ஜப்பானின் H3 ராக்கெட் விண்ணில் செலுத்திய பிறகு தோல்வியடைந்தது. இதன் காரணமாக ஜப்பானின் விண்வெளி நிலையம் இதை அழிப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறது.
அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்திலிருந்த அவசரக்கால கதவைத் திறக்க முயன்றிருக்கிறார். இதைத் தடுத்த, விமான ஊழியர்களைக் கத்தியால் குத்தியதால், அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
ஸ்பெயினில் 1.7 மில்லியன் மதிப்பிலான 45 ஒயின் பாட்டில்களை நட்சத்திர விடுதியிலிருந்து கடத்திய தம்பதி கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அத்துமீறி நுழைந்து திருடிய குற்றத்துக்காக கணவருக்கு நான்கரை ஆண்டுகளும், மனைவிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
ஸ்பெயினில் பாலியல் சமத்துவத்தை முன்னெடுக்கும் வகையில், நிறுவனங்களில் இருக்கும் இயக்குநர் குழுமத்தில் 40 விழுக்காடு பெண்களை நியமிக்கச் சட்டம் இயற்றப்படுகிறது.
ஜப்பானில் பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்துவருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், ஜப்பான் காணாமல்போகும் நிலை ஏற்படக்கூடும் எனப் பிரதமரின் ஆலோசகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
பாகிஸ்தானில், பஞ்சாப் பல்கலைக்கழக வளாகத்தில் ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள்மீது சில இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் நடத்திய தாக்குதலில் 15 மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், பலரைத் தேடும்பணி நடைபெற்று வருகிறது.
எகிப்தில் தொல்லியல் ஆய்வுப் பகுதியில் முகத்தில் புன்னகையுடனும், கன்னக்குழியுடனும் Sphinx வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
பாகிஸ்தானில், கச்சி மாவட்டத்தில் காவல்துறையினர் பயணம் செய்த ட்ரக் மீது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் ஒன்பது காவலர்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிதானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அங்கிருக்கும் 25 சதவிகித பெண்கள் அவர்கள் செய்யும் வேலைகளை இழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://dlvr.it/SkXtwn
Wednesday, 8 March 2023
Home »
» ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள்மீது தாக்குதல் |ஜப்பானில் குறையும் பிறப்பு விகிதம் - உலகச் செய்திகள்







0 comments:
Post a Comment