதிலாக சீன தூதர் ஒருவரும், `G20' நாடுகளின் சீன அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவரும் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYவரைபடத்தின் மூலம் அருணாச்சலப் பிரதேசத்தை வளைக்கும் சீனா! - இந்தியாவின் ரியாக்‌ஷனும் பின்னணியும்!
http://dlvr.it/SvR8L2

நகைக்கடை உரிமையாளர் கண்ணில் பெப்பர் ஸ்ப்ரே... 5,00,000 டாலர் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கும்பல்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், பசடேனாவில் 'ஜூவல்ஸ் ஆன் லேக்' என்ற நடைக்கடை இருக்கிறது. இதன் உரிமையாளர் பெயர் சாம் பாபிகியன். மூன்று முகமூடி கொள்ளையர்கள் தன்னுடைய கடைக்குள் புகுந்து தன்னை தாக்கிவிட்டு, நகைகளையும் கொள்ளையடுத்துவிட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார் சாம் பாபிகியன் (Sam Babikian). இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நகைக் கடையின் உரிமையாளர் சாம் பாபிகியன் இந்த சம்பவம் குறித்து, ``செவ்வாய்கிழமை மதியம் 1:45 மணியளவில் கையுறை அணிந்த மூன்று முகமூடி கொள்ளையர்கள் என்னுடைய கடைக்குள் நுழைந்து என்னை தாக்கிவிட்டு, என் கண், தொண்டை, வாய் ஆகிய பகுதிகளில் பெப்பர் ஸ்ப்ரேவை தெளித்தனர். அடுத்து என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. எப்படியோ தட்டுத் தடுமாறி நான் போலீஸாருக்கு தகவல் கொடுத்துவிட்டேன். இந்த சம்பவத்தில் கொள்ளையர்கள் கடையை உடைத்து சுமார் மூன்று நிமிடங்களில், அரை மில்லியன் டாலர் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றனர்.  அவர்கள் கையில் சுத்தியல் வைத்திருந்தனர். அளவுக்கு அதிகமானப் பொருள்களை திருடிச் சென்றுவிட்டனர். பெரும்பாலான ஷோகேஸ்கள் காலியாக உள்ளன. இந்தச் சம்பவம் எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் என்னைத் துன்புறுத்தவில்லை, என்னிடம் சண்டையிடவில்லை. எனக்கு எதுவும் நடக்காததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார். நகைக்கடையின் உரிமையாளர் மீது பெப்பர் ஸ்ப்ரே தெளித்துவிட்டு, சுமார் 5,00,000 டாலர் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நகைக்கடை உரிமையாளருக்கு மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYஅமெரிக்கா: தலையில் துப்பாக்கியால் சுட்ட 9 வயது சிறுவன்... பரிதாபமாக பலியான 6 வயது சிறுவன்!
http://dlvr.it/SvQMPB

Wednesday, 30 August 2023

காதலிக்கு 10 நிமிட `லாங் கிஸ்'... செவிப்பறை சேதமடைந்த இளைஞர்... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

தன்னுடைய காதலிக்கு 10 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்தவருக்கு செவிப்பறை சேதமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதலர் தினம்ரக்ஷா பந்தன்: ஓட முடியாது ஒளிய முடியாது, மெஹந்தியில் QR Code: அண்ணன்களுக்கு செக் வைக்கும் தங்கைகள்! சீனாவின் காதலர் தினம் ஆகஸ்ட் 22 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மேற்கு ஏரிக்கு அருகில் ஓர் ஆணும் அவரின் காதலியும் உணர்ச்சிவசப்பட்டு அரவணைத்துக்கொண்டனர். 10 நிமிடங்கள்வரை முத்தமிட்டுக் கொண்டனர்.  அதன் பின்னர் இடது காதில் அந்நபருக்கு வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் சென்று, காதில் சத்தம் (bubbling sound) கேட்பதாகவும், சரியாகக் கேட்கவில்லை எனவும் கூறியிருக்கிறார். மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், அவரது செவிப்பறை சேதமடைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதோடு குணமடைய இரண்டு மாதங்கள் வரை ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.காது பிரச்னை!காது கேளாதோரின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள யாரும் இங்கு இல்லை! இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ``உணர்ச்சிவசப்பட்ட நெருக்கம் மற்றும் முத்தம் (smooching) காதுக்குள் விரைவான காற்றழுத்தத்திற்கு வழிவகுக்கும். இது பார்ட்னரின் அழுத்தமான சுவாசத்துடன் சேரும்போது, சமநிலையையில் இருந்து விலகி சேதத்தை விளைவிக்கும்’’ என்று தெரிவித்துள்ளனர்.  காதலிக்கு 10 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்தவருக்குச் செவிப்பறை சேதமடைந்து, காது கேட்கும் திறன் குறைந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
http://dlvr.it/SvNMqT

Tuesday, 29 August 2023

கைது வாரன்ட்-க்குப் பின் ரஷ்யா எல்லையை தாண்டாத புதின்... சீனாவுக்கு செல்ல ஒப்புக்கொண்டது ஏன்?!

உக்ரைன் - ரஷ்யாவுக்கிடையே போர் தொடங்கியது முதல், உலக நாடுகள் பலவும் ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. மேலும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், உக்ரைனிலிருந்து சட்டவிரோதமாகக் குழந்தைகளை நாடு கடத்திய குற்றத்துக்காகவும் ரஷ்ய அதிபர் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் International Criminal Court (ICC) கைது வாரன்ட் பிறப்பித்தது. இந்த நிலையில், இது குறித்து ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான், ``ரஷ்ய அதிபர் புதின் 123-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளில் காலடி எடுத்துவைத்தால் கைதுசெய்யப்படுவார்'' எனத் தெரிவித்தார்.பிரிக்ஸ் மாநாடு ஆனால், ஐசிசி-யில் உறுப்பினராக இல்லை என்பதால், புதினைக் கைதுசெய்ய முடியாது எனத் ரஷ்யா தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின், பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டுக்காகத் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்வார் அப்போது அவரை கைது செய்ய வேண்டும் எனத் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கூட்டணி, நீதிமன்றத்துக்குச் சென்றது. ஆனால், தென்னாப்பிரிக்க அதிபர் சீரில் ரமபோசா (Cyril Ramaphosa), ``புதினைக் கைதுசெய்வது போன்ற நடவடிக்கை தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்தானது. இதில் தென்னாப்பிரிக்காவுக்கு வெளிப்படையான சிக்கல்கள் இருக்கின்றன. ரஷ்ய அதிபர் புதின் தென்னாப்பிரிக்காவில் கைதுசெய்யப்பட்டால், அது ரஷ்யாவுடனான போர் பிரகடனமாகக் கருதப்படும். ரஷ்யாவுடன் போரில் ஈடுபடுவது நமது அரசியலமைப்புக்கு முரணானது" என பதிலளித்திருந்தார். இந்த நிலையில், ஐசிசி-யின் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதிலிருந்து உக்ரைன் - ரஷ்யா எல்லையை புதின் தாண்டவில்லை எனக் கூறப்படுகிறது. பிப்ரவரி 2022-ல் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, புதின் அண்டை நாடுகளான முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுக்கும்,இரானுக்கும் மட்டுமே பயணம் செய்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. புதின் - ஜி ஜின்பிங் இதன் காரணமாகவே, பிரிக்ஸ் மாநாட்டிலும் ரஷ்ய அதிபர் புதின் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக, ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்றார். அதேபோல, ஐசிசி ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடவில்லை என்றாலும், செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறவிருக்கும் G20 உச்சி மாநாட்டிலும் புதின் கலந்துகொள்ளமாட்டார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில்தான், அக்டோபர் மாதம் சீனாவில் நடைபெறவிருக்கும் One Belt One Road forum என்ற மாநாட்டில் புதின் பங்கேற்க ஒப்புக்கொண்டிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகு, அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது எனக் கூறப்படுகிறது. மேலும், புதின் தனது பாதுகாப்பிற்கு முற்றிலும் உத்தரவாதம் அளிக்கும் நாடுகளுக்கு மட்டுமே செல்ல தயாராக இருப்பதாகவும், அந்த இடங்களில் சீனாவும் ஒன்று என்று கூறப்படுகிறது. புதின் இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் சீனாவுக்கு பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY``எங்களிடமும் போதிய அளவுக்கு கிளஸ்டர் வெடிகுண்டுகள் இருக்கின்றன..!" - உக்ரைனை எச்சரிக்கும் புதின்
http://dlvr.it/SvMc4n

அருணாச்சலப்பிரதேசத்தை இணைத்து புதிய வரைப்படம் வெளியிட்ட சீனா... சிவசேனா எம்.பி காட்டமான கேள்வி!

இந்திய - சீன எல்லைப்பகுதியில் இருக்கும் மாநிலம் அருணாச்சலப் பிரதேசம். இந்தியாவின் ஒருங்கிணைத்த மாநிலமாக இருந்தாலும் கூட, சீனாவின் அத்துமீறல் நடவடிக்கையால் பதற்றமான சூழலில் இருக்கும் மாநிலம் அது. இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்கு `தெற்கு திபெத்' எனப் பெயர் மாற்றம் செய்தது சீனா. சீனாவின் இந்த அறிவிப்புக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்தன. அப்போது பா.ஜ.க அரசு, அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவுடனே இருக்கும் என்ற வார்த்தையை மட்டுமே திரும்பத் திரும்பக் கூறியது.அருணாச்சல பிரதேசம் இந்த நிலையில், சீனாவின் இயற்கை வள அமைச்சகம், நேற்று, சீனாவின் நிலையான வரைபடத்தின் 2023 பதிப்பை வெளியிட்டது. அதில், அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதி முழுவதும் சீனாவின் எல்லைக்குள் இருப்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சீனாவிடமிருந்து பிரிந்து தனி நாடாக இருக்கும் தைவானையும், தென்சீனக் கடலின் பெரும்பகுதியான, சர்ச்சைக்குரிய Nine Dash line எல்லைக் கோடையும் சீனா சொந்தம் கொண்டாடியிருப்பது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால் இத்தகைய முயற்சிகள் உண்மையை மாற்றாது என இந்தியா கருத்து தெரிவித்திருக்கிறது. வரைபடத்தின் மூலம் ஆக்கிரமிப்பைக் காட்டும் மனப்பான்மையை 1949-ம் ஆண்டு முதல் சீன அரசு முன்னெடுத்து வருகிறது. அதில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப்பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவுக்குச் சொந்தமானதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, சினாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.மோடி - ஜி ஜின்பிங் இந்த நிலையில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், ``சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த மத்திய பா.ஜ.க அரசின் பிரதமர் மோடிக்குத் தைரியம் இருக்கிறதா? இந்த விவகாரத்தைப் பிரதமர் மோடி கவனிக்க வேண்டும். சமீபத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா,தென்னாப்பிரிக்கா நாடுகளின் (பிரிக்ஸ்) உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது பிரதமர் மோடி சீன அதிகாரிகளை கை குலுக்கிக் கட்டிப்பிடித்தார். இந்த நிலையில்தான் சீனாவிடமிருந்து இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நமது நாட்டுக்குள் சீனா நுழைந்துவிட்டது எனக் கூறியது சரிதான். மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புல்வாமா தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குறிப்பிட்டது போல, இந்த தேர்தலிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற பெயரில் போலியான நாடகத்தை அரங்கேற்றி எத்தனை உயிர்கள் பறிபோகுமோ என மக்கள் அச்சத்தி இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலுக்கு முன்னதாக கலவரம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ராமர் கோவில் திறப்பு விழாவின் போது, ராமர் பக்தர்கள் ரயில் மீது கற்களோ, வெடிகுண்டுகளோ வீசப்படலாம். சஞ்சய் ராவத் நாடு முழுவதும் கலவரம் தூண்டப்படலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஆழமாக இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அச்சம் முக்கிய அரசியல் கட்சிகளின் மனதிலும் இருக்கிறது. எல்லாவற்றையும் மக்கள் முன்னிலையில் வைப்பது எங்கள் வேலை. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஹரியானாவில் நடந்த அல்லது நடத்தப்பட்ட கலவரம் இதற்கு ஒரு உதாரணம்,” எனத் தெரிவித்தார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY`சிவசேனா எம்.பி-க்கு பாகிஸ்தானில் சொத்து': உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி கோர்டில் ஆஜராக சம்மன்
http://dlvr.it/SvKmXV

Monday, 28 August 2023

அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் பரபரபூட்டும் இந்திய வம்சாவளி - யார் இந்த விவேக் ராமசாமி?!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்காக ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியிருக்கும் நிலையில், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உட்பட பலரும் போட்டியிட முடிவுசெய்திருக்கின்றனர். அதேசமயம், ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் போட்டியில் ட்ரம்ப்புடன் அவரது கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி உட்பட பலரும் களமிறங்கியிருக்கின்றனர். அவர்கள் குடியரசுக் கட்சியினரிடம் ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விவேக் ராமசாமி இதற்கிடையே குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருப்பவர்களுக்கு இடையிலான விவாத நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள மில்வாக்கி பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர் ட்ரம்ப் பங்கேற்காத நிலையில், எட்டு வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் விவேக் ராமசாமியின் சிந்தனைகளும், செயல் திட்டங்களும் பலரைக் கவர்ந்தன. முதல் விவாதத்திலேயே, சிறப்பாகப் பேசப்பட்ட வேட்பாளர்களில் ஒருவராக அவர் பிரகாசித்திருப்பதாகக் கூறப்படுகிறது. விவாதத்துக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் அவருக்கான ஆதரவு பெருகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சக போட்டியாளர்களின் கேள்விகளுக்கும் தாக்குதல்களுக்கும் சமயோசிதமாக பதிலளித்ததன் வாயிலாக, தன் திறமையை விவேக் நிரூபித்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. பிரபல இணையதளப் பக்கமான கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் அவர் இருந்தார். விவாத நிகழ்ச்சி முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் மட்டும் இந்திய மதிப்பில் அவருக்கு ஆதரவாக நான்கு கோடி ரூபாய் நன்கொடையாகக் கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விவேக் ராமசாமியிடம், `ட்ரம்ப்புடன் துணை ஜனாதிபதியாக இருப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சியா?’ என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, ``இது என்னைப் பற்றியது அல்ல. இது நமது நாட்டைப் புதுப்பித்தல் பற்றியது. நமது இயக்கத்தின் தலைவராகவும், முகமாகவும் வெள்ளை மாளிகையிலிருந்து இதைச் செய்தால் மட்டுமே இந்த நாட்டை மீண்டும் ஒன்றிணைக்க முடியும். என் வயதில் ஒருவருக்கு இது (துணை ஜனாதிபதி பதவி) ஒரு சிறந்த நிலை. நிச்சயமாக நான் அதை ஏற்பேன்” எனக் கூறியிருக்கிறார். அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துவரும் விவேக் ராமசாமி குறித்து சில மாதங்களுக்கு முன்பு பாராட்டிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், “விவேக் ராமசாமி எனக்குப் பிடித்தமானவர். அவரைப் பற்றிச் சொல்ல நல்ல விஷயங்களே இருக்கின்றன. சமீபத்திய அதிபர் வேட்பாளர் தேர்தலில் அவர் சிறப்பாகச் செயல்பட்டார். என்னைப் பற்றியும், என் நிர்வாகம் குறித்தும் அவர் நல்ல விஷயங்களை மட்டும் சொல்லக்கூடியவர். அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அதனால்தான் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார்” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiYஎலான் மாஸ்க் சமீபத்தில் விவேக் ராமசாமியுடனான நேர்காணல் ஒன்றை, அமெரிக்க ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன், எக்ஸ் தளத்தில் பதிவிட்டதையடுத்து, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், விவேக் ராமசாமியை ‘மிக நம்பிக்கைக்குரிய வேட்பாளர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகக் கட்சியைக் கடுமையாக விமர்சித்தும், குடியரசுக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தும் வரும் எலான் மஸ்க், விவேக் ராமசாமியைப் புகழ்ந்துவருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதற்கிடையே, எலான் மஸ்க்கை ஆலோசகராக நியமிக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கும் விவேக் ராமசாமி, "ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் போன்ற புதிய நபர்களை அரசு நிர்வாகத்துக்கு வழிகாட்டக் கொண்டுவர விரும்புகிறேன். சமீபகாலமாக, எலான் மஸ்க்கைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதில் மகிழ்கிறேன். ட்விட்டரிலுள்ள 75 சதவிகித ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததால், அவர் என்னுடைய சுவாரஸ்யமான ஆலோசகராக இருப்பார் என்று எதிர்பார்க்கிறேன். ட்விட்டரில் அவர் செய்த செயல், நிர்வாகரீதியாக அரசில் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்" என்று தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை, முதலில் இரண்டு கட்சிகளும் அதிபர் வேட்பாளருக்குத் தனித்தனியே தேர்தல் நடத்தும். இதில் வெற்றிபெறும் நபர்களே அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகாரபூர்வ வேட்பாளராக முன்னிறுத்தப்படுவர். அந்த வகையில் இப்போது ட்ரம்ப்புக்கு நிகராக முன்னிறுத்தப்படும் விவேக் ராமசாமியின் பின்னணி என்ன?விவேக் ராமசாமியின் பெற்றோர் அடிப்படையில் ஓர் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு அருகிலுள்ள வடக்கஞ்சேரியைப் பூர்வீகமாகக்கொண்டவர்கள். கேரளாவில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்த விவேக்கின் தந்தை வி.ஜி.ராமசாமி, பணி நிமித்தமாக அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். அங்கு ஓஹியோ (Ohio) மாகாணத்திலுள்ள General Electric Plant-ல் மின் பொறியாளராகப் பணிபுரிந்தார். அதேபோல, விவேக்கின் தாயாரான கீதாவும் அமெரிக்காவில் முதியோர் மனநல மருத்துவராகப் பணியாற்றினார். பெற்றோர் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்திருந்ததால், விவேக் பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவின் ஓஹியோ மாகணத்திலுள்ள சின்சினாட்டி (Cincinnati) பகுதியில்தான். பள்ளிப் படிப்பை சின்சினாட்டியிலுள்ள செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் 2003-ம் ஆண்டு முடித்தார். அதன் பிறகு, இளங்கலை பயோலஜி பட்டப்படிப்பை பிரசித்திபெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் (Harvard University) படித்தார். தனது கல்லூரிக் காலங்களில் படிப்பில் மட்டுமல்லாமல் மியூசிக், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஆர்வம் மிக்கவராக வலம் வந்தார் விவேக் ராமசாமி. இதையடுத்து, 2007-ம் ஆண்டு இளம் தொழில்முனைவோருடன் இணைந்து கேம்பஸ் வென்ச்சர் நெட்வொர்க் (Campus Venture Network) நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, 2010-2013 ஆகிய காலகட்டங்களில், யேல் சட்டப் பள்ளியில் (Yale Law School) சட்டப் படிப்பையும் படித்து முடித்தார். சட்டப் படிப்புக்குப் பிறகு டேவிஸ் போல்க், வார்டுவெல் என்ற சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர், 2014-ம் ஆண்டு `Roivant Sciences' என்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் மருந்து வளர்ச்சியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். 2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக நிதியைத் திரட்டியிருக்கும் இந்த நிறுவனத்தின்கீழ் பல துணை நிறுவனங்கள் செயல்படுகின்றன. குடும்பத்துடன் விவேக் ராமசாமி 2015-ம் ஆண்டு விவேக் ராமசாமியின் மருந்து மேம்பாட்டுப் பங்களிப்பு பற்றி புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழ் அட்டைப்படத்துடன் கட்டுரை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு `Chapter Medicare' என்ற இணை மருத்துவ நிறுவனத்தையும் தொடங்கினார். அமெரிக்காவின் மிகப்பெரிய பயோடெக் தொழிலதிபர் எனும் நிலைக்கு உயர்ந்தார். 2021-ம் ஆண்டுவரை Roivant Sciences நிறுவனத்தின் தலைமை நிர்வாக (CEO) அதிகாரியாகப் பணியாற்றியவர், தனது பதவியிலிருந்து விலகினார். தற்போது Strive Asset Management நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், நிர்வாகத் தலைவராகவும் பணியில் இருக்கிறார். அமெரிக்க மருத்துவத்துறைகளில் முன்னணித் தொழிலதிபராக வலம் வரும் விவேக் ராமசாமியின் மொத்தச் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 4,140 கோடி ரூபாய்க்கும் அதிகம். தொழிலதிபராக இருந்தபடியே Woke, Nation of victims ஆகிய இரண்டு நூல்களையும் எழுதியிருக்கிறார் விவேக் ராமசாமி.அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் மற்றொரு இந்திய வம்சாவளி... யார் இந்த விவேக் ராமசாமி? ‘பழைமைவாதி...’ என்று தன்னைத் தானே விவரிக்கும் விவேக் ராமசாமிக்கு, 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அரசியல் மீதான ஆர்வம் தொற்றிக்கொண்டது. குறிப்பாக, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக நின்ற டொனால்டு ட்ரம்ப்பின் வெற்றி, விவேக் ராமசாமிக்கு அரசியல் உத்வேகத்தை அளித்தது. மேலும், அமெரிக்க தேசியவாதத்தின் மீது தீவிர நம்பிக்கையையும் விவேக்கின் மனதில் விதைத்தது. அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராகக் களம் இறங்கும் விவேக் ராமசாமி இந்த ஆட்டத்தில் ஆடும் ஆட்டம் எப்படி அமையப்போகிறது என அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவும் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY
http://dlvr.it/SvHBZy

வடகொரியா தலைநகரில் வெடிகுண்டு விபத்து... கிம் ஜாங் உன்னுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு - என்ன நடந்தது?

வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங் (Pyongyang)-ல் வெடிகுண்டு விபத்து நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் (Kim Jong un)னுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியாகவே கருதப்படுகிறது. வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாக உலக நாடுகள் கிம் ஜாங் உன்னைச் சாடி வருகின்றனர். இந்த நிலையில் பியோங்யாங்கில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்திருப்பதாக வடகொரிய நாளிதழ் `The Dong-a Ilbo' செய்தி வெளியிட்டிருக்கிறது. பியோங்யாங்கில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு, கிம் ஜாங் உன்னுக்கான பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருக்கிறது. கிம் ஜாங் உன் மேலும், அவர் தன்னுடைய பாதுகாப்பு குறித்து கவலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக ஆராய்ச்சி செய்ய பிரத்யேக வெடிபொருள் கண்டறியும் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன.  மேலும், அவரின் பாதுகாப்புக் குழுவில் பிரீஃப்கேஸ் பயன்படுத்தும் காவலர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன. வடகொரிய முன்னணி நிபுணரான மைக்கேல் மேடன் (Michael Madden), ``கிம் ஜாங் உன்னைச் சுற்றிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது பாலிஸ்டிக் பெட்டிகள் (ballistic briefcases). கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்ட இவை, குண்டு துளைக்காத தன்மைக்காகப் பெரியளவில் பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் மின்னணு அடிப்படையிலான ஆயுதங்களிலிருந்தும் பாதுகாக்கின்றன. சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் நடப்பதாகக் காவல்துறையினர் கருதினாலோ, துப்பாக்கிச்சூடு நடந்தாலோ இந்தப் பெட்டிகளைக் கையில் வைத்திருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கிம் ஜாங் உன்னைச் சூழ்ந்து பாலிஸ்டிக் பைகளை விரிப்பார்கள். அவர் பாதுகாப்பாக காரில் ஏறும்வரை ஒரு கவசம் போலச் செயல்படுவார்கள். கிம் ஜாங் உன்னுடைய தந்தையான கிம் ஜாங் இல் (Kim Jong-il) பின்பற்றிய பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை, இப்போது கிம் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலிருந்து பெறப்பட்ட ஒன்றுதான் பாலிஸ்டிக் பைகள். அவரின் தந்தை, அவசரக்கால மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.வட கொரியா வல்லுநர்கள் இரண்டு நிகழ்ச்சிகளில் இந்தப் பாதுகாப்பு பெட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர். அதாவது, வடகொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிடும்போதும், ஒரு ரிப்பன் வெட்டும் நிகழ்விலும் இந்தச் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வடகொரிய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பில் இந்த ஆண்டு கிம் ஜாங் உன்னின் பொதுமக்கள் சந்திப்பு பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த குண்டு வெடிப்பில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால், அந்த நாட்டின் செய்தித்தாளான The Dong-a Ilbo-ல் வெளியான கட்டுரை ஒன்றில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நாட்டில் நிலவும் மோசமான உணவுப் பஞ்சம் மற்றும் பட்டினியால் ஏற்பட்ட கோபத்தால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அந்தச் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY">
https://bit.ly/3PaAEiY
http://dlvr.it/SvGn4x

Sunday, 27 August 2023

நிலவுக்கு அனுப்பப்பட இருந்த ஸ்லிம் விண்கலத்தை நிறுத்தி வைத்தது ஜப்பான்!

டோக்கியோ: இந்தியாவை அடுத்து நிலவில் தரையிறக்க முயற்சிக்கும் நோக்கில் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் திங்கள்கிழமை காலை ஏவப்பட இருந்தது, இருப்பினும், மோசமான வானிலை காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.  எதிர்கால ஆய்வுக்கு உதவும் வகையில் நிலவில் ஆய்வு செய்வதற்கான ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் உருவாக்கியது. இந்த விண்கலம் நிலவில் பாறைகளை ஆராய்வது மற்றும் விண்கலத்தை துல்லியமாக தரையிறங்கும் நடைமுறைகளைக் காண்பிப்பதற்காக 200 கிலோ எடை கொண்ட விண்கலத்தில் பிளாஸ்டிக் சோலார் பேனல், மிக நுண்ணிய கேமராக்கள், நேனோ டெக்னாலஜியால் சுருக்கப்பட்ட மின்னணு பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இந்த ஆய்வு வெற்றியடைந்தால் நிலவில் ஆய்வு விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய உலகின் ஐந்தாவது நாடாக ஜப்பான் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 9:26 மணியளவில், ஜப்பானின் தென்மேற்கில் உள்ள ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஸ்லிம் விண்கலம் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது, இருப்பினும், மோசமான வானிலை காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியதால், இந்தியா ஒரு மாபெரும் வெற்றியைக் கண்டது, இது வரலாற்று சாதனையை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியாவுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா உருவானது. 

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/Kmr7ufp https://ift.tt/NEcDPZM
via IFTTT

மேட்டூர் அணை நீர்மட்டம் 52.78 அடி!

  மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 53.70 அடியிலிருந்து 52.78 அடியாக சரிந்தது. அணைக்குவரும் நீரின் அளவு வினாடிக்கு 3,423 கன அடியிலிருந்து 1,024 கன அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதையும் படிக்க | இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  அணையின் நீர் இருப்பு 19.60 டி.எம்.சி.யாக உள்ளது.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/Kmr7ufp https://ift.tt/NgpqiTu
via IFTTT

4x400m: அமெரிக்காவுக்கு டஃப் கொடுத்த இந்தியா... ஆசிய ரெக்கார்ட்டை முறியடிப்பு!

ஹங்கேரி தலைநகரமான புடாபெஸ்ட் நகரில் நடந்துவரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆசிய சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஹீட் சுற்றில் ஓடிய அமோஜ் ஜேக்கப், முகம்மது அனாஸ், முகம்மது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் அடங்கிய நால்வர் அணி 2:59.05 என்ற நேரத்தில் பந்தயத்தை முடித்து ஜப்பான் அணி வசமிருந்த ஆசிய ரெக்கார்டை(2.59.51) முறியடித்திருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஓரிகன் நகரில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்த சாதனையை படைத்திருந்தது ஜப்பான். இத்துடன் அமோஜ் ஜேக்கப், முகம்மது அனாஸ், நோவா நிர்மல் டாம், ஆரோக்கிய ராஜிவ் டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்திருந்த 3:00.25 என்ற தேசிய சாதனையையும் முறியடித்திருக்கிறது இந்த அணி. Incredible teamwork at the World Athletics Championships! Anas, Amoj, Rajesh Ramesh and Muhammed Ajmal sprinted into the finals, setting a new Asian Record in the M 4X400m Relay. This will be remembered as a triumphant comeback, truly historical for Indian athletics. pic.twitter.com/5pRkmOoIkM— Narendra Modi (@narendramodi) August 27, 2023 இறுதிசுற்றுக்குத் தகுதிபெற்றிருக்கும் இந்தியா மொத்தமாக ஹீட் சுற்று முடிவில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. தடகள போட்டிகளில் பதக்கங்களைக்  குவிக்கும் ஜமைக்கா, கென்யா போன்ற நாடுகளையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது இந்தியா. Yo-Yo Test ஸ்கோரை பகிரங்கமாக வெளியிட்ட கோலி; கண்டித்து கட்டுப்பாடு விதித்த பிசிசிஐ - என்ன பிரச்னை? Who saw this coming India punches its ticket to the men's 4x400m final with a huge Asian record of 2:59.05 #WorldAthleticsChamps pic.twitter.com/fZ9lBqoZ4h— World Athletics (@WorldAthletics) August 26, 2023 நான்காவது லேனில், மூத்த வீரரான முகம்மது அனாஸ் ரேஸை சிறப்பாகத் தொடங்கி வைத்தார். அதன் பிறகு இரண்டாவதாக ஓடிய அமோஜ் ஜேக்கப்பும், மூன்றாவதாக ஓடிய அஜ்மலும் முன்னிலையை தக்கவைத்தனர். இறுதியாக ஓடிய தமிழக வீரர் ரமேஷ் தனது முழு ஆற்றலுடன் அமெரிக்க அணியை முந்த முயற்சி செய்தார். அதைச் செய்யத் தவறினாலும் இரண்டாவதாக வந்து இறுதிச்சுற்றுக்கு அணியைத் தகுதிபெறச் செய்தார். ஆசிய ரெகார்டும் இந்தியாவின் வசமானது.இந்த அணியில் ராஜேஷ் ரமேஷை தவிர்த்து மற்ற மூவரும் கேரளத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இறுதிசுற்றுக்கு தகுதிபெற்ற அணிகள்! இன்று நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்ல இன்னும் கூட வேகமாக இந்திய அணி ஓடவேண்டியிருக்கும். அப்படி பதக்கம் வென்றால் இந்திய தடகள வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அது அமையும். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கையும் பெரும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் இந்தியா!
http://dlvr.it/SvFHqL

Saturday, 26 August 2023

இன்ஸ்டா போஸ்ட்: லைக்ஸுக்காக டால்பினைக் கொன்றதாக 19 வயது இளைஞர்மீது குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், 19 வயது இளைஞர் ஒருவர் டால்பினை புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதாகத் திட்டமிட்டிருந்தார். இதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு அதிக லைக்குகள் கிடைக்குமென ஆசையில் இருந்திருக்கிறார். இதையடுத்து, ஃப்ளோரிடாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள அமிலியா தீவுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, டால்பினை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. அந்தச் சிறுவன் டால்பினை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்து புகைப்படம் எடுத்த, ஓரிரு தினங்களில் டால்பின் உயிரிழந்திருக்கிறது. இதையடுத்து, ஃபுளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பும், தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும் விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது. ப்ளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் அறிக்கைபடி, ``புகைப்படத்தில் டால்பின் வீங்கிய நிலையிலும், அதன் வாயிலிருந்து ரத்தம் வெளியேறியதும் பதிவாகியிருக்கிறது. மேலும் அவர், புகைப்படம் எடுத்த பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்க கூடும் அல்லது இதற்கு முன்னதாகவே டால்பின் இறக்கும் தறுவாயில் இருந்திருக்கலாம், தண்ணீரைவிட்டு வெளியே இழுத்ததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்க கூடும். ஆனால் புகைப்படத்தில் டால்ஃபின் உயிருடன் இருப்பதாகத் தெரிகிறது'' எனக் கூறப்படுகிறது. இந்த இளைஞர் டால்பினுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இது குறித்து 19 வயது இளைஞர், ``இது தானாக ஏற்பட்ட விபத்து. கரையிலிருந்து ஒரு டால்பினைப் பிடிப்பது வாழ்நாளில் ஒரு முறைதான் நடக்கும்'' என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். இருப்பினும் இளைஞரின் இந்தச் செயல் வரவேற்கத்தக்கது அல்ல என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதில் ஒருவர் இளைஞரின் இந்தச் செயல் `இயற்கைக்கு எதிரான குற்றம்' என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYMotivation: `அபாயகரமான கடல் பாதை!'- 24 ஆண்டுகள் கப்பல்களுக்கு வழிகாட்டிய டால்பின் - கதையல்ல நிஜம்
http://dlvr.it/SvCFkD

நொய்டா: டார்க் வெப்; 4 மாதத்தில் ரூ.50 கோடி; கால்சென்டர் மூலம் 600 அமெரிக்கர்களிடம் பலே மோசடி!

இந்தியாவில் இருந்து கொண்டு கால் சென்டர் நடத்தி, வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது. மும்பையில் இது போன்ற மோசடிகள் இதற்கு முன்பும் நடந்துள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் என்றோ அல்லது வயாகரா மாத்திரை விற்பவர்கள் என்றோ கூறி அமெரிக்க பிரஜைகளை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அது போன்ற ஒரு கால் சென்டர் டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே நொய்டா போலீஸார் அந்த கால் சென்டரில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் அமெரிக்கா பிரஜைகளிடம் அமெரிக்க சமூக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் போன்று பேசி மோசடி செய்து கொண்டிருந்தனர். அமெரிக்க பிரஜைகளுக்கு அவர்களின் வருமானம் அடிப்படையிலும், நலத்திட்டங்கள் வழங்கவும் 9 இலக்க சமூக பாதுகாப்பு எண் வழங்கப்படுகிறது. இதில் 4 லட்சம் அமெரிக்க பிரஜைகளின் சமூக பாதுகாப்பு எண்களை டார்க் வெப் மூலம் திருடி, அதில் உள்ளவர்களுக்கு கால் சென்டர் மூலம் போன் செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கால் சென்டரில் பணியாற்றிய 84 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இதற்கு முன்பு கால் சென்டரில் வேலை பார்த்து நல்ல அனுபவசாலிகள் ஆவர். அவர்கள் அமெரிக்க பிரஜைகளை மோசடி செய்கிறோம் என்று தெரிந்தே அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு இந்த வேலையை செய்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், 20 லட்சம் ரொக்க பண்ம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து நொய்டா போலீஸ் அதிகாரி ஹரீஷ் சந்தர், ``கால் சென்டரில் இருப்பவர்கள் முதலில் அமெரிக்க பிரஜைகளுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்புவார்கள். அதில், சந்தேகப்படும் படியான நடவடிக்கைகள் காரணமாக உங்களது சமூக பாதுகாப்பு எண் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும் சஸ்பெண்ட் செய்யப்படாமல் இருக்க குறிப்பிட்ட போன் நம்பரை கொடுத்து அந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளும்படி குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த நம்பருக்கு போன் செய்பவர்களிடம் கால் சென்டரில் பணியாற்றுபவர்கள் உங்கள் பைலை திறக்கிறேன் என்று சொல்லி அவர்களின் பெயர் மற்றும் ஜிப் எண்களை கேட்பது வழக்கம். கைது செய்யப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட நம்பர் இத்தகவல்களை கொடுத்துவிட்டால், உடனே உங்களது சமூக பாதுகாப்பு எண்ணை சஸ்பெண்ட் செய்வதற்காக ஆர்டர் வெளியிடப்பட இருக்கிறது என்று கூறி, சமூக பாதுகாப்பு எண்ணில் பணமோசடி, வாகன மோசடி தொடர்பாக தகவல்கள் இருக்கிறது என்று சொல்லி கால் சென்டர் ஊழியர் பயமுறுத்துவது வழக்கம். மேலும் வங்கி கணக்கும் முடக்கப்படும் அபாயம் இருக்கிறது. எனவே வங்கியில் இருக்கும் பணத்தை கிரிப்டோ கரன்சிக்கு மாற்றி பாதுகாத்து வைத்துக்கொள்ளும்படி ஆலோசனை சொல்வது வழக்கம். இதற்காக ஒரு லிங்க் அனுப்புவதாகவும் கால் சென்டர் ஊழியர் கூறுவார். கால் சென்டர் ஊழியர்கள் அனுப்பும் லிங்க்கை அமெரிக்க பிரஜை கிளிக் செய்துவிட்டால் அவரது வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் முழுவதும் கால் சென்டர் ஊழியரின் வங்கிக்கணக்கிற்கு வந்துவிடும். கால் சென்டரை நடத்தி வந்த ஹர்சித் குமார், யோகேஷ் பண்டிட் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். மோசடி பணத்தில் சினிமா; வாய்ப்பு கேட்கும் நடிகைகளிடமும் வசூல் - அமுத்சுரபி வழக்கில் என்ன நடக்கிறது? கைது செய்யப்பட்ட 84 பேரில் 38 பேர் பெண்கள் ஆவர். தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரும் கடந்த 4 மாதத்திற்கு முன்புதான் இந்த கால் சென்டரை தொடங்கியுள்ளனர். நான்கு மாதத்தில் 50 கோடி ரூபாய் அளவுக்கு 600 அமெரிக்க பிரஜைகளிடமிருந்து மோசடி செய்துள்ளனர். தினமும் 40 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
http://dlvr.it/SvBkM9

Friday, 25 August 2023

அமெரிக்காவில் படிக்க விரும்புகிறீர்களா? ஒரு குட் நியூஸ்; சென்னையில் U.S University Fair

வெளிநாடுகளில் சென்று பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் சென்று பயில மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், அதை செயல்படுத்துவதில் ஒருவித தயக்கம் இருக்கலாம்.  இந்த தயக்கத்தை உடைக்கும் வகையில், 2023 அமெரிக்க கல்வி கண்காட்சியானது, இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 3 வரை அமெரிக்காவின் புகழ்பெற்ற, அங்கீகாரமுடைய 60 பல்கலைக்கழகங்களில் இருந்து பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வரவுள்ளனர். அமெரிக்காவில் சென்று உயர்கல்வி பெற ஆர்வமாக உள்ள மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களும் இவர்களுடன் கலந்துரையாடலாம். இதனால் மாணவர்கள் தங்களது அமெரிக்க உயர்கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் குறித்துத் தெளிவான அறிவு பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரைச் செப்டம்பர் 2, சனிக்கிழமையன்று, ஹோட்டல் ஹயாட் ரீஜென்சியில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள் 
https://bit.ly/EdUSAFair23PR வலைதள பக்கத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். அமெரிக்க உயர்கல்வி குறித்த விளக்கக்காட்சி (Presentation) மற்றும் அமெரிக்க மாணவர் விசா குறித்த விளக்க அமர்வு மதியம் 12.45 மணிக்கு, கண்காட்சிக்கு முன்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை அமெரிக்க துணைத் தூதரகம்சிறப்பு விருந்தினராக 9-ம் வகுப்பு மாணவர் ஏற்றிய தேசியக்கொடி; காரணம் என்ன தெரியுமா?! இதற்கு எந்த கட்டணமும் இல்லை. எஜுகேஷன் யுஎஸ்ஏ, சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த உள்ளது. `இந்திய மாணவர்களின் கனவுகளை அடைய உதவும் வாய்ப்பாக இந்த கண்காட்சி அமையும்’ என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறியுள்ளார்.
http://dlvr.it/Sv9RXm

`கைதி எண் PO1135809, உயரம் 6.25 அடி' ; சிறைச் சென்ற 20 நிமிடங்களில் வெளிவந்த ட்ரம்ப் - நடந்தது என்ன?

அமெரிக்காவில் 2020-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜோ பைடனிடம் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியுற்றிருந்தார். அதன்பின்னர், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து, ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன் பின்னர், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் கொலம்பியா நீதிமன்றமும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற வழக்கில் ஜார்ஜியா நீதிமன்றமும் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்தன. இதில், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற வழக்கில் மட்டும் ட்ரம்ப் உட்பட 19 பேர் வெள்ளிக்கிழமைக்குள் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அதன்படி, அட்லாண்டாவிலுள்ள ஃபுல்டன் கிண்டி சிறையில் (Fulton County jail in Atlanta) நேற்று ஆஜரான ட்ரம்ப் கைது (Formal Arrest) செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இவருக்கு PO1135809 என்ற எண் வழங்கப்பட்டது. அதோடு, அவரின் உயரம் 6.25 அடி, எடை 97 கிலோ, முடியின் நிறம் ப்ளாண்ட் அல்லது ஸ்ட்ராபெர்ரி (Blond or Strawberry) எனப் பட்டியலிடப்பட்டது.அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருப்பினும் ட்ரம்ப் வெகுநேரம் சிறையில் இருக்கவில்லை. 2,00,000 அமெரிக்க டாலரை பிணையாக செலுத்திய ட்ரம்ப், சிறைக்குச் சென்ற அடுத்த 20 நிமிடங்களில் ஜாமீனில் வெளியில் வந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ``இங்கு நடந்தது நீதியின் கேலிக்கூத்து. நான் உட்பட இங்குள்ள யாரும் எந்த தவறும் செய்யவில்லை" என்று கூறினார்.பெண் எழுத்தாளருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; ட்ரம்ப் ரூ.41 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
http://dlvr.it/Sv8FN5

Thursday, 24 August 2023

தேர்தல் முறைகேடு வழக்கு; நீதிமன்றத்தில் சரணடைந்த டொனால்டு ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர்!

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் 2017-ம் ஆண்டு பதவியேற்றார். அதன் பிறகு 2020-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனிடம் டொனால்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனால், இந்தத் தேர்தலில் முறைகேடுகள் செய்து, தேர்தல் வெற்றியை ஜோ பைடன் அபகரித்துக்கொண்டார் என ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இதற்கிடையில், 2021 ஜனவரி 6-ம் தேதி தேர்தல் முடிவுகளுக்குச் சான்றளிக்கும் நிகழ்ச்சி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.டொனால்டு ட்ரம்ப் ஆனால், அந்த நிகழ்ச்சியை நடத்தவிடாமல், ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாகவும், ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாகவும் ட்ரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் கலவரம் தொடர்பான வழக்கு கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்திலும், ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கு ஜார்ஜியா நீதிமன்றத்திலும் நடந்தது. இரண்டு நீதிமன்றங்களும் டொனால்டு ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்தன. தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்ற வழக்கில் மேலும் 17 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. எனவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ட்ரம்ப் உள்ளிட்ட 17 பேரும் வெள்ளிக்கிழமைக்குள் நீதிமன்றத்தில் சரணடையவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், மிஸ்டி ஹாம்ப்டன், டேவிட் ஷாஃபர், கேத்தி லாதம், ரே ஸ்மித், கென்னத் செஸ்ப்ரோ, ஜான் ஈஸ்ட்மேன், ஸ்காட் ஹால் உட்பட பல்வேறு நபர்கள் வெவ்வேறு நாள்களில் சரணடைந்தனர்.ருடால்ப் கியுலியானி இந்த நிலையில், தேர்தல் முறைகேடுகளுக்கு தலைமை தாங்கியதாகக் கூறப்படும் டொனால்டு ட்ரம்ப்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் ருடால்ப் கியுலியானி மீது, பொய்யான அறிக்கைகளை வழங்குதல், பொய் சாட்சியம் கோருதல், மோசடியான ஆவணங்களை உருவாக்க சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று அட்லான்ட்டா காவல் நிலையத்தில் ருடால்ப் கியுலியானி சரணடைந்தார். இவர் 1,50,000 அமெரிக்க டாலர் பிணையாகச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தத் தொகையை அவர் வழங்கிய பிறகு பெயிலில் விடுவிக்கப்பட்டார். இது குறித்துப் பேசிய ருடால்ப் கியுலியானி, ``இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், இந்த வழக்கு எங்கள் வாழ்க்கை முறைக்கான போராட்டம். என்மீது மட்டுமல்ல, முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதும் வைத்த இந்தக் குற்றச்சாட்டு ஒரு கேலிக்குரியது. எங்கள்மீது தொடரப்பட்ட தாக்குதல் என்றே கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ட்ரம்ப் `விரைவில் ஆஜராகுவேன்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டால் குறைந்தது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY'டொனால்ட் ட்ரம்ப் குற்றமற்றவர்' - தீர்ப்பு வழங்கிய இந்திய வம்சாவளி நீதிபதி... யார் இந்த உபாத்யாயா?!
http://dlvr.it/Sv6sy1

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ராணுவ பெண்கள்... அமெரிக்க ராணுவத்தின் ஷாக் ரிப்போர்ட்!

ராணுவத்தில் பெரும்பாலும் ஆண்களே அதிக ஈடுபாடு காட்டுவதுண்டு. எட்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை, பெண்களும் ராணுவத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் பல பெண்கள் முனைப்போடு தங்களை ராணுவத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ராணுவ அறிக்கை ஒன்றில், அமெரிக்காவில் பெண் சிப்பாய்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலினம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.ஆணாதிக்கம் | Woman Abuse அறிக்கையில், ``ராணுவத்தின் ஸ்பெஷல் ஆபரேஷன்களில் (Army Special Operation), பெண்கள் பெரும்பாலும் நியமிக்கப்படுவது இல்லை. அப்படி ஸ்பெஷல் ஆபரேஷன்களில் பணியாற்றும் பெண்களிடம் எதிர்மறையான அணுகுமுறை காட்டப்படுகிறது. பெரும்பாலும் மூத்த அதிகாரிகளிடம் இருந்தே இப்படி வந்ததுள்ளது. கமாண்டோ பிரிவுகளில் பணிபுரியும் பெண்களிடம் வெறுப்பும், பாலினம் குறித்த வெளிப்படையான கமென்ட்டுகளும் சொல்லப்படுகின்றன.  இதைத் தாண்டி பாலியல் பிரச்னைகள், தனிமைப்படுத்தப்படுதல், சரியாகப் பொருந்தாத மற்றும் போதிய உபகரணங்கள் வழங்கப்படாதது, குழந்தை பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு இல்லாமை, குறிப்பாக கர்ப்பம் சம்பந்தப்பட்ட பல முக்கிய பிரச்னைகளை இப்போது வெளியிடப்பட்ட அறிக்கை அடையாளம் கண்டுள்ளது. `அதோடு தகுதி குறைந்த ஆண்களுக்கு வழங்கப்படும் வேலைகளுக்கு தாங்கள் அனுப்பப்படுகிறோம், மரியாதையைப் பெற நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டி இருக்கிறது’ என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ''பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் பெரும்பாலான வேலைகளைச் செய்ய சமமாகத் திறன் கொண்டவர்கள் என்கிற எண்ணம் கேலிக்குரியது" என்று ஓர் ஆண் கருத்தாளர் கூறினார். ஒரு பெண்ணுடன் சேர்ந்து ஒரு குழுவில் பணியாற்ற வேண்டியிருந்தால் அதற்கு முன்பே விலகிவிடுவோம் என்றும், அத்தகைய சூழலில் பணியாற்றுவது அவர்களின் மனைவிகளிடையே பிரச்னைகளையும் பொறாமையையும் உருவாக்கும் என்றும் மற்றவர்கள் கூறினார்கள்.பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக குடியரசுத் தலைவர் முர்மு... கோவாவில் பேசியதென்ன? பெண்கள் ராணுவத்தின் முன் வரிசை போர் வேலைகளுக்கு நகர்ந்தபோது, சில நேரங்களில் மோசமான கமென்ட்டுகளை வழங்குகிறார்கள். மேலும் தலைவர் பதவியை எட்டுவதில் சவாலான நிலையில் இருக்கிறார்கள்'' என இந்தப் பிரச்னை குறித்து பேசிய ஒருவர் (commenter) கூறியுள்ளார்.  சிப்பாய்களில் 837 பெண்கள், 3,238 ஆண்கள்  5,000-க்கும் மேற்பட்ட ராணுவ சிறப்பு நடவடிக்கைப் படைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என ஆய்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Sv619X

Wednesday, 23 August 2023

நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3

  இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.  சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது. அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.  சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் பயணித்தது. சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. தரையிறங்கியது லேண்டர் கலன் நிலவுக்கும் லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரத்தை பல்வேறு கட்டங்களாக படிப்படியாக இஸ்ரோ குறைத்தது. இறுதியில், குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் லேண்டர் கொண்டுவரப்பட்டது.  பின்னர் நிலவின் தரையிலிருந்து 150 மீட்டா் உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டது. சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தோ்வு செய்யப்பட்டது.  லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும், மெதுவாக நிலவில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.  இந்த முயற்சி பலன் அளித்ததால், சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.  சந்திரயான் -3 திட்டம் வெற்றி: இஸ்ரோ சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதால், புதிய இந்தியா உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/0VUeiqF https://ift.tt/bzUiYxk
via IFTTT

இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள்! சந்திரயானும், பிரக்ஞானந்தாவும்...

இந்திய வரலாற்றில் ஆகஸ்ட் 23  வரலாற்று சிறப்புமிக்க நாளாக மாறவுள்ளது.  ஒருபுறம் நிலவின் தென் துருவத்தில் முதலில் காலடி எடுத்துவைக்கும் சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர், மறுபுறம் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை எட்டிப்பிடிக்க போராடும் இளம் வீரர் பிரக்ஞானந்தா.  இந்த இரு வரலாற்று நிகழ்வுகளுமே இன்று (ஆக.23) ஒரே நாளில் நடக்கவுள்ளது. இந்த இரண்டிலும் நினைத்தபடி வெற்றியை எட்டினால், உலகத்தின் அனைத்து நாடுகளின் செய்திகளிலும் நாளைய தலைப்புச் செய்தி இந்தியாவாகத்தான் இருக்கும். இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் புதன்கிழமை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு தடம் பதிக்கவுள்ளது. விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் வெற்றிகரமாக தரையிறங்கும்பட்சத்தில், நிலவின் தென் துருவத்துக்கு அருகே தடம்பதித்த உலகின் முதல் தேசமாக இந்தியா உருவெடுக்கும். அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்தன. ஆனால், அவை எவ்வித ஆக்கப்பூர்வ பலனையும் அளிக்கவில்லை.  நிலவில் தண்ணீரின் மூலக்கூறுகள் உள்ளன என்பதைக் கண்டறிந்தது இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம்தான். சந்திரயான் -2 இறுதிக்கட்டத்தில் தோல்வியடைந்தது. தற்போது அந்தத் தோல்வியின் பாடங்களிலிருந்து உருவாக்கப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் நிலவின் அருகில் தற்போது பயணித்து வருகிறது. இன்று மாலை நிலவில் கால் பதிக்க காத்திருக்கிறது.  இதேபோன்று மறுபுறம் பிரக்ஞானந்தா. தமிழகத்தைச் சேர்ந்த 16 வயதான இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, உலகக்கோப்பை செஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற 2வது வீரராவார். இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் அந்த சாதனையைச் செய்துள்ளார். தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று விளையாடி வருகிறார் பிரக்ஞானந்தா.  அதுவும் உலகின் முதல் நிலை வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் உடன் மோதிவருகிறார். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தை போராடி சமநிலையில் (டிரா) முடித்தார் பிரக்ஞானந்தா. தற்போது இறுதிப்போட்டியின் 2வது சுற்றில் விளையாடி வருகிறார்.  இதில் சமநிலை இடத்தை எட்டினால்,  ரேபிட் முறையில் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகின் வளர்ந்த நாடுகள்கூட எட்டாத நிலவின் தென் துருவத்தை சந்திரயான் -3 எட்டிப்பிடிக்குமா? உலகின் முதல் நிலை வீரரை எதிர்கொண்டுவரும் பிரக்ஞானந்தா உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வாரா? இந்த நாள் இந்தியாவின் வரலாற்று நாளாக மாறுமா? 

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/0VUeiqF https://ift.tt/u60hUyI
via IFTTT

வீட்டுக்கு விசிட் அடித்த கரடி! - தமிழ் பெண்ணின் அமெரிக்க அனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் அமெரிக்காவில் "கனெக்டிகட்" என்ற பகுதியில் என் மகளின் வீடு அமைந்திருக்கிறது.அவர்கள் அந்த வீட்டை வாங்கி நான்கு வருடங்களாகிறது. நாங்கள் இந்த கோடை விடுமுறைக்கு சென்று வந்தோம். அப்போது நான் ரசித்த விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வீடு அமைந்திருக்கின்ற இடம் ஒரு சிறிய மலைப் பகுதி. ஒவ்வொரு வீடும் 2 ஏக்கர், 3 ஏக்கர் ,5 ஏக்கர் என்ற முறையில் பிரிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது. வீட்டை சுற்றியும் பரந்த புல்வெளியும், சுற்றிலும் மரக்கூட்டங்களுடனும் அமைந்திருக்கிறது. சிறிய ஓடை ஒன்று எல்லாக் குடியிருப்புக்குள்ளும் நுழைந்து தனது பாதையில் ஓடுகிறது. ஒவ்வொரு வீட்டின் முன்புறமாகவோ, பின்புறமாகவோ, ஓடையின் பாதை செல்கிறது.இது எப்படி இவ்வளவு சுதந்திரமாக ஓடுகிறது? யாரும் அடைக்க மாட்டார்களா? என்று மகளை வினவினேன். ( நம்ம ஊரில் , பெரிய ஏரி,குளங்களை எல்லாம் இருக்கிற இடம் தெரியாமல் மாற்றி அமைத்த வரலாறு படைத்தவர்கள் அல்லவா நாம்! ). அது 50,60 வருடங்களுக்கு மேலாக அப்படியே தான் சென்று கொண்டிருக்கிறது. Representational Image அதனை யாரும் மாற்றமுடியாது, அதுமட்டுமா ஒரு மரத்தை கூட டவுன்ஷிப்பில் அனுமதி இல்லாமல் வெட்டக்கூடாது. இங்கே பழமை மாறாமல், இயற்கை சூழலை மாசு படுத்தாமல் இருக்க வேண்டும் என்று புது குடியிருப்புக்களோ, காம்ப்லெக்ஸ் போன்றவை கட்டுவதற்கு கூட அனுமதி இல்லை என்று மகள் விளக்கினாள். மலைப்பகுதி என்பதால் மான் கூட்டங்களும், பலவகையான பறவை வகைகளும் சுதந்தரமாக வலம் வருகின்றன. அவ்வப்போது சிறு நரிகளும், சிப்மங்(chipmunk) என்று அழைக்கப்படுகின்ற அணில்கள்,காட்டு முயல்கள் சுதந்தரமாக திரிகின்றது.Representational Image அனைத்தையும் விட ஒருமுறை ஒரு தாய்க்கரடி கூட தன் குட்டிகளுடன் எங்கள் இருப்பிடத்திற்கு வருகை புரிந்தது. நாங்கள் தான் அதனை கண்டு பயந்தோம். ஆனால் கரடியின் கழுத்தில் காலர் மாட்டியிருக்கிறார்கள். அதனை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் அதை எதுவும் செய்யக்கூடாது அதுவே சென்று விடும் என்று மகள் கூறினாள். அதனையும் அப்பகுதி மக்கள் நாங்கள் இங்கே பார்த்தோம் , இந்த ரோட்டில் சென்று கொண்டிருக்கிறது என்று வலைதளங்களில் பதிவிட்டு எச்சரிக்கிறார்கள், மகிழ்ச்சியும் அடைகின்றனர்.Representational Image நாங்களும் எங்கள் புல்வெளியில் தினமும் உலாவருகின்ற வான்கோழி குடும்பங்களையும், தேன்சிட்டுகள்,கார்டினல், ப்ளூ ஜே என்று பலவகையானா பறவைகளை கண்டும், அவற்றின் கானங்களையும் கேட்டும் ரசித்தோம். ஆனால் எல்லாமே இந்த மூன்று , நான்கு மாதங்களுக்கு தான். அடுத்து குளிர் காலம் ஆரம்பிக்கும், பனிப்பொழிவில் மரங்கள் இலை உதிர்த்து மொட்டையாகிவிடும். எந்த விலங்குகளையும், பறவைகளையும் நாம் காணமுடியாது. அடுத்த கோடைகாலம் வரும் வரை அவற்றின் வருகைக்காக நாம் காத்திருக்கவேண்டும் என்று மகள் கூறினாள். அன்புடன், லதா தாஸ் கோவை விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
http://dlvr.it/Sv3RSr

Tuesday, 22 August 2023

114 பேரை பலிகொண்ட காட்டுத்தீயை, தன் சமையலறை தீவிபத்துடன் ஒப்பிடுவதா? - ஜோ பைடனை சாடும் நெட்டிசன்கள்

அமெரிக்காவிலுள்ள ஹவாய் தீவுக்கூட்டத்தின் (Hawaiian Archipelago) மௌய் (Maui) தீவில், கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ஏற்பட்ட பெரிய காட்டுத்தீ, அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தில் 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் எரிந்து சாம்பலாகின. கிட்டத்தட்ட 114 பேர் உயிரிழந்தனர்.மௌய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் பாதிப்புகள் - அமெரிக்கா இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மௌய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் விளைந்த பாதிப்புகளை, தனது வீட்டின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தின் எடுத்துக்காட்டுடன் பேசியது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 21), மௌய் தீவின் காட்டுத்தீயில் உயிர்பிழைத்தவர்களை லஹைனா (Lahaina) நகரில் நேரில் சந்தித்து ஆறுதல்படுத்த முயன்றார் ஜோ பைடன். சுமார் 13 நிமிடங்கள் மக்களிடையே பேசிய ஜோ பைடன், ``இப்போது நான் சொல்வதை வைத்து, மௌய் தீவின் காட்டுத்தீ விபத்தால் ஏற்பட்ட சிரமங்களை ஒப்பிட விரும்பவில்லை. ஆனால், ஒரு வீட்டை இழப்பது எப்படியிருக்கும் என்பது எனக்கும், என் மனைவிக்கும் கொஞ்சம் தெரியும். 15 ஆண்டுகளுக்கு முன்பு, வாஷிங்டனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தேன் நான். அப்போது எனது வீட்டுக்கு வெளியே உள்ள பெரிய குளத்தின் மீது ஒரு மின்னல் பாய்ந்தது.ஜோ பைடன் அந்த மின்னல், ஒரு கம்பியைத் தாக்கி வீட்டின் காற்றுநிலை குழாய்களுக்குள் பாய்ந்தது. இதனால் வீட்டின் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கதையைச் சுருக்கமாகச் சொன்னால், கிட்டத்தட்ட என் மனைவியை நான் இழந்திருப்பேன். அதோடு ஒரு பூனையையும் நான் இழந்தேன். தீயணைப்பு வீரர்கள், என் மனைவியையும், எனது குடும்பத்தையும் காப்பாற்றத் தீக்கு நடுவே ஓடினர். இதுவொன்றும் நகைச்சுவையல்ல" என்று கூறினார். ஜோ பைடனின் இத்தகைய பேச்சால், இணையதளவாசிகள் பலரும் அவரை மௌயின் சோகத்தில் உணர்ச்சியற்றவர் என்று இணையதளங்களில் சாடிவருகின்றனர். நூற்றுக்கும் அதிகமானோர் பலியான பேரிடரை வீட்டின் கிச்சன் தீவிபத்துடன் ஒப்பிடுவதா என அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஹவாய் தீவைச் சூழ்ந்த காட்டுத் தீ; தப்பிக்க கடலில் குதித்த மக்கள் - பலி எண்ணிக்கை 67-ஆக உயர்வு!
http://dlvr.it/Sv2mTZ

நடுக்கடலில் உயிருக்குப் போராடிய சீன பிரஜை: நள்ளிரவில் ஹெலிகாப்டரில் சென்று மீட்ட இந்தியக் கடற்படை!

இந்தியா மற்றும் சீனாவுக்கிடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. சீனா இந்திய நிலப்பரப்பை அபகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் எல்லையில் இந்தியா தேவைக்கு அதிகமான படைகளைக் குவித்திருக்கிறது. அதேசமயம் மனிதாபிமான உதவிகளை இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளத் தயங்குவதில்லை. சீனாவிலிருந்து யுஏஇ நாட்டுக்கு ஆராய்ச்சி கப்பல் சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பல் மும்பையிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் சென்றபோது அந்தக் கப்பலில் பயணம் செய்த ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்தியா - சீனா மாரடைப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. உடனே உதவி கேட்டு சீன கப்பலிலிருந்து தகவல் அனுப்பப்பட்டது. இது குறித்து மும்பையிலுள்ள கடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவல் கிடைத்ததும், உடனே அந்த கப்பலுடன், கடற்படை அதிகாரிகள் தொடர்புகொண்டனர். முதல் கட்டமாக போன் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த 17-ம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று சீன கப்பல் இருந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கடலில் மிகவும் மோசமான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் ஹெலிகாப்டரில் சென்று கப்பலில் இருந்த நோயாளியை மீட்பது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும், இந்தியக் கடற்படையினர் மிகவும் இருட்டான சூழ்நிலையில் மாரடைப்பு ஏற்பட்ட சீன பிரஜையை மீட்டனர். என் வெய்யாங் என்ற அந்த நோயாளியை இந்தியக் கடற்படை அதிகாரிகள் மீட்டு, அவருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சையை வழங்கினர். அதைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சீன பிரஜையைத் தக்க நேரத்தில் காப்பாற்றியதற்கு இந்தியாவிலுள்ள சீன தூதரகம் இந்தியாவைப் பாராட்டியிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxsணோவ்... துல்கர்ணா.. ! நீ மாஸ்ணா... ! தி ரியல் பேன் இந்தியா ஸ்டார் - துல்கர் சல்மான் ஏன் தெரியுமா? 
http://dlvr.it/Sv0nsw

31 வயது கர்ப்பத்தை 92 வயதில் ஈன்ற பெண்; கால்சியம் படிந்து கல்லான சிசு... என்ன பிரச்னை இது?!

சீனாவில், வறுமையின் காரணமாக அறுவை சிகிச்சைக்கு வழியின்றி 60 ஆண்டுகளாகத் தன் வயிற்றில் இறந்த சிசுவை சுமந்து வந்த பெண்ணுக்கு, அவரது 92 வயதில், அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்தவர் ஹுவாங் யிஜுன் என்ற பெண்.1948-ல் அவருக்கு 31 வயதானபோது கருவுற்று இருக்கிறார். ஆனால், அந்தக் கருவானது, கருப்பைக் குழாக்கு வெளியே ஒட்டிக் கொண்டிருந்துள்ளது.ஹுவாங் யிஜுன் இதனால் அந்தக் கரு அடி வயிற்றுப் பகுதியில் வளரும் சூழல் ஏற்பட்டது. இது போன்ற கரு வளர்ச்சியை மருத்துவ உலகில், எக்டோபிக் கர்ப்பம் (ectopic pregnancy) என்று கூறுவதுண்டு. இத்தகைய சூழ்நிலையில் வளரும் கரு, பிரசவிக்கும்போது 21% குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளதாகவும், தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் எனவும் அப்போது பரிசோதித்த மருத்துவர்கள், ஹுவாங்கிடம் தெரிவித்துள்ளனர். எனினும், ஹுவாங் அதைப் பொருட்படுத்தவில்லை. அதே நேரம், கரு வளர்ச்சியடைந்து, வெளியேற முடியாமல் வயிற்றிலேயே சிசு இறந்தது. இதனை அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற, அப்போது இந்திய மதிப்பில் 12,500 ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், பணமில்லாததால் ஹுவாங்கின் குடும்பத்தினர் இதற்கு முன்வரவில்லை. In 1948, Huang Yijun, a 31-year-old Chinese woman, discovered that she was pregnant. She went to the doctor, who informed her that the fetus was growing outside her uterus, specifically in her abdomen, a condition known as ectopic pregnancy. Huang needed to undergo surgery to… pic.twitter.com/ttu8ARl0jj— Historic Vids (@historyinmemes) August 17, 2023 சீனாவில் வாடகை அப்பாக்கள் அறிமுகம்: Bath House-க்கு ஆண் குழந்தையோடு வரும் அம்மாக்களுக்கு உதவ திட்டம் இதனால், ஹுவாங் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், இறந்த கருவை 60 ஆண்டுகள் தனது வயிற்றில் சுமந்துள்ளார். அந்த இறந்த சிசுவின் மீது கால்சியம் பதிவுகள் உருவானதன் காரணமாக, வயிற்றிலேயே அது கல் போல மாறியுள்ளது. இறுதியாக, கல்லாக மாறிய அந்த சிசுவை 60 ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2009-ம் ஆண்டில், ஹுவாங்கிற்கு 92 வயதானபோது, அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
http://dlvr.it/Sv0Plz

Monday, 21 August 2023

Motivation Story: பகலில் தூய்மைப் பணியாளர்; இரவில் ஓவியர் - 57 வயது சாதனை மனுஷி வாங் லியுயென்!

`கற்றல் ஒருபோதும் மனதைக் களைப்படையச் செய்வதில்லை.’ - ஓவியர் லியோனார்டோ டா வின்சி. கற்றுக்கொள்வதற்கு வயது வரம்பு என்று ஏதும் இருக்கிறதா... நிச்சயம் இல்லை. எந்த வயதிலும், எதையும் கற்றுக்கொள்ளலாம். வாழ்க்கையெல்லாம் துன்பப்பட்டுவிட்டு, ஒருகட்டத்தில் புதிதாக எதையாவது கற்க முயன்று, அதில் ஆழமாக இறங்குபவர்களில் சிலர் வெற்றி என்கிற பழத்தை எட்டிப் பறித்துவிடுகிறார்கள். வாழும் வாழ்க்கைக்கான அர்த்தம், சற்று தாமதமாகவேணும் அவர்களுக்குப் புரிந்துபோகிறது. அந்த வகை மனிதர்களில் ஒருவர், சீனாவைச் சேர்ந்த 57 வயது பெண்மணி வாங் லியுயென் (Wang Liuyun). பீஜிங்... நார்த் தேர்டு ரிங் ரோடு. அங்கிருக்கும் ஓர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக வேலை பார்க்கிறார் வாங். பெருக்குவது, டாய்லெட்டைக் கிளீன் செய்வது, மாப் போட்டுத் தரையைச் சுத்தமாகத் துடைப்பது என ஓயாத வேலை. வேலை முடிந்ததும் குப்பைகளையும் கழிவுகளையும் ஒரு பையில் சேகரித்து, தன் சிறு ஸ்கூட்டரில் எடுத்துக்கொண்டு போய் குப்பைக் கிடங்கில் போடுகிறார். இரவில் தன் சிறு வாடகை வீட்டுக்குத் திரும்புகிறார். தரையில் அமர்ந்து, பிரஷ்ஷையும் பெயின்ட்டையும் எடுத்துக்கொண்டு, தன் மனதில் தோன்றும் சித்திரங்களையெல்லாம் வரைய ஆரம்பித்துவிடுகிறார்.வாங் லியுயென் காலம் முழுக்கக் கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் நடக்கவேண்டிய நிர்பந்தம் பலருக்கு வாய்த்துவிடுகிறது. வாங் லியுயென்னுக்கு வாய்த்ததும் கல்லும் முள்ளும் நிறைந்த, மேடு பள்ளமான பாதைதான். 1966-ம் ஆண்டு, சீனாவின் ஹுனான் (Hunan) மாகாணத்தில் இருக்கும் லௌடி (Loudi) என்கிற அழகான ஊரில் பிறந்தார் வாங். மிக ஏழ்மையான குடும்பம். ஐந்தாவது குழந்தை. மூன்று சகோதரிகள், ஓர் அண்ணன். ஏழ்மையைக்கூட சகித்துக்கொண்டார் வாங். ஆனால், பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களின் கேலி அவரைப் பாடாகப்படுத்தியது. வாங்கின் அப்பாவுக்கு கூன் விழுந்த முதுகு. அதைச் சொல்லிக்காட்டியே கிண்டல் செய்தார்கள் மாணவர்கள். ஓரளவுக்கு நன்றாகப் படிக்கும் மாணவி என்றாலும், இந்தப் பரிகாசத்தால் பள்ளிக்குப் போகவே அவருக்குப் பிடிக்கவில்லை. அதற்கும் ஒரு முடிவு வந்தது. 17 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்தியே ஆகவேண்டிய சூழல். காரணம், ஒன்றுமில்லை... ஃபீஸ் கட்ட பணம் இல்லை.`நீங்கள் ரிலாக்ஸாக இருக்கக் கற்றுக்கொண்டு பதிலுக்காகக் காத்திருந்தால், உங்கள் மனம் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துவிடும்.’ - அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் எஸ். பரோஸ் (William S. Burroughs).வாங் லியுயென் படிப்பு நின்றுபோய்விட்டது. அடுத்து என்ன செய்வது... வேறென்ன, ஏதாவது வேலை பார்க்கவேண்டியதுதான். நாலு காசாவது கிடைக்குமே! கிடைக்கிற வேலைகளையெல்லாம் செய்தார் வாங். விவசாயம், மரக்கன்றுகள் நடுவது... என சின்னச் சின்ன வேலைகள். அவருக்கு 20 வயது நடந்துகொண்டிருந்தபோது அவருடைய பெற்றோர் இறந்துபோனார்கள். இதற்கு மேல் தனியாக வசிக்க முடியாதே... எந்த ஊராக இருந்தாலும் தனிமையில் ஒரு பெண் இருப்பது ஊராரின் கண்ணை உறுத்தத்தானே செய்யும்... அதற்காகவே திருமணம் செய்துகொண்டார் வாங். திருமண வாழ்க்கை இத்தனை கசப்பாக இருக்கும் என்று வாங் நினைக்கவில்லை. வாய்த்த கணவர் அவ்வளவு முரட்டுத்தனமான மனிதராக இருந்தார். சதா திட்டு... அடி, உதை... போதாததற்கு வாங் உழைத்துச் சம்பாதித்த பணத்தையெல்லாம் பிடுங்கிக்கொண்டு போனார் கணவர். துவண்டுபோனார் வாங். கொடுமையான இல்லற வாழ்க்கையிலும் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். குழந்தைக்கு 7 வயது நடந்துகொண்டிருந்தபோது, ஒரு கார் விபத்தில் அவர் கணவர் இறந்துபோனார். பிறகு, விற்பனைப் பிரதிநிதி, தையல் வேலை, தூய்மைப் பணி... என என்னென்னவோ வேலைகளைப் பார்த்தார் வாங். அவருக்கும் குழந்தைக்கும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே! கணவர் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின், ஜீஜியாங் (Zhejiang) மாகாணத்தில் இருக்கும் ஒரு கடற்கரை கிராமத்துக்கு மகளுடன் குடிபெயர்ந்தார் வாங். அங்கு ஒரு மனிதரைச் சந்தித்தார். பேசினார். பழகினார். மிகவும் பிடித்துப்போனது. திருமணம் செய்துகொண்டார். ஜீஜியாங்கில் அமைந்த அந்தக் கிராமத்து வாழ்க்கை சில கதவுகளை அவருக்குத் திறந்துவிட்டது. இப்படியே காலம் முழுக்க சிறு சிறு வேலைகளை மட்டும் செய்துகொண்டிருப்பது உதவாது என்று தோன்றியது. அதோடு வேலை முடிந்து வந்து, வீட்டு வேலைகளை மட்டும் செய்துவிட்டு சும்மா இருப்பது அவருக்கே பிடிக்கவில்லை. பொழுதை விரட்டுவதற்கு அவர் தஞ்சமடைந்த இடம் உள்ளூர் நூலகம். கையில் கிடைத்ததையெல்லாம் படித்தார். சீன வரலாறு, ரஷ்ய இலக்கியங்கள்... என எதை எதையோ படித்தார். முக்கியமாக, சீனக் கவிஞர் டு ஃபூ (Du Fu) எழுதிய கவிதைகள் அவரை ஈர்த்தன. புத்தகங்களைப் புரட்டும்போது சில ஓவியங்களும் அவரைக் கவர்ந்தன. அதோடு ஜீஜியாங் அருங்காட்சியகத்துக்கு அவர் போயிருந்தபோது சில ஓவியங்களைப் பார்த்து மலைத்துப்போனார். ஓவியர்களில் இரண்டு பேரின் ஓவியங்கள் அவருடைய கண்முன் வந்து வந்து போயின. அவர்களில் ஒருவர், வாங் ஜிமெங் (Wang Ximeng). இன்னொருவர், ஹுவாங் காங்வாங் (Huang Gongwang). `அவர்களைப்போலவே நானும் ஓர் ஓவியரானால் எப்படியிருக்கும்... என்னால் ஆக முடியுமா... அது சாத்தியம்தானா?’ என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்தார் வாங்.வாங் லியுயென் வரைந்த ஓவியம்`நான் எப்போதும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அதற்காக எப்போது பார்த்தாலும் எனக்குக் கற்றுக்கொடுப்பது என்பதை நான் விரும்பவில்லை.’ - முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். ஓவியத்தின் மீதான ஆர்வம் அவரை விடாமல் துரத்தியது. ஒருநாள் ஹுவாங் காங்வாங் தீட்டியிருந்த ஓவியம் ஒன்றைப் பார்த்தார். அதில் ஃபூச்சூன் மலையை (Fuchun Mountains) வரைந்திருந்தார் ஹுவாங். பார்க்கப் பார்க்கக் கொள்ளை அழகு. அந்த மலையும் ஜீஜியாங் மாகாணத்தில்தான் இருந்தது. உடனே கிளம்பிவிட்டார் வாங். ஆனால், நேரில் அந்த மலையைப் பார்த்தபோது, ஹுவாங்கின் ஓவியம் கவர்ந்ததைப்போல, அது அவரை ஈர்க்கவில்லை. பின்னாளில் ஒரு பேட்டியில் வாங் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்... ``ஹுவாங் வரைந்திருந்தது அவருடைய கனவில் வந்த ஒரு காட்சி என நான் உணர்ந்த தருணம் அது.’’ ஓவியம், வாங்கை வசீகரிக்கக் காரணமும் இருந்தது. வாழ்க்கை யதார்த்தத்திலிருந்து தப்பிக்க ஓவியம் ஒரு கருவியாக, ஒரு வடிகாலாக அவருக்கு இருந்தது. அது 2016-ம் ஆண்டு. கிழக்கு சீனாவில் இருக்கும் ஃபூஜியான் (Fujian) மாகாணத்தில் இருந்தது பழைமையான நகரமான ஷுவாங்க்‌ஷி (Shuangxi). அங்கே யாரோ இலவசமாக ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பதாகக் கேள்விப்பட்டார் வாங். அப்போது அவருக்கு 50 வயது முடிந்திருந்தது. இந்த வயதில் வரையக் கற்றுக்கொள்ள முடியுமா என்றெல்லாம் யோசிக்கவேயில்லை வாங். கிளம்பிவிட்டார். இரண்டு முறை திருமணம் முடித்திருந்தாலும் மகிழ்ச்சி என்பது அவர் கையிலிருந்து நழுவிப்போகும் ஒரு பொருளாகவே அவருக்கு அன்றுவரை இருந்தது. ஓவியம்தான் இனி வாழ்க்கை என வாங் முடிவெடுத்திருந்தார். மார்ச் 2017. ஷுவாங்க்‌ஷிக்கு அவர் கிளம்பிப் போனபோது அவர் கையில் சொற்பப் பணமே இருந்தது (சில நூறு யுவான் கரன்சிகள்). அங்கே லின் ஜெங்லூ (Lin Zhenglu) என்ற ஓவியர் ஓர் அறக்கட்டளையின் சார்பாக இலவசமாக ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு இலவசமாக பெயின்ட், பிரஷ்கள், கேன்வாஸ் எல்லாம் கொடுக்கப்பட்டன. ``என்ன வரையலாம்?’’ என்று வாங் கேட்டபோது, ``உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை வரையுங்கள்’’ என்று சொல்லிவிட்டார்கள். கோர்ஸில் சேர்ந்த நான்காவது நாள் ஓர் ஓவியத்தை வரைந்திருந்தார் வாங். ஒரு சிறு நகரத்தின் வசந்தகாலம்தான் தீம். அந்த ஓவியத்தில் வயல்வெளியில் பூக்கள் மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தன.வாங் லியுயென் ஆசிரியர்கள் ஊக்கம் கொடுத்தார்கள். ஐந்தாவது, ஆறாவது தினங்களில் மேலும் இரண்டு ஓவியங்களை வரைந்திருந்தார் வாங். ``நிலப்பரப்பை அற்புதமாக வரைகிறீர்கள்’’ என்று ஓவியர் லின் ஊக்கப்படுத்தினாலும், வாங்கால் முழுதாக அதை நம்ப முடியவில்லை. இயற்கை ஒருவருக்கு வாரிக்கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. அது வாங் விஷயத்தில் நடந்தது. அந்த வாரம் மனநிறைவோடு ஊருக்குத் திரும்பினார்.`மாற்றம் என்பது நாம் எதையெல்லாம் கற்றுக்கொள்கிறோமோ அதற்கான உண்மையான ரிசல்ட்.’ - அமெரிக்க எழுத்தாளர் லியோ பஸ்காக்லியா (Leo Buscaglia). அவர் ஊருக்கு வந்த இரண்டே நாள்களில் லின்னிடமிருந்து கடிதம்... கூடவே கொஞ்சம் பணமும் வந்தது. `உங்களுடைய மூன்று ஓவியங்களும் விற்றுவிட்டன. அதற்கான தொகையை அனுப்பியிருக்கிறேன்’ என்று எழுதியிருந்தார் லின். 150 யுவான். சிறு தொகைதான். ஆனால், வரைவதில் பணமும் கிடைக்கும் என்பது வாங்குக்கு உற்சாகத்தைத் தந்தது. இன்னும் வரையலாமே என்ற ஆசை பிறந்தது. அடுத்த வாரம் உள்ளூரில் இருக்கும் ஒரு கூட்டுறவு வங்கியில் ஒரு தொகையைக் கடனாக வாங்கினார். ஷுவாங்ஷிக்கு மூட்டை முடிச்சோடு கிளம்பிப்போனார். அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் மாத வாடகைக்கு ரூம் போட்டார். தங்கினார். அதிகாலையிலேயே லின்னின் ஓவிய நிலையத்துக்குச் சென்று அவர் பாட்டுக்கு வரைய ஆரம்பித்தார். பெயின்ட், பிரஷ்கள், கேன்வாஸ் எல்லாம் இலவசம் அல்லவா! ஒன்றைக் கண்டுகொண்டார் வாங். ஓவியங்களை வரையும்போது அவருக்குச் சோர்வே ஏற்படவில்லை.   மூன்றே மாதங்கள்... ஐம்பது ஓவியங்களை வரைந்திருந்தார் வாங். அவருடைய உற்சாகத்தையும் திறமையையும் பார்த்து தன் செலவிலேயே அவருடைய ஓவியங்களை வைக்க ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தார் லின். அந்த மகிழ்ச்சி ரொம்ப காலம் நீடிக்கவில்லை. ஒருநாள் காலையில் ஹோட்டல் வாசலில் வந்து நின்றார் வாங்கின் கணவர். ``உடனே கிளம்பு நம்ம ஊருக்குப் போகலாம்’’ என்றார். வாங் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. ஊருக்கு வந்ததும்தான் அவருக்கு விஷயம் தெரிந்தது. வாங்கின் கணவரிடம் யாரோ, ``ரொம்ப நாளைக்கு உன் மனைவியை இப்பிடி தனியா விட்டுவெச்சேன்னா, அவ டைவர்ஸ் வாங்கிட்டுப் போற ஐடியால இருக்கான்னு அர்த்தம். போய் கூட்டிட்டு வந்துடு. ஒரு பொம்பளை, அதுவும் ஐம்பது வயசுக்கு மேல ஓவியம் கத்துக்கறாளாம். கேட்கவே வேடிக்கையா இல்லை?’’ என்று பற்றவைத்திருந்தார்கள். நொந்துபோனார் வாங்.Shenzhen's Dafen என்கிற ஓவிய கிராமம் ஒரு வாரத்துக்குப் பிறகு லின் அவரை போனில் அழைத்தார். ``உங்களோட எல்லா ஓவியங்களும் வித்துத் தீந்துடுச்சு’’ என்று சொன்னார். அதற்கான தொகையாக 20,000 யுவான் அனுப்பியிருந்தார். நிறைய பேர் அவருடைய ஓவியங்களைக் கேட்க, அதற்காகவே ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினார் வாங். ஆர்டர்கள் வந்தன. அதற்குப் பணமும் வந்தது. புகழ்பெற்ற Shenzhen's Dafen என்கிற ஓவிய கிராமத்தில் ஒரு வருடம் தங்கி இன்னும் கற்றுக்கொண்டார் வாங். அவருடைய திறமையைப் பார்த்து, ஹெனான் மாகாணத்திலிருந்த ஒரு பள்ளியில் அவரை ஓவிய ஆசிரியராகச் சேர்த்துக்கொண்டார்கள். அதுவும் கொஞ்ச காலம்தான். திடீரென்று அடித்த கொரோனா அலை, அவர் வாழ்க்கையையும் சுழற்றிப்போட்டது. வேலை போனது. வேலை தேடி 2020-ம் ஆண்டு பீஜிங்குக்கு வந்தார் வாங். பீஜிங் அவருக்கு அடைக்கலம் தந்தது; பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது; அவரை ஏற்றுக்கொண்டது. அவருடைய கணவருக்கும் ஒரு செக்யூரிட்டி வேலை கிடைத்தது. பகலில் ஒரு ஆபீஸில் தூய்மைப் பணி. காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை. இரவில் வீட்டுக்கு வந்ததும் பிரஷ்ஷைக் கையிலெடுத்துவிடுவார் வாங். அவர் தன் வாழ்க்கையை நொந்துகொள்ளவில்லை. எல்லாமே அவருக்குப் பாடம்தான். இரவில் வரையும் ஓவியங்களை இணையத்தில் விளம்பரப்படுத்தி, குறைந்த தொகைக்கு விற்கிறார். அவர் குறித்த ஒரு டாகுமென்டரி `Sina Weibo' என்ற சோஷியல் மீடியாவில் வெளியானது. அந்த டாகுமென்டரியை 75 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டிருக்கிறார்கள். வாங்கின் வார்த்தைகளிலேயே சொல்லப்போனால் ``50 வயது வரை நான் ஒரு சாதாரண, அடையாளமே இல்லாத பட்டிக்காட்டுப் பெண். இன்றைக்குப் பல லட்சம் பேருக்கு என்னைத் தெரியும். காரணம், 51 வயதில் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள நான் ஆசைப்பட்டதுதான்.’’ 
http://dlvr.it/StzrLY

தன் கடைக்கு முன் LGBTQ கொடியேற்றிய பெண் சுட்டுக்கொலை; அமெரிக்காவில் பயங்கரம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தன் சொந்த கடைக்கு முன் LGBTQ சமூகத்தின் கொடியை ஏற்றியிருந்த பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் பெயர் லாரா ஆன் கார்லேடன் (Laura Ann Carleton) என்று தெரியவந்திருக்கிறது. 66 வயதாகும் இந்தப் பெண், சான் பெர்னார்டினோ கவுண்டி பகுதியில் சிறிய துணிக்கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார்.LGBTQ இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணியளவில் அவரின் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், கடைக்கு முன் LGBTQ சமூகத்தின் கொடி இருப்பது தொடர்பாக லாரா ஆன் கார்லேடனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். வாக்குவாதம் ஒருகட்டத்தில் இருவருக்கும் அதிகமாக முற்றவே, அந்த மர்ம நபர் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து லாரா ஆன் கார்லேடனைச் சுட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதுபற்றி போலீஸார் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, லாரா ஆன் கார்லேடன் அங்கு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து கிடந்தார். அதையடுத்து அந்த மர்ம நபரைத் தேடிய போலீஸ் அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் அந்த நபரைக் கண்டுபிடித்தனர். அப்போது போலீஸார் அந்த நபரைக் கைதுசெய்ய முயற்சி செய்தபோது, அந்த நபர் துப்பாக்கியால் சுட முயன்றதால், போலீஸார் பதிலுக்கு என்கவுன்டர் செய்தனர். இதில் அந்த மர்ம நபர் அங்கேயே இறந்துவிட்டார். பின்னர், அந்த மர்ம நபர் எதற்காக அந்தப் பெண்னை சுட்டுக்கொன்றார் என்பது பற்றி அதிகாரியொருவர், ``லாரா ஆன் கார்லேடன் தன்னுடைய கடைக்கு முன் LGBTQ கொடி வைத்திருந்தது அந்த நபருக்குப் பிடிக்கவில்லை. இறுதியில், லாரா ஆன் கார்லேடனை சுடுவதற்கு முன் LGBTQ கொடியைப் பற்றி தகாத வார்த்தையில் திட்டினார்" என்று தெரிவித்தார்.LGBTQ இருப்பினும் அந்த நபரின் அடையாளம் மற்றும் தகவல்களை போலீஸார் இன்னும் வெளியிடவில்லை. அதேசமயம், லாரா ஆன் கார்லேடன் பற்றிய தகவலில், கணவர் மற்றும் ஒன்பது குழந்தைகளுடன் வசித்துவந்த அவர் LGBTQ சமூகத்தின் உறுப்பினராக இல்லையென்றாலும் கூட, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தொடர்ந்து பல உதவிகளைச் செய்துவந்திருக்கிறார் என்று தெரியவருகிறது. Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3OITqxs`மருத்துவப் பாடங்களில் LGBTQ+ சமூகத்தை அவமதிக்கும் கருத்துகளை நீக்குக!' - உத்தரவிட்ட நீதிபதி
http://dlvr.it/Sty54H

உத்தரப் பிரதேசம்: காபி ஷாப்பில் மலர்ந்த காதல்; காதலனுக்காக எல்லைக் கடந்து வந்த தென்கொரிய பெண்!

“விழுப்புரத்தைச் சேர்ந்த நபரைப் பிரெஞ்சுப் பெண் மணம் முடிக்கிறார்”, “பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் இந்தியரை PUBG கேமிங்கில் சந்தித்து காதல்” என்கிற சமீபத்திய செய்திகள் “அன்பு காட்டவும் அன்பு காட்டப்படவும் மனிதர்களாக இருந்தால் மட்டுமே போதும்” என்று நிரூபித்து கொண்டிருக்கின்றன. அப்படி கடல் கடந்து எல்லைகளைக் கடந்த ஒரு காதல் கதை உத்தரப் பிரதேசத்திலும் நடந்துள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இளம் பெண் கிம் போ நீ (Kim Boh-nee). உத்தரப் பிரதேசம் மாநிலம் உத்னா கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்ஜித் சிங்.  நான்கு ஆண்டுகளுக்கு முன் சுக்ஜித் சிங், வேலைக்காக தென் கொரியாவிற்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு ஒரு காபி ஷாப்பில் வேலை கிடைத்திருக்கிறது. கிம் போ நீ-யும் அந்த காபி ஷாப்பில் பணிப்புரிந்திருக்கிறார். கிம் போ நீ - சுக்ஜித் சிங் ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகிய இருவரும் பிறகு காதலிக்க  ஆரம்பித்திருக்கின்றனர். ஆறு மாதங்கள் மட்டுமே அங்கு பணிபுரிந்த சுக்ஜித் சிங் சூழ்நிலை காரணமாக இந்தியா திரும்பி இருக்கிறார். பிரிவால் வாடிய கிம் போ நீ  சுக்ஜித் சிங்கைத் திருமணம்  செய்துகொள்ள முடிவு செய்து நண்பரின் உதவியுடன் மூன்று மாதக்கால சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருக்கிறார். பின் இருவரும் சீக்கிய மரபுப்படி உத்தரப் பிரதேசத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். சுக்ஜித் சிங்கின் குடும்ப உறுப்பினர்களும் வெளிநாட்டுப் பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.கிம் போ நீ - சுக்ஜித் சிங் தான் இந்திய மரபுகளை விரும்புவதாகவும் கிம் போ-நீ தெரிவித்திருக்கிறார். தென்கொரியாவைச் சேர்ந்த இந்த இளம் பெண் தன் காதலுக்காக இந்தியா வந்த சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.   
http://dlvr.it/StxgT6

Sunday, 20 August 2023

கன்டோன்மென்ட் பல்லாவரம் ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்!

சென்னை கன்டோன்மென்ட் பல்லாவரம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாரியம்மன் கோவில் வீதியிலுள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் ஆலயத்தின் நூதன ராஜகோபுர ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடத்த முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை (ஆக.18) யாகசாலை பூஜை தொடங்கியது. அடுத்தடுத்த நாள் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் ஆகுதிகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு யாத்ராதானமும் மகா பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கும்பம் புறப்பாடு நடைபெற்று; நூதன ராஜகோபுர விமான கலசம் மற்றும் சர்வசக்தி ஸ்ரீ தண்டுமாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.  தொடர்ந்து மகா அபிஷேகமும் மாலையில் அம்மன் திருவீதிவுலாவும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை கிராம நாட்டாண்மை, ஆலய நிர்வாகிகள், கட்டத் திருப்பணிக் குழுவினர் மற்றும் கும்பாபிஷேக விழாக் குழுவினர் செய்தனர்.  

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/qa1xlsp https://ift.tt/C56DSNP
via IFTTT

Thursday, 17 August 2023

SMA Medicine: சீனா, பாகிஸ்தானை விட 15 மடங்கு விலை - இந்தியர்களை வஞ்சிக்கிறதா Roche மருந்து நிறுவனம்?

Spinal Muscular Atrophy எனப்படுவது அரிதான ஒரு வகை முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோய். மரபணுக் குறைபாடு காரணமாக இந்த நோய் வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 3,200 குழந்தைகள் இந்தக் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். இதில் நான்கு வகைகள் உள்ளன. குழந்தை இரண்டு வயது தாண்டுவதற்குள் மரபணு மாற்று சிகிச்சை ஒன்றைத் தருவதன் மூலம் இதை சரிசெய்ய முடியும். ஆனால், அதற்கு சுமார் 15 கோடி ரூபாய் வரை செலவாகும். Zolgensma என்ற இந்த மருந்துதான் நவீன மருத்துவம் கண்டறிந்த மருந்துகளில் மிக விலை அதிகமானது.Spinal Muscular Atrophy (SMA) இதைத் தாண்டி, எல்லா வகை Spinal Muscular Atrophy பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும் வகையில் Evrysdi (Risdiplam) என்ற மருந்தைக் கண்டறிந்தது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Roche மருந்து நிறுவனம். இந்த மருந்தை 2 மாதம் தாண்டிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம். இந்தப் பாதிப்பு உள்ள ஒருவர், தன் வாழ்நாள் முழுக்க இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மருந்தினை அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானைவிட இந்தியாவில் இந்த நிறுவனம் அதிக விலைக்கு விற்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஒரு பாட்டில் Evrysdi மருந்தின் விலை இந்தியாவில் 6.2 லட்சம் ரூபாய். அதே சீனாவில் 44,692 ரூபாய்க்கும், பாகிஸ்தானில் 41,002 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கு விசாரணையில் இந்த அதிர்ச்சி தரும் உண்மை வெளிவந்துள்ளது.இந்த மருந்தை ஒரு நோயாளி வாழ்நாள் முழுக்க சாப்பிட வேண்டும். உதாரணமாக, 20 கிலோவுக்கு மேல் உடல் எடையுள்ள ஒரு நோயாளிக்கு, ஆண்டுக்கு 36 பாட்டில் மருந்து தேவைப்படலாம். உடல் எடை மற்றும் வயதைப் பொருத்து ஒவ்வொரு நோயாளிக்கும் ஆண்டுதோறும் 22 லட்ச ரூபாய் முதல் 72 லட்ச ரூபாய் வரை செலவு பிடிக்கும் என்பதால், இந்த மருந்தின் விலையை இந்தியாவிலும் குறைக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளனர். Evrysdi மருந்து நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு 2020 ஆகஸ்ட்டில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் அனுமதியைப் பெற்றது. உடனடியாக 50 நாடுகளில் விற்பனைக்கு வந்தது. அமெரிக்காவில் விற்பனை அனுமதி பெற்ற 11 மாதங்களில் இந்தியாவிலும் இது அங்கீகரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. இருமல் சிரப் போல இதைக் குடிக்க வேண்டும். 2021 ஜூலையில் இதன் விலை, பாட்டிலுக்கு ஆறு லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது நோயாளிகளுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன.Evrysdi (Risdiplam) இந்த மருந்து வேண்டி பதிவு செய்துகொள்ளும் ஒரு நோயாளிக்கு Roche நிறுவனமே வீடு தேடிச் சென்று மருந்தை வழங்கும். டெலிவரி இலவசம். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நோயாளிக்கும், இரண்டு பாட்டில்கள் வாங்கினால் மூன்று பாட்டில்கள் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாம் ஆண்டிலிருந்து ஒரு பாட்டில் வாங்கினால், இரண்டு பாட்டில்கள் இலவசமாகக் கிடைக்கும். இந்த இலவசங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலுமே, இந்தியாவில் இதன் விலை மிக அதிகம். Cure SMA Foundation என்பது, முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இணைந்து உருவாக்கிய ஓர் அறக்கட்டளை. இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயமான கட்டணத்தில் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக சில கோரிக்கைகளை வைத்து இந்த அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இதற்காக மற்ற நாடுகளில் இந்த மருந்தின் விலை விவரங்களைத் திரட்டியபோதுதான், இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்படும் உண்மை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. சீனாவில் அரசே Roche நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிறப்பு விலையை நிர்ணயம் செய்துள்ளது, பாகிஸ்தானிலும் இதுவே நடந்திருக்கிறது.என்பது நீதிமன்றத்தில் வைக்கப்படும் கோரிக்கை."அண்டை நாடுகளில் இந்த விலைக்குத் தர முடிகிறபோது, இந்திய நோயாளிகளுக்கும் அதேபோன்ற விலையில் தர வேண்டும். அரிதான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் சிகிச்சை மற்றும் மருத்துவத் தேவைகளை ஆராய்வதற்காக National Rare Disease Committee என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. அந்த அமைப்பு Roche நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி விலையைக் குறைக்க வேண்டும்!"Roche Towerஇந்தக் கோரிக்கையில் எல்லா நியாயங்களும் உள்ளன. சீனாவுக்குக் குறைந்த விலையில் ஒரு மருந்தைத் தருகிறபோது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விலையை இந்தியர்களுக்கு நிர்ணயிக்கக்கூடாது அல்லவா? Roche நிறுவனமோ இதற்கு வேறுவிதமான சமாதானங்கள் சொல்கிறது. "இந்தியாவில் நாங்கள் சிறப்புத் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறோம். தொடர்ச்சியாக மருந்து வாங்கும் நோயாளிகளுக்கு சலுகையாக இலவச பாட்டில்கள் வழங்குகிறோம். இதுதவிர, மனிதாபிமான அடிப்படையில் எளிய குடும்பங்களைச் சேர்ந்த 300 நோயாளிகளுக்கு தொடர்ந்து இலவசமாக இந்த மருந்தை வழங்கிவருகிறோம்" என்கிறது அந்த நிறுவனம்.இந்த மருந்தை ஆயுள் முழுக்க சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயாளிகள், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
http://dlvr.it/StpWdG

அமெரிக்கா: தலையில் துப்பாக்கியால் சுட்ட 9 வயது சிறுவன்... பரிதாபமாக பலியான 6 வயது சிறுவன்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கும் ஜாக்சன்வில்லிப் பகுதியில், 9 வயது சிறுவனால், 6 வயது சிறுவன் ஒருவன் சுடப்பட்டதாகக் காவல்துறைக்குத் தகவலளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு மயக்க நிலையில் கிடந்த 6 வயது சிறுவனை மீட்டனர். அதைத் தொடர்ந்து, சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அமெரிக்கா ஆனால் அங்கு சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், முதற்கட்ட விசாரணை தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.வேலியே பயிரை மேயலாமா? அருவியில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட காவல்துறை அதிகாரி சிறையில் அடைப்பு! அப்போது, ``அந்த வீட்டில் 9 வயது சிறுவனும், 6 வயது சிறுவனும் விளையாடிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதுதான் அந்த 9 வயது சிறுவன், 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் இது தவறுதலாக, எதிர்பாராதவிதமாக நடந்த சம்பவமாக நாங்கள் கருதுகிறோம். ஏனெனெனில் உள்நோக்கத்துடன் இந்தச் சம்பவத்தை அந்தச் சிறுவன் செய்யவில்லை. இருப்பினும், தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம். சுடப்பட்ட சிறுவன், துரதிஷ்டவசமாக இறந்துவிட்டான். அந்தத் துப்பாக்கி யாருடையது... அது எப்படி அந்தச் சிறுவனுக்குக் கிடைத்தது. இரு சிறுவர்கள் அங்கு என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றெல்லாம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர். சமீபகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. தி நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, கொரோனா காலமான 2022-ல் 531 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.மனைவியை சுட்டுக் கொன்ற நீதிபதி: சோதனையில் 47 துப்பாக்கிகள், 26,000 தோட்டாக்கள்- பரபரப்பில் அமெரிக்கா
http://dlvr.it/Stnl5r

பிறந்தநாள் எண்களில் 7 ஆண்டுகளாக லாட்டரி வாங்கியவருக்கு அடித்தது ஜாக்பாட்..!

தன்னுடைய குடும்பத்தினரின் பிறந்த நாள் எண்களில் தொடர்ந்து ஏழு வருடங்களாக லாட்டரி வாங்கி வந்தவருக்கு ஜாக் பாட் அடித்திருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த பால் காடில் (Paul Caudill) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற `லக்கி ஃபார் லைப்' (Lucky For Life) என்ற போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பரிசுத் தொகையாக வாழ்நாள் முழுவதும் வருடத்திற்கு 25,000 அமெரிக்க டாலர்கள் கிடைத்திருக்கிறது.lottery (Representational Image)ஐ.டி.சி பங்குகளை இப்போது வாங்கலாமா? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்... என்ன? இது குறித்து `North Carolina Education Lottery' தெரிவிக்கையில், கெர்னர்ஸ்வில்லில் உள்ள வெஸ்ட் மவுண்டன் தெருவில் தனது அதிர்ஷ்டமான 2 அமெரிக்க டாலர் டிக்கெட்டை காடில் வாங்கினார். அவர் வெள்ளிக்கிழமை ஐந்து வெள்ளை பந்துகளையும் பொருத்தி வரைந்து தனது பரிசை வென்றார். காடில் திங்கட்கிழமை தனது பரிசைக் கோரினார். அவரது வாழ்நாள் முழுவதும் ஆண்டுக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 20,77,962) அல்லது மொத்தத் தொகையாக 3,90,000 அமெரிக்க டாலர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. 3,90,000 அமெரிக்க டாலர்கள் என மொத்தத் தொகையைத் தேர்ந்தெடுத்தார். தேவையான வரி பிடித்தங்களுக்குப் பிறகு, 2,77,879 அமெரிக்க டாலர்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.dolar11 துப்புரவுப் பணியாளர்கள் சேர்ந்து வாங்கிய லாட்டரி... ரூ.10 கோடி பரிசு! என்ன செய்தார்கள் தெரியுமா? அவரின் சமீபத்திய ஓய்வுக்குப் பிறகு, காடில் தனது பரிசு தொகையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்’’ என்று தெரிவித்துள்ளது. ``ஆட்டம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இதே எண்களைக் கொண்டு விளையாடி வருகிறேன். இந்த எண்கள் அனைத்தும் எனது குடும்பத்தில் உள்ளவர்களின் பிறந்தநாள் எண்களாகும். பரிசுத்தொகை விழுந்ததில் முதலில் ஒரு பிழை இருக்க வேண்டும் என்றே நினைத்தேன். இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. தற்போது மகிழ்ச்சியாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளார் காடில்.
http://dlvr.it/StmtV0

Wednesday, 16 August 2023

ஆக. 20-ல் கன்டோன்மென்ட் பல்லாவரம் ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்!

  சென்னை கன்டோன்மென்ட் பல்லாவரம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வரும் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மாரியம்மன் கோவில் வீதியிலுள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் ஆலயத்தின் நூதன ராஜகோபுர ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிறு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை கிராம நாட்டாண்மை, ஆலய நிர்வாகிகள், கட்டத் திருப்பணிக் குழுவினர் மற்றும் கும்பாபிஷேக விழாக் குழுவினர் செய்துவருகின்றனர். படிக்க: முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு! கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகின்றன. சனிக்கிழமை இரண்டாம் நாள் பூஜைகளைத் தொடர்ந்து, மூன்றாம் நாள் ஞாயிறு காலை 6 மணிக்குத் தொடங்கி கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் ஆகுதிகளும் நடைபெறுகின்றன. காலை 9 மணிக்கு யாத்ராதானமும் மகா பூர்ணாஹுதி, தீபாராதனையுடன் கும்பம் புறப்பாடு நடைபெறும்; 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நூதன ராஜகோபுர விமான கலசம் மற்றும் சர்வசக்தி ஸ்ரீ தண்டுமாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகா அபிஷேகமும் மாலையில் அம்மன் திருவீதிவுலாவும் நடைபெறும்.

from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/oFeYcsx https://ift.tt/8OvqRsk
via IFTTT